இதோ ஒரு இலவசம்!
சீனாவில் ஒரு காலத்தில் இளைஞர்கள் பெண்ணாசையில் சிக்கி சீரழிந்து போனார்கள். அப்போது அங்குள்ள தலைவர்
ஒருவர்,""நாம் நம்முடைய வாலிபர்களுக்கு கற்றுக் கொடுக்க மறந்து போன ஒரு விஷயம் இருக்கிறது. அது தான் ஆன்மிக வாழ்க்கை. ஆன்மிக ரகசியங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றால், இப்படி ஒருநிலை இந்த நாட்டில் ஏற்பட்டிருக்காது. அந்த மெய்யான சந்தோஷம் பற்றி அறியாததால் தான் வாலிபர்கள் சிற்றின்ப வாழ்வில் ஈடுபாடு கொண்டுள்ளனர்,'' என்றார்.
இது சீனாவுக்கு மட்டுமல்ல, உலகத்திலுள்ள எந்த நாட்டில் ஒழுக்கம் கெட்டுப்போகிறதோ, அங்கெல்லாம் ஆன்மிகம் சரிந்து கொண்டிருக்கிறது எனப்பொருள். ஆன்மிக உணர்வு மிக்க நமது நாட்டில் கூட, தற்கால நாகரீகத்தால் இறையுணர்வை ஒரு பொருட்டாக மதிக்காமல், இளைஞர்கள் தறிகெட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இயேசுகிறிஸ்து தம் தெய்வீக பிரசன்னத்தை தந்து நம்மை தம்முடைய ஆவியினால் நிரப்ப ஆவலாய் இருக்கிறார். பேரின்ப நதியைக் கொடுத்து தாகம் தீர்க்க நம்மை அன்போடு அழைக்கிறார்.
""தாகமாய் இருக்கிறவன் என்னிடத்தில் வரக்கடவன் என்று அவர் சத்தமிட்டு சொல்லுகிறதைக் கேளுங் கள் (யோவான்7:37, ஏசா.55:1) அவர் கொடுக்கும் தண்ணீர் ஜீவத்தண்ணீர் (யோவான்4:14). அவர் கொடுக்கும் அபிஷேகம் ஜீவநதி (யோவான்7:38). வேதத்தின் கடைசி அத்தியாயத்தில் கடைசி பக்கத்தில் கூட, ""தாகமாய் இருக்கிறவன் வரக் கடவன். விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக் கடவன்,'' என்று கர்த்தர் அழைத்திருக்கிறார் (வெளி.22:17) அவர் தரும் இலவசத்தைப் பெற்று ஆன்மிகத்தைப் பேணுவோமே!

intha seithi unmaiyil nallthu. ithai ariyamaiyil irukkiravargalukkaga jebikkathaan vendum
பதிலளிநீக்கு