Tamil christian song ,video songs ,message ,and more

கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜூன், 2015

பாசமாய் இருப்போமே!


ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஏமி கார் மைக்கேல் அம்மையார். இவர் தென்னிந்தியாவிற்கு வந்து கிறிஸ்தவ ஊழியம் செய்து மரித்தார்.
கடைசி நாட்களில் ஜனங்கள் சுகபோக பிரியராக இருப்பார்கள். விசுவாசிகளாகிய நாம் இப்படிப் பட்டவர்களை விட்டு விலகி ஜீவிக்க வேண்டும்.நரக பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் போது, நீயோ சுகபோகமாய் வாழ விரும்புகிறாயே!'' என்று கேட்க, அம்மையார் தன் இருதயம் முழுவதையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்.
இந்த தரிசனம் மூலம் உணர்வடைந்த அம்மையார் தென்தமிழகம் வந்து ஆண்டவருக்குத் தொண்டாற்றினார்கள். மற்றவர்களின் கஷ்டம் பற்றி மக்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் தங்கள் சுகத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். இந்த நிலையை பைபிள் வசனங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இதோ! அந்த வசனங்கள்.
ஒருசமயம் அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது.

சுற்றுலாக்குழு ஒன்றுடன் சேர்ந்து, அவர் ஒரு பூங்காவில் குதூகலமாக கிறிஸ்தவப் பாடல்களைப் பாடிக் கொண்டும், பொட்டலங்களைப் பிரித்து ஒருவருக்கொருவர் உணவுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டும் இருந்தார். அந்தக்குழுவினர் தங்கியிருந்த இடத்திலிருந்து, சற்று தொலைவில் ஒரு குன்று இருந்தது.

அந்த குன்றின் மேல், பார்வையற்ற பலர் வரிசையாக ஏறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு ஏறியவர்களில் முதல் நபர், ஒரு செங்குத்தான பாறையில் கால் வைக்க தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களும், இவ்வாறே ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து மடிந்து கொண்டிருந்தனர்.

தன் கண் முன்பாக நடந்து கொண்டிருந்த இந்தக் கோரக் காட்சியைக் கண்ட அம்மையார் அதிர்ந்தார். ஆனால், அதிக இடைவெளி இருந்ததால், அவரால் அங்குள்ள ஆபத்து பற்றி சொல்லி அந்த பார்வையற்றவர்களைத் தடுக்க முடியவில்லை. அம்மையாருடன் வந்த சுற்றுலாக்குழுவினரோ, இதுபற்றி கவலைப்படாமல், தங்களுக்குள் பேசிக் கொண்டு பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, இயேசுகிறிஸ்து, ஏமி கார்மைக்கேல் அம்மையாரை நோக்கி, ""எண்ணற்றவர்கள்

* கடைசி நாட்களில் ஜனங்கள் சுகபோக பிரியராக இருப்பார்கள். விசுவாசிகளாகிய நாம் இப்படிப் பட்டவர்களை விட்டு விலகி ஜீவிக்க வேண்டும். (2 தீமோ 3: 4)

* சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்''(1 தீமோ5:4).
* ""மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். (நீதி1:32)
* சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கு ஐயோ,''. (அமோ.6:1)
சுயநலம், சுகபோகம், நிர்விசாரம், பெருமை, ஆடம்பரம் போன்றவற்றை தேவன் எதிர்த்து நிற்கிறார். சுயநல வெறி மனிதர்களுக்கு இருக்கக் கூடாது. மற்ற ஜனங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். வறுமையில் துவண்டு போனவர்களுக்கும், பணமிருந்தும் நிம்மதியற்றவர்களுக்கும் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்து நேசக்கரம் நீட்ட வேண்டும்.

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஆண்டவரின் அன்பை பெறுவோம்!


* கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. "கடவுளை மிஞ்சி சாதிப்பேன்' என்றும் அது சவால் விடுகிறது. ஆனால், பைபிள் இதுபற்றி என்ன சொல்கிறது. கேட்டு பார்ப்போமே!
* மனுப்புத்திரனே! ஒரு தேசம் எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக் கொண்டேயிருந்து, பாவம் செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்.

* சகல மனுஷரே! கேளுங்கள். நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டுவிட்டீர்களேயாகில், அவர் <உங்களை விட்டுவிடுவார்
* நீ என்னை விட்டு பின் வாங்கிப் போனாய். ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன். நான் பொறுத்து பொறுத்து இளைத்து போனேன்.


* மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாகக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்கிறார்.
* எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறதென்றும் நாங்கள் ராஜாவுக்கு சொல்லியிருந்தோம்.
புரிந்து கொண்டீர்களா! ஆண்டவரின் அன்பைப் பெற நினைத்தால், அவரை அன்றாடம் ஜெபியுங்கள். அவரது ஆசிக்கரம் உங்களை நோக்கி நீளும்.

வியாழன், 16 ஏப்ரல், 2015

உத்தமனாய் வாழ்வோம்!



இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார்.
ஒரு உவமைக் கதையில், ""ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, தோட்டக்காரர்களுக்கு அதை குத்தகையாக விட்டு வெளிநாட்டிற்குப் போயிருந்தார்,'' என்று சொல்கிறார்.



ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்த போது மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு மலைகளையும், சமுத்திரங்களையும், ஆறுகளையும், அதில் பல்வேறு உயிரினங்களையும், பறவைகள், விலங்குகள் அனைத்தையும் படைத்தார். ஒவ்வொன்றுக்கும் தன் நிலையில் இருக்கும்படி அவற்றிற்கு எல்லையும் உண்டாக்கினார். மலையில் வாழும் உயிரினங்கள் பாலை வனத்திற்கும், பாலைவனத்தில் வாழ்பவை மலைக்கும் செல்வதில்லை.

அதுபோல, ஆற்றுமீன்கள் கடலிலோ, கடல்மீன்கள் ஆற்றிலோ ஜீவிப்பதில்லை. ஆனால், மனிதன் மட்டும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடிஇருக்க, விவசாயம், தொழில்கள் செய்து ஜீவிக்க இயற்கையாகவே கடவுள் வேலியடைத்து, நம்மிடத்தில் விட்டிருக்கிறார். நாம் எப்படி இருக்கிறோம்? இந்த உலகில் வாழ்வதற்காக குத்தகைதாரராக வந்திருக்கிறோம். உலகில் இருந்து எதையும் நம்மால் எடுத்துச் செல்ல முடியாது.

கடவுள் இந்த உலகைச் செம்மைப்படுத்த அநேக தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் அனுப்பினார். வந்தவர்கள் அனைவரையும், வாழ்ந்தவர்கள் அடித்துக் கொன்று விட்டு நிமிர்ந்து கொண்டார்கள். நல்லவர்களால் திருத்த முடியாத போது, ""கடவுள் தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசுவைத் தந்தருளி, என் குமாரனுக்காகவாவது அவர்கள் அஞ்சுவார்கள் என்று அனுப்பினார். ஆனால் நடந்தது என்ன? அவரையும் சிலுவையில் அறைந்து விட்டனர்.

வேதம் இவ்வாறு சொல்கிறது,""திராட்சை தோட்டத்து எஜமான் .... அந்த கொடியரை கொடுமையாய் அழித்து (மத்தேயு 21:40,41) வேறு ஒருவனுக்கு திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பார் என்றார்''.
நம்மால் இந்த உலகத்தின் இயற்கை வளத்தை காப்பாற்ற முடியாமல் போனால், நம் இடம் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும். வேறு சந்ததிக்கு இந்த உலகத்தை ஆண்டவர் கொடுத்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, உத்தமமான மனிதனாக உலகத்தை அதன் இயற்கை வளத்தைப் பாதுகாத்து வருங்கால சந்ததி வளமோடு வாழ துணை நிற்போம்.

சனி, 11 ஏப்ரல், 2015

சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி! -சாலமோன்

இஸ்ரவேல்' (இஸ்ரேல்) தேசத்தை ஆண்ட மூன்றாவது ராஜா சாலமோன். ஞானியாகவும், ரசனை மிக்கவராகவும் இருந்தார்.
இவருக்கு, ஜெருசலேமிற்கு வடக்கே இருந்த எப்ராயீம் மலையில், ஒரு சிறிய திராட்சைத் தோட்டம் இருந்தது. அதை ஒரு குடும்பத்துக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். அந்தக் குடும்பத்தின் மூத்த மகள் "சூலமித்தி'. மிகவும் அழகானவள்.



சூலமித்தியாளின் சகோதரர்கள் அவள் அழகாக இருக்கிறாளே என்று அவள் மேல் பொறாமை கொண்டு, சாலமோனின் திராட்சைத் தோட்டத்தை பகலில் காவல் காக்கும் வேலையை அவளிடம் கொடுத்தனர். வெயிலில் வேலை செய்தால் அவள் கருத்துப் போவாள் என்பது அவர்களது திட்டம். ஆனால், அவ்வாறு வேலை செய்த நிலையிலும் கூட, அவளுடைய கண்கள் புறாக்களின் கண்களைப் போல சாந்தமாக இருந்தன. கூந்தல் சுருண்டு அழகாக இருந்தது. பற்கள் வெண்மையாய் ஒளிர்ந்தன. தோட்டத்திலுள்ள லீலி புஷ்பம் போலவும், அழகான நீருற்றைப் போலவும் இருந்தாள்.
நிறம் கருத்தாலும், அவள் தன் வேலையை விடவில்லை. அந்த திராட்சைத் தோட்டத்தை நாசம் செய்கிற குள்ள நரிகளையும், சிறுநரிகளையும் பிடித்தாள்.
சிரமப்பட்டு தோட்டத்தைக் காத்தாள்.

இந்தநிலையில் ஒரு வசனத்தைக் கேளுங்கள்.
""உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதுக்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதுக்கும், நொறுங்குண்டு பணிந்த
ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்''. ஏசாயா 57:15.
இதன் பொருள் என்ன தெரியுமா?

""யாரொருவர் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் ஏற்று, அவரது கடமையைச் செய்கிறாரோ, அவர்களின் அருகில் ஆண்டவர் இருப்பார்'' என்பது தான்.
இந்த வசனத்திற்கேற்ப, ராஜா சாலமோன், ஒருநாள் திராட்சைத் தோட்டத்திற்கு வந்து சூலமித்தியாளைச் சந்தித்தார். அனைத்து வேலைகளையும் உற்சாகமாகச் செய்யும் அந்தப் பெண்ணைப் பார்த்தார். மற்றவர்களின் வஞ்சகப்பேச்சாலும், செய்கைகளாலும் நொறுங்கிப் போன இருதயத்தைக் கொண்டிருந்த அப்பெண்ணுக்கு அரண்மனையில் உயர்ந்த பதவி தர முடிவெடுத்தார்.

ஆம்...அவளது பொறுப்பான வேலை, அவள் உயர்பதவிக்கு செல்ல வழி வகுத்தது.
இவ்வுலகில் நாம் கடவுளின் பிள்ளைகளாக, உண்மையாக, உற்சாகமாக வேலைகளைச் செய்வோம். தாழ்மையாகப் பணிபுரிந்து, நொறுங்குண்ட இருதயத்தோடு, பணிந்த ஆவியுள்ளவர்களாக இருக்கும்போது, நம்மைப் படைத்த ஆண்டவர் நம்மிடத்தில் வாசம் பண்ணுகிறேன் என்று வருகிறார். இதை விட பேரானந்தம் இந்த உலகில் வேறு எது இருக்க முடியும்? 

சனி, 4 ஏப்ரல், 2015

கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்



உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 1: 18-19

ஒரு நாள் ஒரு போதகர் ஒரு பறவை கூண்டை கையில் எடுத்து கொண்டு வந்து, பிரசங்க பீடத்தண்டை வைத்தார். சபையார் எல்லாரும் எதற்கு அதை அங்கு கொண்டு வந்தார் என்று அவரையே நோக்கி கொண்டிருந்தார்கள். போதகர் பேச ஆரம்பித்தார். அவர் நேற்றைய தினம் வெளியே நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் ஒரு பறவை கூண்டையும் அதில் மூன்று பறவைகளையும் பிடித்து கொண்டு நடந்து கொண்டிருப்பதை கண்டார். அதை பின்வருமாறு கூற ஆரம்பித்தார்:

'அந்த சிறுவனிடம், 'மகனே, நீ என்ன கையில் வைத்திருக்கிறாய்?' என்று கேட்டேன், அதற்கு அந்த சிறுவன், 'மூன்று வயதான பறவைகளை இந்த கூண்டில் வைத்திருக்கிறேன்' என்றான். அதற்கு நான் 'இதை கொண்டு பொய் என்ன செய்ய போகிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவன், 'அவைகளை கொண்டு நான் என் பொழுதை செலவழிப்பேன், அவைகளின் இறக்கையை பிடுங்குவேன், ஒன்றோடொன்று சண்டையிட வைப்பேன்' என்றான். அதற்கு நான், 'சரி எத்தனை நேரம் அதை செய்து கொண்டிருப்பாய், உனக்கு போர் அடித்த பின் அதை என்ன செய்வாய்?' என்று கேட்டதற்கு அவன், 'எனக்கு சில பூனைகளை தெரியும், அவைகளிடம் கொண்டு போய் விடுவேன், அவைகள் இவைகளை சாப்பிட்டு விடும்' என்றான். அப்போது நான், 'மகனே இதை நான் வாங்கி கொள்ள வேண்டுமானால், உனக்கு எவ்வளவு காசு தர வேண்டும்'

என்று கேட்டேன், அதற்கு அவன், 'சே, இந்த பழைய, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத பறவைகளை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்' என்று கேட்டான், அதற்கு நான் 'நீ எவ்வளவு என்று சொல்' என்று கேட்டேன். அவன் '50 ரூபாய்கள்' என்றவுடன், நான் கொடுத்து வாங்கி வந்து, இன்று வெளியே காணப்படும் மரத்தில் விடுதலையாக பறக்க விட்டேன், அவை இருந்த கூண்டு தான் இது' என்று விளக்கினார்.

பின்னர், பின்வரும் காரியத்தையும் கூற ஆரம்பித்தார்: ஒரு நாள் இயேசு கிறிஸ்துவும் பிசாசும் பேச ஆரம்பித்தார்கள். பிசாசு அப்போது தான் உலகத்திலிருந்து வந்திருந்தான். மிகவும் தெம்பொடும் பெருமையோடும் அவன் இருந்தான், இயேசுகிறிஸ்துவை பார்த்தவுடன், அவன் 'ஐயா, பார்த்தீர்களா, என்னிடம் எத்தனை பேர் மாட்டி கொண்டிருக்கிறார்கள் என்பதை? நான் ஒரு சிறு பொறியைதான் வைத்தேன், அதிலே மாட்டி கொண்டவர்கள் எத்தனை பேர் பாரும்' என்று பெருமையோடு பேசினான். அதற்கு இயேசுகிறிஸ்து, 'நீ அவர்களை வைத்து என்ன செய்ய போகிறாய்?' என்று கேட்டார். 'ஹா! என்ன செய்ய போகிறேன் தெரியுமா? அவர்களுக்கு திருமணம் செய்ய போதித்து, அவர்களை விவாகரத்து செய்ய வைப்பேன்,

ஒருவரையொருவர் பட்சித்து, சண்டையிட்டு வாழ்வை சீர்குலைப்பேன், அவர்களை எல்லாவித பாவங்களிலும் விழ வைத்;து, கடைசியில் எரிகிற அக்கினி கடலில் என்னோடு கூட எப்போதும் இருக்க வைக்க போகிறேன்' என்று சொல்லி பயங்கரமாக சிரித்தான். அப்போது இயேசுகிறிஸ்து 'எத்தனை கிரயம் கொடுத்தால் எனக்கு கொடுக்க விரும்புவாய்?' என்று கேட்க, அவன், 'இந்த ஜனம் மிகவும் மோசமானவர்கள், நல்லவர்களே இல்லை, உம்மை ஏற்று கொள்ளவே மாட்டார்கள், உம்மை அடிப்பார்கள், உம்மை துன்புறுத்துவார்கள், உம்மை சிலுவையில் அறைவார்கள், பாடுகளை சகிக்க வைப்பார்கள், இவர்களையா நீர் கிரயம் கொடுத்து வாங்க போகிறீர்?' என்று கேட்டான், அதற்கு இயேசு, 'நீ விலைக்கிரயம் மாத்திரம் சொல்' என்று உறுதியுடன் கேட்க அவன், 'உம்முடைய எல்லா கண்ணீரும், எல்லா இரத்தமும்' என்றான்.

இயேசுகிறிஸ்து அதை கிரயமாக அவனுக்கு கொடுத்து, நம்மை அவனிடமிருந்து மீட்டார்.
'உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே என்று வசனம் நமக்கு போதிக்கிறது. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே' -(1 கொரிந்தியர் 6:20) என்று வேதம் நமக்கு சொல்கிறது. எந்த கிரயம்? இயேசுகிறிஸ்துவின் மாசில்லாத குற்றமில்லாத, விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டிருக்கிறோம்.
இயேசுகிறிஸ்து நம்மை விலைக்கிரயம் கொடுத்து வாங்கி விட்டபடியால், நாம் பிசாசிற்கு இனி அடிமைகளில்லை. அவன் நம்மை அவன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்க முடியாது. நம்மை பாவத்திற்கு இழுக்க முடியாது. அப்படி அவன் இழுத்து நம்மை பாவத்திற்கு தூண்டும்போது நாம் விழுந்து போவோமானால், நம்மை மீட்டு கொண்ட கிறிஸ்துவுக்கு நாம் எப்படி நன்றியோடு இருக்க முடியும்? நாம் எப்படி வருங் கோபத்திற்கு தப்பித்து கொள்ள முடியும்? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்

(1கொரிந்தியர் 6:11). அப்படி பரிசுத்தமாக்கப்பட்ட உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (வசனம் 19-20). அந்தப்படி நாம் வாழ்ந்து, பிசாசிற்கு எதிர்த்து நின்று கர்த்தருக்கு மகிமையாய் ஜீவிக்க தேவன் தாமே ஒவ்வொருவரையும் பலப்படுத்துவாராக!

விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வரும் எங்கள் நல்ல தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் மாசற்ற விலையேறப்பெற்ற திரு இரத்தத்தினால் எங்களை உமக்கென்று மீட்டு கொண்டீரே உமக்கு நன்றி. அந்த இரத்தத்தினால் நாங்கள் சாத்தானை ஜெயிக்கவும், வெற்றி மேல் வெற்றி எடுக்கவும், நீர் பாராட்டுகிற கிருபைக்காக நன்றி. பிசாசானவன் எங்களை பாவத்திற்கு அடிமைகளாக்காதபடி, எங்களை பெலவானாய் மாற்றுகிற கிறிஸ்துவின் இரத்தத்திற்காக நன்றி. சோர்ந்து போய், பிசாசின் தந்திரங்களுக்கு இடம் கொடுத்து, பாவத்தில் விழுந்து போன ஒவ்வொரு விசுவாசியையும் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால், பிசாசின் மேல் வெற்றி எடுக்கிறவர்களாகவும் சாத்தானை ஜெயிக்கிறவர்களாகவும் மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

அம்மாவின் சாதனை!



சிலகுழந்தைகள் நல்லவர்களாக வளரலாம். ஒரு சிலர் இளமையிலேயே கெட்டுப் போகிறார்கள். இது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது. ஜோசப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள்.
ஜோசப்பின் தாய் அவரை நல்ல முறையில் வளர்க்க கடும் முயற்சி மேற்கொண்டார். 17 வயது வரை எப்படியோ தாக்குப் பிடித்த அந்தத்தாய், கல்லூரியில் அவரை சேர்த்த பிறகு, திணற ஆரம்பித்தார். கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் ஜோசப் குடிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் பணம் இல்லாமல் போகவே, ஒரு நண்பனிடம் தன்னிடமிருந்த பைபிளை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தில் குடித்தார். அவர் அடகு வைத்த பைபிளின் அட்டையில் சில வசனங்களை அந்த தாயார் குறித்து வைத்திருந்தார். தன்னுடைய மகன் பைபிளைப் புரட்டாவிட்டாலும், அட்டையின் மீதுள்ள வாழ்க்கைக்குப் பயன் தரும் வசனங்களையாவது படிப்பார் என்பது அந்தத்தாயின் நம்பிக்கை. ஆனால், மகன் திருந்தும் முன்பே அந்த தாய் காலமாகிவிட்டார்.

ஜோசப் எப்படியோ படித்து டாக்டராகி விட்டார். ஒருநாள் நோயாளி ஒருவர் அவரிடம் சிகிச்சைக்கு வந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை, எங்கோ பார்த்ததுபோல் ஜோசப்பிற்கு தோன்றியது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. கண் விழித்த அவர், "எனது பையிலிருக்கும் அந்த புத்தகத்தை சீக்கிரமாகக் கொண்டு வந்து தாருங்கள்!' என முனகினார்.

ஜோசப் புத்தகத்தை எடுக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அந்த நோயாளி இறந்திருந்தார். அவ்வளவு ஆவலுடன் அந்த நோயாளி எடுக்கச் சொன்ன புத்தகம் என்னவாக இருக்கும்? என ஜோசப் அதை உற்று நோக்கினார். புத்தகத்தின் அட்டையில் தனது தாயின் கையெழுத்து இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

அதில் பைபிள் வசனங்கள் சில எழுதப்பட்டிருந்தன. அது, தான் அடகு வைத்த பைபிள் என்பதும், இறந்து போனவர் தனது நண்பர் என்பதும் அவருக்குத் தெரியவந்தது. அந்த வசனங்களை அவர் அன்றுதான் வாசித்தார். குடிப்பழக்கத்தை மறந்தார். தன் தாயை நினைத்து கண்ணீர் வடித்தார். அவரைப் பாடாய்ப்படுத்தியதற்காக கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டார்.
கதறியழுதார்.பெற்றவர்களின் எண்ணங்களும் ஜெபமும் காலம் கடந்தாவது சாதிக்கவே செய்யும். அது நம்மைத் திருத்தும். நல்வாழ்வு வாழச் செய்யும்.

திங்கள், 30 மார்ச், 2015

மன்னிக்க மாட்டாய்! உன் மனமிரங்கி..!



நீங்கள் ஒருவரை மன்னிக்காத பொழுது இரண்டு நபருக்கு இங்கு தீங்கு செய்கிறீர்கள். ஒன்று உங்கள் எதிராளி. இன்னொருவர் நீங்கள் தான்.
மன்னியாமை குறித்து இயேசு ஒரு உவமைக்கதை சொன்னார்.
ஒரு பணியாளன், தனது முதலாளியிடம் பத்தாயிரம் தாலந்து கடனாக வாங்குகிறார். ஒருமுறை அவனை அழைத்து, வாங்கிய கடனைக் கொடுத்து தீர்க்கும் படி கட்டளையிடுகிறார். பணியாளனோ, அது விஷயத்தில் பொறுமையாய் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறான்.

அதைக் கேட்ட அவனுடைய முதலாளி, அவன் மீது மனமிரங்கி, அவனை மன்னித்து கடனை ரத்து செய்து விடுதலை பண்ணுகிறார். இந்த பணியாளனுக்கு ஒரு பணியாளன் இருந்தான். அவன் தன் முதலாளியிடம், நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தான். அதைத் திருப்பித்தரக் கேட்டான். அவன் தன்னால் தற்போது தர இயலாது என சொல்லவே, அவனது தொண்டையை நெரித்து காவலில் இட்டான்.

இதைக் கேள்விப்பட்ட முதலாளி, தன் பணியாளனின் மன்னிப்பை ரத்து செய்து, ""பொல்லா ஊழியக்காரனே! என்னை வேண்டிக் கொண்ட படியினால் நீ பட்ட கடனை முழுதையும் மன்னித்து விட்டேன். நான் உனக்கு இரங்கினது போல் நீயும் உன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமா!'' என்று சொல்லி அவன் மீது கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்கு கொடுத்து தீர்க்குமளவும்- உபாதிக்கிறவர்களிடத்தில் (தண்டனை கொடுப்பவர்களிடம்) அவனை ஒப்புக் கொடுத்தான்.

ஆகையால், நீங்கள் யாரையாவது மன்னியாதிருந்தால், உங்களுடைய மன்னிப்பு ரத்து ஆகும் வாய்ப்பு உள்ளது... ஆம்.... ஆமை குளத்தைக் கெடுக்கும். மன்னியாமை இருதயத்தைக் கெடுக்கும்.

பைபிள் சொல்வதைக் கேளுங்கள்.
* நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமல் போனால் என் பரமபிதாவும், உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.(மத்தேயு 6:37).
* மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். அப்போது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள். அத்துடன் விடுதலைப் பண்ணப்படுவீர்கள்.(லூக்கா 6:37)
பாபு.ஜெ.பீட்டர்

போகப்போக தெரியும் உன் நிலைமை என்ன புரியும்!



ஒருஅழுக்குத்துணி பேசுகிறது.
""முன்னொரு நாளில் நான் வண்ண வண்ணமாய் சிங்காரமாய் இருந்தேன். அவர்களின் கைகளில் நான் அழகிய துணியாக இருந்தேன். அவர்கள் என்னைக் கையிலெடுத்து என் அழகை ரசித்தனர். தங்கள் படுக்கை அறையில் எனக்கு சொகுசு இடம் அளித்தனர். முக்கியத்துவமும் பிரசித்தமும் அனுபவித்தேன். ஒருநாள் என்னைக் கிழே தள்ளி வெளியே எறிந்து விட்டனர்.
என்ன தவறு நிகழ்ந்தது? என்னை நேசித்து போற்றிய மக்கள் இவர்கள் தானே! எப்படி இவர்கள் என்னை இப்படி நடத்தலாம்? அதே முகங்கள்! அதே மக்கள்.
அப்பொழுது தான் குனிந்து என்னைப் பார்க்கத் துவங்கினேன்.

ஆம்..என் தோற்றம் முன்பிருந்தது போல் இல்லை. இடைவிடா உழைப்பினால் நைந்து போயிருந்தேன். எனது சேவையினால் பிரகாசம் இழந்திருந்தேன். இப்போது நான் கவர்ச்சியாய் இல்லை. ஒத்துக்கொள்ள விநோதமாகத்தான் இருந்தது. மக்கள் இப்போது என்னை விரும்பவுமில்லை, நேசிக்கவுமில்லை.

கடைத்தெருவில் கிடைத்த புதிய துணிகளை அவர்கள் பயன்படுத்தத் துவங்கினர். இந்தப் புதியவர்கள் உற்சாகமாகவும் இருந்தனர். என்னைப் போலவே முடிவடைவார்கள் என்ற எண்ணம் அவர்கள் இதயத்தில் உதிக்கவில்லை. நாள் போகப் போகத்தானே தெரியும்!''

இந்த அழுக்குத்துணியின் புலம்பல் போல மக்களும் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வயதாகி விட்டால் தள்ளி விடுவார்கள். ""இந்நாள் வரைக்கும் உலகத்தின் குப்பையைப் போலவும், எல்லாரும் துடைத்துப் போடுகிற அழுக்கைப் போலவுமானோம்,'' என்று பவுல் எழுதின போது, இப்படித்தான் உணர்ந்திருப்பார்.

தேவனோ நம்மை எப்போதும் உபயோகப்படுத்துகிறார். அழுக்குத்துணியை உதறித்தள்ளியது போல உன்னை இந்த உலகம் தள்ளி விட்டதா! திடன் கொள்ளுங்கள். இயேசுவையும் உலகம் அப்படித்தானே நடத்தியது. ஆனால், இயேசு உன்னை ஒரு போதும் கைவிடமாட்டார்.

அதற்கு நீ செய்ய வேண்டியது என்ன? தேவன் உனக்கு கட்டளையிட்டதைச் செய்யும்படியாக முன்னேறிச் செல். உன் உழைப்பு வீணாகாது. ஒவ்வொரு ஜெபமும், ஒவ்வொரு போராட்டமும், நீ கொடுத்த ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு கலசம் தண்ணீரும் ஒவ்வொன்றும் கணக்கிடப்பட்டு பதிவாகி விட்டது.
தேவன் உன்னை பாரப்படுத்தினவற்றை செய்து கொண்டே இரு! உன் ஓட்டத்தை முடிக்க அவரே உன்னைப் பெலப்படுத்துவார்.
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து

ஞாயிறு, 29 மார்ச், 2015

வம்பர்களிடம் நமக்கென்ன வேலை!



வம்புக்காரர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், விலகிச் செல்வதே நல்லது என்கிறது பைபிள்.ஒரு ஆட்டுக்குட்டி, தன் தாயைப் பிரிந்து காட்டில் வழிதெரியாமல் போய்விட்டது. கடும் களைப்பால் தாகம் மேலிட, ஒரு ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. அப்போது ஒரு ஓநாய், ""ஏய் ஆடே! ஏன் தண்ணீரை கலக்குகிறாய்?'' என்றது.

வம்புக்கார ஓநாய் தன்னை அடித்து தின்னவே வந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட ஆட்டுக்குட்டி, ""நீ அந்தப் பக்கமாக நின்று தானே தண்ணீர் குடிக்கிறாய்? நீ குடித்த தண்ணீரின் மிச்சம் தானே நான் நிற்கும் இடத்திற்கு வருகிறது? அப்படியிருக்க, நான் தண்ணீரைக் கலக்குவதாக சொல்கிறாயே?'' என்றது.

""அதெல்லாம் இல்லை. நீ எங்கு நின்றாலும், தண்ணீரைக் கலக்கத்தான் செய்கிறாய்,'' என்ற ஓநாய், ""ஐயையோ! இங்கே நான் சாப்பிட வளர்த்திருந்த புல்லைத் தின்று விட்டாயா?'' என்று கத்தியது.

""நீ புல் சாப்பிடமாட்டாயே. அது எங்கள் உணவல்லவா? நீ இறைச்சி சாப்பிடுபவன் ஆயிற்றே,'' என்று பயத்துடனும் பணிவுடனும் கேட்டது. உடன் ஓநாய், ""சரியாகச் சொன்னாய். இதோ பார்! உன்னை அடித்து சாப்பிடுகிறேன்,'' என்று பாயவும், ஒரு அம்பு ஓநாயின் மீது தைக்கவும் சரியாக இருந்தது. 

அது அலறியபடியே உயிரை விட்டது. ஆட்டின் சொந்தக்காரன், ஆட்டைத் தேடி அங்கு வர, ஓநாய் அதன் மீது பாய்வதைப் பார்த்து, அம்பெய்து அதைக் கொன்று விட்டான். ஓநாயிடம் நெருங்கிச் சென்று வாக்குவாதம் செய்திருந்தால் ஆடு மடிந்திருக்கும். ஒதுங்கிப் போனதால் அது உயிர் தப்பியது.

""வாக்குவாதம் செய்ய வேண்டாம், அதனால், கேட்கிறவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய ஒரு பலனுமில்லை,'' என்ற பைபிள் வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.

செவ்வாய், 24 மார்ச், 2015

மறக்கக்கூடாத வசனம்!


ஒரு ஆற்றில் மழை காரணமாக கடும் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றங்கரையோரமாக நடந்து வந்த ஒரு சிறுமி, தண்ணீரில் தவறி விழுந்து விட்டாள். ஆற்றில் வேகமாக அடித்துச் செல்லப்பட்ட அவளை, கரையில் நின்ற மைக்கேல் என்பவர் பார்த்தார். சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்தார். வெள்ளம் அவரையும் இழுத்துச் சென்றது. எப்படியோ சிறுமியை தட்டுத்தடுமாறி பிடித்தார். ஆனாலும், கரைக்கு வர முடியாமல் அவரும் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தார்.

அந்நேரத்தில் பாலம் ஒன்றில், அவர்கள் மோதி நின்றனர். பாலமும் வெள்ளத்தில் சேதமடைந்திருந்தது. ஆனால் நீட்டிக் கொண்டிருந்த கம்பி ஒன்றை, மைக்கேல் பற்றிக்கொண்டார். கரையில் நின்ற மற்றவர்கள் கலங்கி நின்றார்கள். மீட்புப் படையினருக்கு தகவல் சென்றது. அவர்கள் வேகமாக வந்து இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். கரைக்கு வந்த பிறகு, மக்கள் மைக்கேலைப் பாராட்டினார்.

அவரைப்பற்றி விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?
"எனக்கு நீச்சல் தெரியாது!' என்பதுதான். ஆபத்தான நேரத்தில் அதை எதிர்த்துப் போராட கற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஆபத்தைச் சமாளிக்கத் தெரியாது என தயங்கி நிற்கக் கூடாது.

""நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள்; அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடே கூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை,'' என்கிறது பைபிள். இந்த வசனத்தை வாழ்நாள் முழுவதும் மறக்காதீர்கள்.

திங்கள், 23 மார்ச், 2015

தலைவர்களே! இது உங்கள் கண்ணில் படாதா!

  

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் ஜார்ஜ் வாஷிங்டன் ராணுவ தளபதியாக இருந்தார். ராணுவத்தில் சிறு பணியில் இருந்த ஒருவரின் கீழிருந்த சில வீரர்கள், அந்தக் கடும் குளிர் காலத்தில் தாங்கள் செல்லும் வழியில் ஒரு பாலம் அமைக்கும் படியாக ஒரு பெரிய கட்டையை உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதை ஜார்ஜ் கண்டார். அதைத் தள்ளுவதால் வீரர்கள் களைப்படைந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டார். 

அந்த வீரர்களின் கண்காணிப்பாளரான அந்த பணியாளனோ தன் கையில் கோலுடன் ஒரு பக்கமாய் அங்கு நின்று கொண்டு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில் வீரர்களுக்கு உதவி தேவை என்பதை கண்டு கொண்ட ஜார்ஜ் வாஷிங்டன், தானே முன் சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டு, பளுவான அந்த கட்டையைத் தள்ளினார். முடிவில் நல்லதொரு பாலமும் அமைக்கப்பட்டது. 

அவர் தன் தொப்பியைச் சற்று தாழ்த்தி அணிந்திருந்தபடியால் பலரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர் விடை பெறும் போது அந்த சிறிய பணியாளனை நோக்கி, ""நம் வீரர்கள் இவ்வளவு கடினமாகி பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தபோது, நீர் அவர்களுக்குச் சற்று உதவி செய்திருக்கலாமே'' என்றார்.
அவனோ, ""என் அடையாள சின்னத்தை நீர் பார்க்கவில்லையா? நான் ஒரு ராணுவ உத்தியோகஸ்தன்'' என்றான்.
ஜார்ஜ் வாஷிங்டன் தன் தொப்பியைச் சற்று உயர்த்தி, ""நான் ராணுவத்தளபதி! இன்னொரு முறை இப்படி ஒரு பளுவான கட்டையை தள்ள வேண்டியது வரும் போது, தயவு செய்து என்னைக் கூப்பிடுங்கள்,'' என்று கூறி விட்டு நகர்ந்தார். அந்த பணியாளன் அதிர்ச்சி அடைந்தான். தன்னைத் தாழ்த்தி பணிவிடை செய்த ஜார்ஜ் வாஷிங்டன் பின்னாளில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். காரணம் அவருக்குள் கிறிஸ்துவின் சிந்தை இருந்தது. 
கிறிஸ்துவின் சிந்தை என்பது என்ன?

""அவர்(இயேசு கிறிஸ்து) தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே பொறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலனார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு மரணபரிந்தயம் அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார்.(பிலி.2: 5-8)
இப்படிப்பட்ட தாழ்மையின் சிந்தை நமக்கு அவசியம். 

தேவன் நமக்கு தந்திருக்கிற பொறுப்புக்களை நினைத்து பெருமைப்படாமல் பாக்கியமாக கருதுங்கள். தேவனே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறவர் என்பதை உணர்ந்து துன்மார்க்கரிடமும் தேவ மனுஷன் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கிற அதிகாரங்களை தவறாய் பயன்படுத்தக் கூடாது. இயேசுகிறிஸ்து ராஜாதி ராஜாவாக இருந்தும் சாதாரண மனிதர்களான நம்முடைய கால்களைக் கழுவினார். இது தான் தலைவனாய் இருக்கிறவருடைய குணாதிசயம். ""தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்'' என்பதை உணர்ந்து கொள்வோம். 

ஞாயிறு, 15 மார்ச், 2015

காத்திருக்கிறது நீதியின் கிரீடம்




இரவு நேரத்தில் நான்கு திருடர்கள் வந்து கொண்டிருந்தனர். இருட்டாக இருந்ததால், வழியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனை, மரக்கட்டை என நினைத்து ஒருவன் மிதித்து விட்டான். அலறி எழுந்த அவனிடம் திருடன், "தவறுதலா மரக்கட்டைன்னு நினைச்சுட்டேன்' என்றான்.
தூங்கியவனோ கோபத்தில்,"" எந்த மரக்கட்டையாவது பணப்பையோடு தூங்குமா?'' என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் திருடர்கள் குஷியாகி விட்டனர்.
எப்படியாவது அந்த பண முடிப்பை அபகரிக்க முடிவெடுத்தனர். ஆனால், அவனோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. நான்கு பேரையும் எதிர்த்துப் போராடினான். இறுதியில் அந்த மனிதனை கட்டிப் போட்டு விட்டு, அவனிடம் இருந்த பணப்பையைப் பிடுங்கினர்.

ஒரு திருடன் ஆர்வமுடன் பையைப் பிரித்து பார்த்தான். அதில் மிகவும் சொற்ப பணமே இருந்தது. திருடர்கள் எரிச்சலும், ஏமாற்றமும் அடைந்தார்கள். ஆக, அந்தப் போராட்டம் பயனற்றதாகிப் போனது. ""பூமியிலே போராட மனுஷனுக்கு காலம் குறிக்கப்பட்டிருக்கிறது''(யோபு.7:1) என்றும், ""நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்'' (எபே.5:16) என்றும் பைபிள் நமக்கு கூறுகிறது.
இந்த பொல்லாத காலத்தில் மனிதன் எதற்கெல்லாமோ போராடுகிறான். பதவிக்காகவும், பணத்துக்காகவும் பிரயாசைப்படுகிறான்.
""பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தை பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்''(1கொரி.9:25) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்.



நீங்கள் அழிவுள்ள கிரீடத்தை பெற்றுக் கொள்ள போராடுகிறீர்களா அல்லது அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்ள போராடுகிறீர்களா?
""நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மாம்சத்தோடும், இரத்தத்தோடு மட்டுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு'' (எபே.6:11,12) என்கிறது பைபிள்.

பவுல் தனது ஊழியத்தின் முடிவில் ""நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருள்வார் எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருள்வார்'' (11 தீமோ.4:7,8)'' என்கிறார்.
உங்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். நீதியின் பாதையில் நடந்து வாழ்வை பயனுள்ளதாக்குங்கள்.

சனி, 14 மார்ச், 2015

நல்லா பேசுங்க! நல்லதையே பேசுங்க!



ஒரு பெண் எங்கு சென்றாலும், யாரிடம் பேசினாலும் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். அவளால் பல குடும்பங்களில் பிரிவினை, பிரச்னை உண்டானது. ஒருநாள் சபை போதகர் அவளை அழைத்து, சந்தைக்குப் போய் முழு கோழியை வாங்கி, வரும் வழியில் அதன் இறகுகளை உருவி கீழே போட்டுக் கொண்டே வரும்படி சொன்னார். அவளும் அப்படியே செய்தாள்.

மீண்டும் போதகர் அவளிடம், வந்த வழியே திரும்பிச் சென்று இறகுகளை எடுத்து வரும்படி கூறினார். அவளோ, ""ஐயா! எல்லாம் காற்றில் பறந்து போயிருக்குமே! எப்படி எடுக்க முடியும்?'' என்றாள்.
உடனே போதகர், ""இப்போது புரிகிறதா? நீ பேசுகிற வார்த்தைகளும் இதைப் போலத் தான்! மறுபடியும் பெற முடியாது. அவை 
காட்டுத்தீயைப் போல பரவி, சம்பந்தப்பட்டவர்களிடம் பிரச்னையை உண்டாக்குகிறது. அதை மீண்டும் சரி செய்ய உன்னால் முடியாது'' என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.

என் அன்பானவர்களே! 

  • நாக்கு பட்டயத்தைப் போல கூர்மையானது(சங்.64:3), 
  • சர்ப்பத்தைப் போல விஷமுள்ளது(சங்.140:3) 
  • வஞ்சனையாகப் பேசும்(சங் 5:9), புறங்கூறும்(சங்.15:3), 
  • ஏமாற்றும்(சங்.50:19), 
  • காயப்படுத்தும் (சங்.31:20), 
  • சபிக்கும்(ஒசி.7:16), 
  • அழிக்கும்(சங்.52:2), 
  • பொய் பேசும்(சங்.109:2). 

இப்படிப்பட்ட நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. எல்லா விலங்குகளையும் அடக்குகிறார்கள். ஆனால், தன் நாவை அடக்க முடியவில்லை. இரட்சிப்பு மட்டுமே அவனுடைய நாவின் பேச்சு வழக்குகளைக் கட்டுப்படுத்துகிறது (2 கொரி.5:17-18)

இன்றைய காலகட்டத்தில் அனேகர் தன்னுடைய நாவின் மூலமாகவே பிரச்னைகளில் அகப்பட்டு, துன்பத்தைச் சந்திக்கின்றனர். சிறிய உறுப்பாகிய இந்த நாக்கு, பெரிய உறவுகளையே பாதிக்க வைக்கும் ஆற்றல் உடையது. நாவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே உள்ளது. அவரிடம் நம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்கும் போது நல்லதை மட்டும் பேச வேண்டும் என்பதை நமக்கு போதிப்பார். எப்படி பேச வேண்டும் என்று ஆலோசனை தருவார். நம் பாதம் கல்லில் இடறாத படி அவர் நம்மை வழிநடத்துவார். நம் வாயோடு வாயாய் அவர் பேசி சமாதானத்தையும், அற்புதங்களையும் நிகழ்த்துவார்.

வேஷம் கலையும் ஒரு நாள்!



ஒருவன் சில புறாக்களை நல்ல உணவு கொடுத்து வளர்த்தான். இதைக் கண்ட ஒரு காகம், தானும் புறாவாக வேஷமிட்டால், மற்ற புறாக்களோடு கலந்து உழைக்காமல் சாப்பிடலாமே என எண்ணியது.
சுண்ணாம்புக் குழியிலே புரண்டு எழுந்து தன்கரிய நிறத்தை வெளுப்பாக்கிக் கொண்டது. புறாக்களைப் போலவே, தத்தி தத்தி நடக்கவும் பழகிக் கொண்டது. அவன் புறாக்களுக்கு உணவிடும் நேரத்தில், அவற்றுடன் சேர்ந்து கொண்டது. வயிறார உணவு கிடைத்தது. இப்படியே அந்த காகம் அவனை பல நாட்களாக ஏமாற்றி வந்தது.

ஒருநாள் அந்தப் பக்கம் எலி ஒன்று செத்துக் கிடந்தது. அதைக் கண்ட காகங்கள் எல்லாம் கூடின. விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் கரைய ஆரம்பித்தன.
புறா வேஷத்தில் இருந்த காகத்திற்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. புறாக்களின் மத்தியில் தன்னையும் மறந்து "கா... கா...' என்று கரைந்தபடி எலியை நோக்கிப் பறந்தது. இதைக் கண்ட அந்த மனிதன் கோபம் கொண்டான்.
அதேநேரம், எலியைத் தின்று கொண்டிருந்த இடத்திற்குச் சென்ற அந்த "வெள்ளை' காகத்தை, மற்ற காகங்கள் தங்களைப் போல் அது இல்லையே என எண்ணி கொத்த ஆரம்பித்தன. அவற்றிடம் இருந்து தப்பிய காகம்,
புறாக்கூட்டத்தோடு சேர எண்ணி திரும்பியது. ஆனால், உண்மையை அறிந்த மனிதனோ, அதை அடித்து விரட்டினான்.

வேஷத்தால் விளைந்த விபரீதத்தை எண்ணி காகம் வருந்தியது.
இந்த கதையைப் படிக்கும் அருமையானவர்களே!
ஆலயத்திற்கு வரும் பலர் பயப்படுவது போலவும், ஊழியம் செய்வது போலவும் இருக்கிறார்கள். பக்தியுடன் இருக்கும் இந்த நபரே மதுக்கடையிலும் முதல் ஆளாக இருக்கிறாரே என்று பார்க்கும் போது மனம் கஷ்டப்படுகிறது. பாவங்களைச் செய்து விட்டு, ஆலயத்திற்கு மட்டும் சென்றால் போதும் என நினைக்கிற மாய்மால பக்தர்கள் பரலோகம் செல்ல முடியாது.
""நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன்'' (வெளி.3:15,16) என்று கூறுகிறார் இயேசு நாதர்.

""நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம்
இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்'' (ரோமர்.12:2)
வாழ்நாள் முழுதும் கிறிஸ்துவில் வாழ தீர்மானம் கொள்ளுங்கள். 

பணத்தை இப்படியும் மாற்றலாமே! - ஜான் வெஸ்லி


வருமானம் உயர உயர சுயநலத்தின் அளவும் உயர்ந்துகொண்டே போகிறது. 
வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால், ஆடம்பரத்தில் திளைத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பவர்களையே அதிகமாய்ப் பார்க்கிறோம். போதாக்குறைக்கு கொடிய பழக்கங்களுக்கும் இந்த அதிகபட்ச வருமானம், மக்களை இழுத்துச் செல்கிறது.

இங்கிலாந்தில் வசித்த ஜான்வெஸ்லி என்ற மதபோதகர் ஒருகாலத்தில் குறைந்த வருமானம் உடையவராக இருந்தார். ஆண்டு வருமானமே 30 பவுண்டுகள்தான். இதில் 2 பவுண்டை தர்மம் செய்வார். மீதி அவரது தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார். அவரது வருமானமும் மிகமிக உயர்ந்து 1600 பவுண்டை எட்டியது. இதனால் அவர் தனது செலவுகளை உயர்த்திக் கொண்டார். வாழ்க்கை முறையே மாறிவிட்டது. ஏழையாக இருந்தபோது, நடந்ததையெல்லாம் மறந்து விட்டார். தன் வீட்டை அலங்கரித்தார். வரவேற்பறையில் விலையுயர்ந்த படங்களை வாங்கி மாட்டி வைத்தார். சம்பாதித்த பணம் காலியாகும் வரை செலவழித்தார்.
இந்த நேரத்தில் அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்கார சிறுமி நுழைந்தாள். அப்போது குளிர்காலம். குளிரைத்தாங்கும் அளவிற்கு உரிய உடையை அவள் அணிந்திருக்கவில்லை. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தச்சூழலை பார்த்த ஜான்வெஸ்லி மிகவும் வருத்தப்பட்டார். 

""தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவழித்தோமே! அந்த பணத்தில் இவளுக்கு நான்கைந்து கோட் 
எடுத்துக் கொடுத்திருக்கலாமே? இவளைப்போல இந்த பூமியில் எத்தனையோ ஏழை சிறுமிகள் உணவின்றி, உடையின்றி தவித்துக் கொண்டிருப்பார்களே! அவர்களுக்கு உதவிஇருக்கலாமே!'' என்ற எண்ணம் ஏற்பட்டது.
அத்துடன்"கடவுள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?' என்றும் சிந்தித்தார். பணத்துக்கு அடிமையானதை எண்ணி வெட்கப்பட்டார். அதன்பிறகு மனம் மாறினார். தனக்கு கிடைத்த சம்பளத்தில், முன்பைப்போலவே 28 பவுண்டுக்குள் தனது செலவை நிறுத்திக் கொண்டார். மீதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுவார்.
தானதர்மம் செய்ததால் இவர் வருமான வரி கட்டவில்லை. அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டனர். அதிக வருமானம் இருந்தும் ஏன் வரி கட்டவில்லை? என கேட்டனர். ஆனால், அவரது வீட்டை சோதனையிட்ட பிறகுதான் அங்கு 2 வெள்ளிக்கரண்டிகளைத் தவிர, வேறு எதுவுமே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் அவரிடம் வரி வசூலிக்காமல் விட்டுவிட்டனர்.

பணம் நல்லதுதான்! ஆனால், அது தன்னை வைத்திருப்போரை தீமைக்கு இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. நமது கையில் பணம் வரும்போது, அத்தியாவசியமான தேவைகளுக்கு போக, மீதி பசியுள்ளவனுக்கு ஆகாரமாக மாற வேண்டும். தாகமுள்ளவனுக்கு பானமாக வேண்டும். அரை நிர்வாணத்துடன் திரிபவர்களுக்கு உடையாக வேண்டும். அனாதை குழந்தைகளுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும் அது ஆறுதலாக மாற வேண்டும். பார்வையற்றோருக்கு பார்வை கொடுக்கவும், முடமானவர்களுக்கு காலாகவும் மாற வேண்டும்.

சனி, 16 ஜூலை, 2011

தாழ்மையுடன் நடப்போம்

சாமுவேல் லோகன்  பிரிங்கிள் என்பவர் பரிசுத்தத்தின் தீர்க்கதரிசி என்று அறியப்பட்டிருந்தார். அவர் ஒரு புகழ்பெற்ற வேதாகமக் கல்லூரியில் பயிற்சி பெற்று, மெதடிஸ்ட் சபையில் போதகராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் ஒரு பெரிய ஆலயத்தில் போதகராக பணியாற்றி இருந்திருக்கலாம். ஆனால், அவரோ இரட்சண்ய சேனையில் சேர்ந்து ஆண்டவரின் ஊழியத்தைச் செய்ய விரும்பினார். இந்த நோக்குடன் அவர் அமெரிக்காவை விட்டு, லண்டன் நகரத்தை அடைந்த போது, இரட்சண்ய சேனையின் தலைவர்கள் அவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். அதில் அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல்வேலை இரட்சண்ய சேனை அங்கத்தினர்களின் சேறு படிந்திருந்த காலணிகளைச் சுத்தம் செய்து, அவற்றிற்கு பாலிஷ் போட வேண்டும் என்பதே. அப்போது, சாத்தான்  அவரைப் பரிகசித்து, எப்படியாவது அந்த ஊழியத்தைச் செய்ய விடாமல் அவரைத் தடுக்க முயற்சி செய்தான். ஆனால் ஆண்டவரோ, சீடர்களின்  கால்களை, தான் கழுவிய  காட்சியை அவருக்கு நினைவு படுத்தினார். இயேசு தம்முடைய  சீடர்களின் காலைக் கழுவ ஆரம்பித்தார்.

பேதுருவினிடத்தில்  வந்தபோது, ""ஆண்டவரே! நீர் என் கால்களைக் கழுவலாமா?'' என்றும், ""நீர் ஒருகாலும் என் கால்களைக் கழுவப்படாது,'' என்றான். ஆனால், ""இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் பங்கில்லை என்றார். அதற்கு சீமோன் பேதுரு என் கால்களை  மட்டுமல்ல, என் கைகளையும் தலையையும் கூட கழுவும்  என்றான்''. இயேசு அவன் கால்களைக் கழுவினார். ""நானே உங்கள் கால்களைக் கழுவிதுண்டானால் நீங்களும் ஒருவருடைய காலை ஒருவர்  கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்'' என்ற இயேசுவின் வார்த்தைகளையும்நினைவு கூர்ந்தார். பிரிங்கிள் ஆண்டவருக்குத் தன்னை அர்ப் பணித்தவராய், தனக்கு கொடுக்கப்பட்ட எத்தகைய வேலையையும் செய்வதற்கு மனம் இணங்கினார். இதன் விளைவாக, தேவன் அவரைப் பயிற்றுவித்து, இரட்சண்ய சேனையில் ஒரு ஒப்பற்ற தலைவராக உயர்த்தினார். 

வெள்ளி, 15 ஜூலை, 2011

சிறியோருக்கு செய்வதே தேவனைச் சேரும்

‘‘எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும், வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாய் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘‘என்
தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏனெனில், நான்  பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’’ என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள், ‘‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்? அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’’ என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், ‘‘மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’’ என பதில் அளிப்பார்.
பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘‘சபிக்கப்பட்டவர்களே என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும், அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை; நான் அந்நியனாய் இருந்தேன், நீங்கள் என்னை
ஏற்றுக்கொள்ளவில்லை; ஆடையின்றி  இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை; நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’’ என்பார்.
அதற்கு அவர்கள், ‘‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருந்தீர்கள்?’’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘‘மிகச்
சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்’’ எனப் பதிலளிப்பார். ‘இவர்கள் முடிவில்லா தண்டனை அடையவும், நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்’& (மத்தேயு 25: 32&46)
மனிதன் கடவுளைத் தேடும்போது, அவரும் அவனை நாடி வருகிறார். அன்புருவாகிய அவர், தம்மைத் தாழ்த்தி, மனிதனாய் திரு அவதாரம் எடுத்தார். எங்கும் நிறைந்து அவர் மனித உருவில் சஞ்சரித்தார். உலக ரட்சகராகிய இயேசு கிறிஸ்து, பாவ மன்னிப்பைத் தருவதுடன், இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்கக்கூடிய சக்தியையும் தருகின்றார்.
‘‘நானே உலகின் ஒளி, என்னைப் பின் தொடர்பவன் இருளில் நடப்பதில்லை’’ என்கிறார் இயேசு. வாழ்வில் நெறி தவறி அலையும் உள்ளங்கள் மீட்கப்படவும், ஞானத்தெளிவடையவும், உண்மையை விரும்பி உத்தம வாழ்வில் ஒன்றித்து, நற்செய்கைகளில் பலன்களை நன்குணர்ந்து வாழவேண்டுமென்று அந்த வார்த்தைகளால் நமக்கு உணர்த்துகின்றார். ஆதலால் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையையும், வாழ்க்கையையும் தியானிப்பதே நமது உத்தம நினைவாக இருத்தல் வேண்டும்.
நாம் பிரிவினையின் தேவனல்ல, சமாதானத்தின் தேவன். அந்த சமாதானம், சொந்த மேன்மையில்லை. ஆனால் மெய்யான தாழ்ச்சியில்தான் அடங்கி இருக்கின்றது. தாழ்ச்சியுள்ளவர்களே சந்தோஷப்படுங்கள்; ஏழைகளே, அகமகிழுங்கள். ஏனெனில் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுடையது. ஆனால் சத்திய வழியில் நடந்தால் மட்டுமே.
நம்மிடத்தில் தாழ்ச்சி இல்லை என்றால் நம் வார்த்தைகள் நம்மை நீதிமானாக்கப் போவதில்லை. நாம் வாழும் புண்ணிய வாழ்க்கையே நம்மை இறைவனுக்கு  உகந்தவர்களாக்கும். அன்பும், இரக்கமும், நல்லொழுக்கமும், பணிவும், நற்செயலும் நம்மிடம் இல்லாவிடில் வாழ்வதன் பயனென்ன? இறைவனை நேசிப்பதும், அவருடைய வார்த்தைகளைப் பூரணமாய்க் கடைப்பிடித்து மோட்ச ராஜ்ஜியத்தைத் தேடுவதே
உன்னதமும், உத்தமமும் நிறைந்த வழியாகும்.
அழிந்துபோகும் செல்வத்தைத் தேடுவதும், சேமிப்பதும் அவைமேல் மிகுந்த நம்பிக்கையும், அளவற்ற பற்று வைப்பதும் பயனற்றவையே.
பெருமைகளை முன்னிறுத்தி விரும்புவதும், தன்னைத்தானே மேலான நிலைக்கு உயர்த்தி தற்புகழ் தேடி வாழ்வதும் பயனற்றவையே. வாழ்வில் வெகுவிரைவில் கடந்துபோவதை நேசிப்பதும், நித்திய மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இடத்திற்கு விரைந்து செல்லாதிருப்பதும் பயனற்றவையே.
பள்ளியிலிருந்து திரும்பிய மகனின் முகம் வாடியிருந்தது. ‘‘என்னப்பா ஆச்சு ஸ்கூல்ல?’’ கரிசனத்துடன் கேட்டார் அப்பா.
‘‘இன்னிக்கு ஸ்கூல்ல ஃபுட்பால் மேட்ச். என்னால் ஒரு கோல்கூட அடிக்க முடியல’’ என்றான் மகன்.
‘‘ஏன், உன்னால சரியா விளையாட முடியலையா?’’
‘‘இல்லப்பா, நான் நல்லாத்தான் விளையாடினேன். ஒவ்வொரு தடவையும் நான் கோலைப் பார்த்து பந்தடிச்சுட்டுப் போகும்போது எதிர் டீம்காரன் குறுக்கே வந்து பந்தைத் தட்டிட்டுப் போயிடறான்.’’
‘‘எதிராளி வர்றதுக்குள்ள உன் டீம்ல யாருக்காவது பந்தைத் தட்டி விட்டுட வேண்டியதுதானே?’’
‘‘தட்டிவிடலாம்தான். ஆனா, அப்படினா அவன் இல்லே பந்தை எடுத்துட்டுப் போய் கோல் அடிப்பான்!’’
தந்தைக்கு என்ன பிரச்னை என்பது புரிந்தது.
‘‘இங்க பார், கால்பந்து, அணியாய் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. அணியில் மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது. மற்றவர்கள் கோல் அடிக்க நீ உதவினால், நீ கோல் அடிக்க அவர்கள் உதவுவார்கள்’’ என்றார்.
ஒருவருக்கொருவர் உதவாமல் வாழ்க்கையில் வெல்ல முடியாது.&மணவைப்பிரியன்
ஜெயதாஸ் பெர்னாண்டோ

புதன், 13 ஜூலை, 2011

இயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)

  18 வருஷம் கூணி - (லூக்கா 13:11-13)
அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
அவள் மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

  5 அப்பம் 2 மீன் - (லூக்கா 9:13-17)
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள்.
ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.

7அப்பம் சில மீன் - (மாற்கு 8:6-9)
அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
சில சிறுமீன்களும் அவரிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.
அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.

அசுத்த ஆவி -1 - (லூக்கா 4:33-35)
ஜெபஆலயத்திலே அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.
அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.

அசுத்த ஆவி -2 - (மாற்கு 7:25-30)
அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கெண்டாள்.
இயேசு அவளை நோக்கி; முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றான்.
அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.
அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.

ஊமையான பிசாசு - (மத்தேயு 9:32,33)
அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.

ஊமையான பிசாசு குருடனும் - (மத்தேயு 12:22)

அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.

ஊமையான பிசாசு-2 - (மாற்கு 9:17-27)
அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக் கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற் போயிற்று என்றான்.
அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்.
அவனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதுமுதற்கொண்டே உண்டாயிருக்கிறது;
இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.
அப்பொழுது ஜனங்கள் கூட்டமாகய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதட்டினார்.
அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான். இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.

அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.
அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.

கானாவூர் கல்யாண வீடு - (யோவான் 2:7-10)

இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

காற்றை கடலை அதட்டினார் - (மத்தேயு 8:23-27)
அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும்  கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

குருடன் - (மாற்கு 8:22-25)
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.
அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.
பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.

குருடர் - (மத்தேயு 9:27-29)
இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்

குஷ்டரோகம்-1 - (லூக்கா 5:12,13)
பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

குஷ்டரோகம்-2 - (லூக்கா 17:12-16)
அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

கொன்னை வாய் செவிடன் - (மாற்கு 7:32-34)
அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து. அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள.
அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு;
வானத்தை அண்ணார்ந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.

சப்பாணி - (மத்தேயு 15:30)
அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.

சிறு பெண்னை எழுப்பினார் - (லூக்கா 8:41,42,49-55)
அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,
தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,
எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.

சூம்பின கையுடையவன் - (லூக்கா 6:6-10)
வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு,
அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

ஜலத்திலும் தண்ணிலும் தள்ளும் பிசாசு - (மத்தேயு 17:14-18)
அவர்கள் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.
அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற் போயிற்று என்றான்.
இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள். என்றார்.
இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.

ஜுரம் நீங்குதல் - (மத்தேயு 8:14,15)
இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.
அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.

திமிர்வாதகாரன் - (மாற்கு 2:3-5)
அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;
ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் - (லூக்கா 14:2 - 6)
அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.

படகு நிறைய மீன் - (லூக்கா 5:4-6)
அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.

பலவித வியாதி, பிசாசு,பிணியாளியை சொஸ்தமாக்கினார் 
(மத்தேயு 4:23,24)
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
(மத்தேயு 9:35)
பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
(மத்தேயு 14:14)
இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
(மாற்கு 1:34)
பலவிதமான வியாதிகளினாலும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்த பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
(லூக்கா 6:17,18)
பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.
அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
(லூக்கா 7:21)
அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.

பிசாசினால் கொடிய வேதனை –2 - (லூக்கா 9:39-42)
ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கின பின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

பிசாசினால் கொடிய வேதனை-1 - (மத்தேயு 15:22-28)
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.
அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள்.
அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

பிறவி குருடன் - (யோவான் 9:1-7)
அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.
அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்.
பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.
இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
நீ போய், ஸீலோவாம் குளத்திலே கழுவு என்றார். ஸீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.

பெரும்பாடுள்ள ஸ்திரீ - (மாற்கு 5:25-29,34)
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,
அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;
ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

மரித்த வாலிபன் - (யோவான் 11:1,21,43,44)
மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்.
மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.
லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

ராஜாவின் மகன் (யோவான் 4:47,50-52)
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.

வழியருகே குருடன் - (மாற்கு 10:47-52)
அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.
அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
இயேசு நின்று, அவனை அழைத்து வரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
உடனே அவன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.
இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்த குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின் சென்றான்.

அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.
இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

அப்பொழுது; பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ:
நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.
அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களுடனேகூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.

You may like also

Categories

Popular