Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

அதிசயம் புரிந்த ஆண்டவர்

அமெரிக்காவைச் சேர்ந்த அதோனிராம் ஜட்சன், மிஷனரி பணியாற்றும் ஆர்வத்துடன் இந்தியா வந்தார். பின் மியான்மர் (பர்மா) சென்று இறைப்பணியாற்றினார். பர்மீய மொழியில் வேதாகமத்தை மொழியாக்கம் செய்ய வேண்டுமென்ற மிகுந்த ஆர்வத்தால் அந்த மொழியைக் கற்றறிந்தார். அநேக எதிர்ப்புகளுக்கு மத்தியில் மொழியாக்கம் செய்து முடித்தார். இந்த வேளையில், பர்மிய அரசின் ராணுவ அதிகாரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்த சமயத்திலும், மொழியாக்கம் செய்த வேதாகமத்தை மீண்டும் படிக்க அவர் மிகுந்த ஆவலோடு இருந்தார். இதை அறிந்து அவருடைய மனைவி மேரி ஹசில்டைன் மொழியாக்கம் செய்த வேதாகமத்தை ரகசியமாக ஒரு தலையணைக்குள் மறைத்து, சிறையிலிருந்த அவரிடம் சேர்த்தார். அதை அவர் வாசித்து திருத்தம் செய்ய வேண்டிய இடத்தில் திருத்தங்கள் செய்து மிகுந்த திருப்தியும் ஆறுதலும் அடைந்தார்.
ஒரு கால கட்டத்தில் அவரை அந்த சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றினார்கள். அவர் தன்னோடு அந்த தலையணையையும் எடுத்துக் கொண்டார். சிறை அதிகாரி தலையணையைக் கொண்டு செல்லக்கூடாது என கோபத்தில் அவரது கரங்களிலிருந்து பறித்துத் தூர எறிந்துவிட்டார்.
ஜட்சன் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுவிட்டார். எத்தனையோ ஆண்டுகளாய் பர்மிய மொழியில் மக்களுக்கு வேதாகமத்தைக் கொடுக்க எடுத்த பிரயாசங்கள் யாவும் நஷ்டமாகிவிட்டதே என எண்ணி அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும் இருதயத்தின் ஆழத்திலிருந்து ""ஆண்டவரே, இந்த மக்கள் தங்கள் தாய்மொழியில் உம்முடைய வார்த்தைகளை அறிந்து உம்மை விசுவாசித்து பற்றிக்கொள்ள எடுத்த இந்த பிரயாசத்தை சாத்தான் தோல்வியடையச் செய்யக்கூடாது. இதை நீரே பொறுப்பெடும்'' என்று ஜெபித்துக்கொண்டே இருந்தார்.
சர்வவல்லதேவன் அதைக் குறித்து வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். தலையணை தூக்கி எறியப்பட்டது நஷ்டமல்ல. ஒரு கிறிஸ்தவர் அந்த தலையணையைக் கண்டெடுத்து உள்ளே இருந்த பொக்கிஷத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தார். அந்த முழுமையான வேதாகமத்தை அச்சிட அவர் வேதாகம ஜக்கிய சங்கத்தை அணுகினார். அவர்கள் அதை அச்சிட்டனர். அழகிய பர்மிய மொழியில் வேதாகமம் வெளிவந்தது. இதை அறிந்த ஜட்சனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தான் சிறையிலிருந்தாலும் அந்த வேலையை தேவன் மிகச் சிறப்பாகச் செய்துமுடித்தது பற்றி பெரும் மகிழ்ச்சியடைந்தார்.
ஆண்டவர் ஜட்சனின் இருதயக் கதறுதலின் ஜெபத்தைக் கேட்டார்.
"" ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்'' (யோபு 9-10).

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular