Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

நீ பலவீனனா? - ஜான் வெஸ்லி ‘உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்’ (1கொரி.1:28)
.
‘நான் இறையியல் படிக்கவில்லை. படிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. சபையில் படித்து பெற்றுக்கொள்ளக்கூடிய சாதாரண அருளுரையாளர் பத்திரம்கூட என்னிடம் இல்லை. எந்தவித தகுதியும் எனக்கில்லை. நான் ஒரு உதவாக்கரை’ இப்படியாக தனக்குள் புழுங்கித் தவித்த ஒரு தேவபிள்ளை இன்று கர்த்தரால் அற்புதமாக உபயோகிக்கப்படுவதை நான் அறிவேன். படிப்பு அவசியந்தான்; உலகத்தில் வேலை செய்ய சில பத்திரங்களும் அவசியந்தான். ஆனால் இவை இல்லாதபோதும் தேவன் உங்களை எடுத்து உபயோகிக்க வல்லவர். 

உலகத்தின் கணிப்பில் பைத்தியமானவைகள், பலவீனமானவைகள், இழிவானவைகள், அற்பமாய் எண்ணப்பட்டவைகள், இல்லாதவைகள், இவைகளில் யாராகவாவது நாம் இருக்கிறோமா? இருக்கட்டும். ஆனால், நாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள், தகுதியற்றவர்கள் என்கிற எண்ணம் நமக்குள் வேரூன்ற இடமளிப்போமானால் நம்மைக் கொன்றுபோட அது போதும்.

ஜாண் வெஸ்லி ஐயரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. பெரிய சர்வகலாசாலையில் இறையியல் படித்துக்கொண்டிருந்த வெஸ்லி அவர்கள், அங்கே பணிபுரியும் ஒரு வேலையாளைச் சந்தித்தாராம். மாற்றுடைகூட இல்லாத நிலையில், அன்றாட உணவுக்கே அல்லல்படும் அவன் வெறும் நீரைக் குடித்து விட்டு ஆண்டவருக்கு நன்றி செலுத்தினதைக் கண்டாராம். இது எப்படி என்று வெஸ்லி அவர்கள் கேட்டபோது, ‘ஆண்டவர் எனக்கு ஜீவன் தந்தார். அவரை நேசிக்கும் இதயம் தந்தார். அவருக்கு சேவை செய்யும் மனதைத் தந்தார். இது போதாதா நான் ஆண்டவரைத் துதிக்க?’ என்று பதிலளித்தானாம் அந்த வேலையாள். இது வெஸ்லி அவர்களின் இருதயத்தை உலுப்பியதாம்.

தானியேலின் தகுதி தராதரம் நாம் அறியோம். ஆனால் அவர் இப்போது ஒரு சிறைக் கைதி. அவரால் சுயமாக எதுவும் செய்யமுடியாது. அப்படிப்பட்ட ஒருவரைக்கொண்டே, பலவானும் உலகமே நடுங்குகிறவனுமாகிய நேபுகாத் நேச்சார் என்ற அரசனை தேவன் கலங்கடித்தார். ஞானிகளும் செல்வந்தரும் அறிவாளிகளும் பாபிலோனிலே இருந்தும், ராஜாவுக்கு, தன் வேலையாளாகிய தானியேல்தான் தேவைப்பட்டார். 

இது எப்படி? இது தேவனால் மட்டுமே ஆனது. தேவபிள்ளையே, நீ இழிவானவன், பெலவீனமானவன் என்று உலகம் சொன்னாலும், உன்னைக் குறித்து அப்படிப்பட்ட தாழ்வுமனப்பான்மை நீ கொள்ளாதே. நீ தேவனை நம்பினால், அவர் வழி நின்றால், உன்னைக் கொண்டே ராஜ்யங்களையும் அதிபதிகளையும் அவரால் அசைக்கமுடியும். நீ சாதாரணமானவன் இல்லையே! நீ தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட பிள்ளை என்பதை மறவாதே.

ஜெபம்: “பிதாவே, உலகம் என்னைப் புறக்கணித்தாலும் நீர் என்மீது நோக்கமாயிருக்கிறீர், இது எனக்கு எவ்வளவு ஆனந்தமாயிருக்கிறது ஐயா. ஆமென்.”

  1 கருத்து:

 1. Its true.For Our lord Jesus its so light for him to make the weaker to stronger, Illiterate to great Educationist.
  Jesus Never Fails.
  In My Own life i have Met Jesus and Tasted His Greatness, his power. This is my own testimony,
  when i was studying 7th standard in a matriculation school, till that i even don't know A,B,C,D properly i used to get fail marks in all subjects. day by day my situation went more worse people started to tease me, even my very close friends refused to have time with me, my parents hated me , they used to scold me always and beat me worse.
  At that time my mother Reintroduced me Lord Jesus Christ the excellence, master, owner of true Wisdom.
  You Know why i am telling my mother reintroduced since i am from christian family but i was away from my Jesus, because of that i lost all the Blessings.
  as per Gods word
  James 1: 5 says: ( If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not: and it shall be given him.)
  when i look back to him, when i asked him for Knowledge he carried me in his hand and he blessed me with his knowledge.
  Form that very moment i started studying well, in the very next exam i cleared all subjects and became Rank Holder.
  Now i am in a Hospital as A Prosthetic doctor as will as head of the Department, and taking Lectures for Master of Physiotherapy and Occupational therapy.

  GOD IS GREAT isn't it.
  So my beloved brothers and sisters if God is Good enough to do for me he is good enough for You too to do it. if you are lack in something, depressed in something, poor in something this is the time. Ask our Lord JESUS CHRIST He will Do his Testimony with You
  AMEN

  பதிலளிநீக்கு

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular