வேத தியானம் : ஒருமுகப்படுத்துதல் (Concentration) Dr. செல்வின்
மனதில் ஓடும் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட பொருளில் யோசிப்பதற்காக ஒன்று சேர்ப்பது ஒருமுகப்படுத்துதல் ஆகும்.
உதாரணம் ஒரு மரத்தின் இரண்டு கிளிகள் உட்கார்ந்திருப்பதை நாம் பார்க்க வேண்டுமானால் கவனமாக தேடி எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்போம். அந்த ஒன்றிரண்டு நிமிடங்களில் வேறே நிகழ்வுகளில் நம்முடைய கவனம் விழிப்புடன் இருப்போம்.
நாம் மனதை ஒருமுகப்படுத்துவதற்கு தொடர்ந்து பயிற்சி தேவை. ஒரு குறிப்பிட்ட நிலையில் உட்கார்ந்திருத்தல், முழங்காலில் நிற்பது போன்ற செயல்பாடுகள் இதற்கு உதவியாக இருக்கிறது. கண்களை மூடியிருப்பதும் , நாம் மூச்சு விடுவதை (உள்ளிழுத்து வெளிவிடுவதை) கவனிப்பதும், ஒருமுகப்படுத்த துணை செய்கிறது. ஒரு வார்த்தையை மெதுவாக (Slow) மீண்டும் மீண்டும் சொல்லுவது அல்லது யோசிப்பது ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்க்கிறது.
super
பதிலளிநீக்கு