நீங்கள் பைபிளை எப்படி வாசிக்கிறீர்கள்?. Dr. செல்வின்
திட்டமிட்டு வேதம் வாசிப்பது மிகவும் நல்லது. கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கவேண்டும். வேத அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு வேதத்தை வாசியுங்கள்.
பரிசுத்த வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உண்டு. ஒவ்வொரு புத்தகத்துக்குமான அறிமுக பிரதிகள் எங்களிடத்தில் உண்டு. இந்த அறிமுக பிரதியை வாங்கிப் படித்துவிட்டு வேதத்தை வாசிப்பது, வேதத்திலுள்ள செய்தியை எளிதில் விளங்கிக்கொள்ள உதவியாயிருக்கும்.
நீங்கள் வேதாகமத்தில் பழைய ஏற்பாடு புத்தகங்களை வாசிக்கும் போது முதலில் விளங்காதது போல தோன்றலாம். அப்படியிருந்தால் 3 அல்லது 4 முறை வாசியுங்கள்.
நீங்கள் வாசிக்கும்போது அதிகாரத் தலைப்புகளை எழுதிக்கொண்டு முக்கியமான வசனங்களை குறித்துக் கொள்ளுவது புத்தகத்தின் செய்தியை நீங்கள் விளங்கிக் கொள்ள அது உதவியாயிருக்கும்.
மீண்டும் மீண்டும் வரும் வார்த்தைகளை கண்டுபிடித்து குறித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வேதத்தை வாசிக்கும்போது "தேவனே! நீர் கொடுத்திருக்கும் வேதாகமத்திற்காக நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வேதத்திலுள்ள அதிசயங்களை பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும். உம்முடைய சத்தத்தை கேட்க காத்திருக்கிறேன். உமது வேதத்தில் உள்ள சத்தியங்களை விளங்கிக்கொள்ள உதவி செய்யும். உமது வசனத்தை வாசித்து கீழ்படிந்து அதன்படி வாழ எனக்கு கிருபை தாரும். ஆமென்." என்று ஜெபியுங்கள்.
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....