அவர் பக்கம் நாம்!
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கிய பிரச்னையைத் தீர்க்க வழி
தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நண்பர் வந்தார். அவர்
லிங்கனின் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
லிங்கன் அவரிடம் பிரச்னையைச் சொல்லவே, அந்த நண்பராலும் அதற்கு தீர்வைச் சொல்ல முடியவில்லை. எனவே, நண்பரே! நீங்கள் கலங்க வேண்டாம். ஆண்டவர் உங்கள் பக்கம் இருப்பார்,'' என்றார்.
லிங்கன் அவரிடம்,""நண்பரே! ஆண்டவர் என் பக்கம் இருக்க வேண்டுமென்பது என் ஆசையல்ல. நான் அவர் பக்கம் இருக்க வேண்டும், அது தான் என் ஆசை,'' என்றார்.
குழப்பத்திலும் வந்த தெளிவான பதிலைப் பார்த்தீர்களா!
இதைப் படிப்பவர்களுக்கு,""எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்'' (சங்.73:28) என்ற வசனம் பைபிளில் இருப்பது நினைவிற்கு வருகிறதல்லவா! ஆம்...ஆண்டவர் நம் பக்கம் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நாம் அவர் பக்கம் இருக்க முயற்சிப்போம்.

நம் தீயசெயல்களிலிருந்து விடுபட்டு ஆண்டவருக்கு உகந்த பிள்ளையாக வாழ்வோம்
பதிலளிநீக்கு