தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!
ஒரு சின்னக்குழந்தை தவறு செய்து விட்டது என்றால், பிரம்பைக்காட்டி
பயமுறுத்தி மீண்டும் அத்தவறை செய்ய விடாமல் தடுக்கலாம். ஆனால், பெரிய
குழந்தைகள் (இளைஞர்கள்) தவறு செய்தால், அவர்களை அடித்து திருத்த முடியாது.
அன்பால் தான் திருத்த வேண்டும். அதனால் தான் தனக்கு துன்பம்
இழைத்தவர்களுக்கும் அன்பைக் காட்டினார் இயேசுநாதர்.
உலகத்தின் பாவத்தை சிலுவையாகச் சுமந்தார். தவறு செய்தவர்களை நிந்தனை செய்து கொண்டிருக்காமல், அவர்கள் திருந்தி வாழ வகை செய்யுங்கள் என்றார். ஒரு பணக்காரனுக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவன் உழைப்பாளி, தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நல்வாழ்வு வாழ்ந்தான். மற்றொருவன் ஊதாரி. அவனது தொல்லை தாங்காமல் அவனுக்குரிய பங்கை தந்தை பிரித்துக் கொடுத்துவிட்டார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான். ஒருமுறை அவ்வூரில் பஞ்சம் ஏற்பட எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன் பக்கத்து ஊருக்கு பிழைப்புக்குச் சென்றான். அங்குள்ள விவசாயியிடம் பன்றி மேய்க்கும் வேலை பெற்றான். ஆனால், விவசாயியோ அவனுக்கு சாப்பிட தவிடு கூட கொடுக்கவில்லை.
பசி தாங்காத அவன், தன் தந்தையின் சொல்லைக் கேட்காமல் அவஸ்தைப்படுகிறோமோ என்று வருத்தப்
பட்டான். கண்ணீர் விட்டு அழுதான். தந்தையிடம் வேலை செய்தாவது பிழைப்போம் என ஊர் திரும்பினான். அவன் மனம் திருந்தி வந்தது தந்தையை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக அவர் தன் ஊழியர்களுக்கு விருந்தே கொடுத்தார். இது மூத்தவனுக்கு பிடிக்கவில்லை. தந்தையை கடிந்து கொண்டான்.
இந்தக்கதையை சொன்ன இயேசு சொல்கிறார், "" நான் நல்லவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம்திருந்தச் செய்யவே வந்திருக்கிறேன்,'' என்று. நல்ல வர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும்.
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....