Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 15 ஜூலை, 2011

பயத்தை அறவே விடுங்கள்

தேவனோடு உள்ள உறவை நாம் முழங்காலின் மூலமாகத்தான் உறுதிப்படுத்துகிறோம்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜாண்நாக்ஸ் என்ற பக்தர் முழங்காலிட்டு ஜெபித்து, ""ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும். இல்லாவிட்டால் நான் மடிந்து போகிறேன்,' 'எனக் கதறினார். அப்படியே தன் முழங்காலின் பலத்தால் ஸ்காட்லாந்தில் ஒரு பெரிய எழுப்புதலைக் கொண்டு வந்தார்.

அப்போது ஸ்காட்லாந்தை ஆட்சி செய்த ராணி கொடுங்கோல் அரசியாக இருந்தாள். அவளை அந்த தேசத்து மக்கள், ""ரத்த வெறி பிடித்தவள்,'' என்று அழைத்தார்கள். ஆனால், அவளோ ஜெபவீரராகத் திகழ்ந்த நாக்ஸுக்கு பயப்பட்டாள். ""அந்த மனிதன் முழங்காலிட்டு நின்றால், என் சரீரம் எல்லாம் தீப்பற்றி எரிவது போல் வேதனை உண்டாகிறது,'' என்று சொல்லி நடுங்கினாள்.
இதுபற்றி நாக்ஸிடம்,""இவளோ கொடுங்கோல் அரசி, ராணுவத்தை தன் கைக்குள் வைத்திருப்பவள். அப்படியிருக்க அவளை எதிர்த்து நிற்கும் துணிச்சல் எப்படி வந்தது?'' என பலரும் கேட்டனர்.
அதற்கு நாக்ஸ்,""எந்த ஒரு மனிதன் பரலோக ராஜாவுக்கு முன்பாக நிற்கிறானோ, அவன் உலக ராணிகளைக் குறித்து கவலைப்படமாட்டான். அவர்களுக்கு அஞ்சமாட்டான். பரலோக தேவ தூதர்களின் சேனைகள் என்னோடு இருக்கும்போது, பூலோக ராணுவத்துக்கு நான் ஏன் பயப்பட வேண்டும்?'' என்று அவர்களுக்கு ஆணித்தரமாகப் பதிலளித்தார். தேவனை நம்புவோர் எந்த ஒரு சக்திக்கும் பயப்படத் தேவையில்லை என்பதை இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது.
* பிறர் உங்களுக்கு எதையெல்லாம் செய்யவேண்டும் என்று ஆவல் கொள்கிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்.
* அன்னமும், ஆடையும் இருந்தால் அதுவே போதும் என்ற மன திருப்தி அடைவோமாக...
-பைபிள்

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular