சிறியோருக்கு செய்வதே தேவனைச் சேரும்
‘‘எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று
கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப்
பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும், வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும்
நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாய் பிரித்து நிறுத்துவார். பின்பு
அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,
‘‘என்
தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’’ என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள், ‘‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்? அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’’ என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், ‘‘மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’’ என பதில் அளிப்பார்.
பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘‘சபிக்கப்பட்டவர்களே என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும், அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை; நான் அந்நியனாய் இருந்தேன், நீங்கள் என்னை
ஏற்றுக்கொள்ளவில்லை; ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை; நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’’ என்பார்.
அதற்கு அவர்கள், ‘‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருந்தீர்கள்?’’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘‘மிகச்
சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்’’ எனப் பதிலளிப்பார். ‘இவர்கள் முடிவில்லா தண்டனை அடையவும், நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்’& (மத்தேயு 25: 32&46)
மனிதன் கடவுளைத் தேடும்போது, அவரும் அவனை நாடி வருகிறார். அன்புருவாகிய அவர், தம்மைத் தாழ்த்தி, மனிதனாய் திரு அவதாரம் எடுத்தார். எங்கும் நிறைந்து அவர் மனித உருவில் சஞ்சரித்தார். உலக ரட்சகராகிய இயேசு கிறிஸ்து, பாவ மன்னிப்பைத் தருவதுடன், இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்கக்கூடிய சக்தியையும் தருகின்றார்.
‘‘நானே உலகின் ஒளி, என்னைப் பின் தொடர்பவன் இருளில் நடப்பதில்லை’’ என்கிறார் இயேசு. வாழ்வில் நெறி தவறி அலையும் உள்ளங்கள் மீட்கப்படவும், ஞானத்தெளிவடையவும், உண்மையை விரும்பி உத்தம வாழ்வில் ஒன்றித்து, நற்செய்கைகளில் பலன்களை நன்குணர்ந்து வாழவேண்டுமென்று அந்த வார்த்தைகளால் நமக்கு உணர்த்துகின்றார். ஆதலால் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையையும், வாழ்க்கையையும் தியானிப்பதே நமது உத்தம நினைவாக இருத்தல் வேண்டும்.
நாம் பிரிவினையின் தேவனல்ல, சமாதானத்தின் தேவன். அந்த சமாதானம், சொந்த மேன்மையில்லை. ஆனால் மெய்யான தாழ்ச்சியில்தான் அடங்கி இருக்கின்றது. தாழ்ச்சியுள்ளவர்களே சந்தோஷப்படுங்கள்; ஏழைகளே, அகமகிழுங்கள். ஏனெனில் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுடையது. ஆனால் சத்திய வழியில் நடந்தால் மட்டுமே.
நம்மிடத்தில் தாழ்ச்சி இல்லை என்றால் நம் வார்த்தைகள் நம்மை நீதிமானாக்கப் போவதில்லை. நாம் வாழும் புண்ணிய வாழ்க்கையே நம்மை இறைவனுக்கு உகந்தவர்களாக்கும். அன்பும், இரக்கமும், நல்லொழுக்கமும், பணிவும், நற்செயலும் நம்மிடம் இல்லாவிடில் வாழ்வதன் பயனென்ன? இறைவனை நேசிப்பதும், அவருடைய வார்த்தைகளைப் பூரணமாய்க் கடைப்பிடித்து மோட்ச ராஜ்ஜியத்தைத் தேடுவதே
உன்னதமும், உத்தமமும் நிறைந்த வழியாகும்.
அழிந்துபோகும் செல்வத்தைத் தேடுவதும், சேமிப்பதும் அவைமேல் மிகுந்த நம்பிக்கையும், அளவற்ற பற்று வைப்பதும் பயனற்றவையே.
பெருமைகளை முன்னிறுத்தி விரும்புவதும், தன்னைத்தானே மேலான நிலைக்கு உயர்த்தி தற்புகழ் தேடி வாழ்வதும் பயனற்றவையே. வாழ்வில் வெகுவிரைவில் கடந்துபோவதை நேசிப்பதும், நித்திய மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இடத்திற்கு விரைந்து செல்லாதிருப்பதும் பயனற்றவையே.
பள்ளியிலிருந்து திரும்பிய மகனின் முகம் வாடியிருந்தது. ‘‘என்னப்பா ஆச்சு ஸ்கூல்ல?’’ கரிசனத்துடன் கேட்டார் அப்பா.
‘‘இன்னிக்கு ஸ்கூல்ல ஃபுட்பால் மேட்ச். என்னால் ஒரு கோல்கூட அடிக்க முடியல’’ என்றான் மகன்.
‘‘ஏன், உன்னால சரியா விளையாட முடியலையா?’’
‘‘இல்லப்பா, நான் நல்லாத்தான் விளையாடினேன். ஒவ்வொரு தடவையும் நான் கோலைப் பார்த்து பந்தடிச்சுட்டுப் போகும்போது எதிர் டீம்காரன் குறுக்கே வந்து பந்தைத் தட்டிட்டுப் போயிடறான்.’’
‘‘எதிராளி வர்றதுக்குள்ள உன் டீம்ல யாருக்காவது பந்தைத் தட்டி விட்டுட வேண்டியதுதானே?’’
‘‘தட்டிவிடலாம்தான். ஆனா, அப்படினா அவன் இல்லே பந்தை எடுத்துட்டுப் போய் கோல் அடிப்பான்!’’
தந்தைக்கு என்ன பிரச்னை என்பது புரிந்தது.
‘‘இங்க பார், கால்பந்து, அணியாய் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. அணியில் மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது. மற்றவர்கள் கோல் அடிக்க நீ உதவினால், நீ கோல் அடிக்க அவர்கள் உதவுவார்கள்’’ என்றார்.
ஒருவருக்கொருவர் உதவாமல் வாழ்க்கையில் வெல்ல முடியாது.&மணவைப்பிரியன்
ஜெயதாஸ் பெர்னாண்டோ
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....