அதிசயம் நிகழ்த்திய அப்போஸ்தலர் - தோமா
அப்போஸ்தலர் தோமா கி.பி.52ல் இந்தியா வந்தார். சென்னை,
கேரளாவில் அவர் ஊழியம் செய்தார். ஒருமுறை கேரள கடற்கரை வழியே அவர் வந்தார்.
அங்கே பலர் நின்றனர். அவர்களிடம்,""சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கின
ஆண்டவர் ஒருவர் இருக்கிறார்.
அவர் தான் இயேசுகிறிஸ்து. அவர் அற்புதங்களைச் செய்கிறவர். அவர் இன்றைக்கும் ஜீவனோடிருக்கிறார். நிரூபிக்கிறேன்,'' என்றார்.
உடனே அவர்கள், ""நீர் சொல்வது உண்மையானால், இந்த கடல்நீரை மேலே எறியும். அது கீழே விழாமல் அப்படியே நிற்க வேண்டும்,'' என்றனர்.
அப்போஸ்தலர் அந்த சவாலை ஏற்றார். கை நிறைய தண்ணீரை எடுத்தார்.
அதை நோக்கி, "ஜீவனுள்ள
இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடு கிறேன். தண்ணீரே! ஆகாயத்தில்
நில்,'' என்றபடியே மேலே எறிந்தார். என்ன ஆச்சரியம்! தண்ணீர் அப்படியே
நின்றது.
தேவன் இன்றைக்கும் ஜீவனோடு இருக்கிறார். தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்டு அற்புதங்களைச் செய்ய அவர் ஆவலோடு கூட காத்திருக்கிறார்.
தேவன் இன்றைக்கும் ஜீவனோடு இருக்கிறார். தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்டு அற்புதங்களைச் செய்ய அவர் ஆவலோடு கூட காத்திருக்கிறார்.
Rupan
பதிலளிநீக்கு9092281358