Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 15 ஜூலை, 2011

உத்தம நண்பரான ஆண்டவர்


இயேசுகிறிஸ்துவைப் பற்றி பல புத்தகங்கள், படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இயேசு தம் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூட எழுதியதில்லை. அவரைக்குறித்து கல்விமான்கள் எல்லாம் "அவர் ஒரு உத்தம நண்பர்' என்கிற பொருளில் ஏராளமான புத்தகங்களை எழுதிக் குவித்துள்ளனர், இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இயேசு ஒரு ஓவியம் கூட வரைந்ததில்லை. ஆனால், உலகின் தலைசிறந்த ஓவியர்களான ரபேல், மைக்கேல் ஏஞ்சலோ, லியோனார்டோ ஆகியோர் இயேசுவின் முகச்சாயலில் உள்ள அன்பினால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை ஓவியமாகத் தீட்டியுள்ளனர், சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.

இயேசு கவிதை ஏதும் எழுதவில்லை. ஆனால், பிரபல கவிஞர்களான மில்டன், டேன்டே போன்றவர்கள் அவருடைய சிநேகிதத்தின் ஆழத்தை கவிதைகளில் வரைந்து மகிழ்ந்தார்கள். 


கிறிஸ்து ஒரு சங்கீதம் கூட பாடியவரல்ல, இசை மீட்டியவரும் அல்ல. ஆனால், புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான கேடக் ஹேண்டில், பீத்தோவன் உள்ளிட்ட பலர் கிறிஸ்துவினுடைய மேன்மையை மகிமையை பாடிப்பாடி மகிழ்ந்தார்கள். காரணம் இயேசு அவர்களின் உத்தம நண்பராகவும், ஆத்தும நண்பராகவும் இருந்தார். 


அவர் இப்போதும் நமக்கு நண்பராகவே இருக்கிறார். என்றும் நண்பராகவே இருப்பார். அவரது அன்பில் மூழ்கியபடியே, எல்லாரும் எழுத வேண்டும், பாட வேண்டும், வரைய வேண்டும். செய்வோமா!
""நான் உங்களை சிநேகிதர் என்றேன், ஏனெனில், என் பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்'' (யோவா.15:15) என்ற வசனம் இங்கே குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular