ஆண்டவரை உணரலாம்
ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர்
உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும்
கண்டதில்லை. காணாத நான் எப்படி விசுவாசிப்பது?'' என்று கேட்டார்.
கிறிஸ்தவர் அவரிடம்,""நீங்கள் உங்கள் இருதயத்துடிப்பை எப்போதாவது கண்டிருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
அதற்கு அவர்,""நான் பார்த்ததில்லை,'' என்றார்.
""இருதயத்துடிப்பை உணர்ந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டதற்கு, ""ஆம்...என் நெஞ்சிலே கை வைக்கும் போதெல்லாம் உணர்ந்துள்ளேன்,'' என்றார்.
ஆம்...அதுபோலத்தான் ஆண்டவரை நாம் கண்டதில்லை. ஆனால், அவரை உணர்கிறோம். அவரை ருசிக்கிறோம்.
அவர் கிரியை செய்வதைப் பார்க்கிறோம். அவர் காணப்படாதவராக இருந்தாலும், மெய்யானவராய் உணரப்படக் கூடியவராய் இருக்கிறார். அவர் நம்மை ஏவி எழுப்புகிறார். அருமையாய் வழிநடத்திச் செல்கிறார். தேற்றி ஆற்றுகிறார். செயல் ஊக்கம் கொடுக்கிறார். நமக்காக பிதாவினிடத்திலே வேண்டுதல் செய்கிறார்.
Really true God Jesus
பதிலளிநீக்கு9092281358