தாழ்மையுடன் நடப்போம்
சாமுவேல் லோகன் பிரிங்கிள் என்பவர் பரிசுத்தத்தின் தீர்க்கதரிசி என்று
அறியப்பட்டிருந்தார். அவர் ஒரு புகழ்பெற்ற வேதாகமக் கல்லூரியில் பயிற்சி
பெற்று, மெதடிஸ்ட் சபையில் போதகராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் ஒரு
பெரிய ஆலயத்தில் போதகராக பணியாற்றி இருந்திருக்கலாம். ஆனால், அவரோ இரட்சண்ய
சேனையில் சேர்ந்து ஆண்டவரின் ஊழியத்தைச் செய்ய விரும்பினார். இந்த
நோக்குடன் அவர் அமெரிக்காவை விட்டு, லண்டன் நகரத்தை அடைந்த போது, இரட்சண்ய
சேனையின் தலைவர்கள் அவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். அதில்
அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல்வேலை இரட்சண்ய சேனை அங்கத்தினர்களின் சேறு
படிந்திருந்த காலணிகளைச் சுத்தம் செய்து, அவற்றிற்கு பாலிஷ் போட வேண்டும்
என்பதே. அப்போது, சாத்தான் அவரைப் பரிகசித்து, எப்படியாவது அந்த
ஊழியத்தைச் செய்ய விடாமல் அவரைத் தடுக்க முயற்சி செய்தான். ஆனால் ஆண்டவரோ,
சீடர்களின் கால்களை, தான் கழுவிய காட்சியை அவருக்கு நினைவு படுத்தினார்.
இயேசு தம்முடைய சீடர்களின் காலைக் கழுவ ஆரம்பித்தார்.
பேதுருவினிடத்தில்
வந்தபோது, ""ஆண்டவரே! நீர் என் கால்களைக் கழுவலாமா?'' என்றும், ""நீர்
ஒருகாலும் என் கால்களைக் கழுவப்படாது,'' என்றான். ஆனால், ""இயேசு
அவனுக்குப் பிரதியுத்தரமாக நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில்
பங்கில்லை என்றார். அதற்கு சீமோன் பேதுரு என் கால்களை மட்டுமல்ல, என்
கைகளையும் தலையையும் கூட கழுவும் என்றான்''. இயேசு அவன் கால்களைக்
கழுவினார். ""நானே உங்கள் கால்களைக் கழுவிதுண்டானால் நீங்களும் ஒருவருடைய
காலை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும்
செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்'' என்ற இயேசுவின்
வார்த்தைகளையும்நினைவு கூர்ந்தார். பிரிங்கிள் ஆண்டவருக்குத் தன்னை அர்ப்
பணித்தவராய், தனக்கு கொடுக்கப்பட்ட எத்தகைய வேலையையும் செய்வதற்கு மனம்
இணங்கினார். இதன் விளைவாக, தேவன் அவரைப் பயிற்றுவித்து, இரட்சண்ய சேனையில்
ஒரு ஒப்பற்ற தலைவராக உயர்த்தினார்.
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....