ஜெபம் தரும் பலம் -டி.எல்.மூடி
போதகர் டி.எல்.மூடி என்பவரது வாழ்க்கை சரிதத்தை ஒரு நூலாசிரியர் எழுதினார். அதில் குறிப்பிட்டுள்ள வரியைக் கேளுங்கள்.
""அவர் அமெரிக்கா கண்டத்தை ஒரு கையிலும், ஐரோப்பா கண்டத்தை மறுகையிலும் ஏந்தி அசைக்கும் தெய்வ பலமுள்ளவராய் இருந்தார்,'' என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு போதகரால் இந்தளவுக்கு இரு கண்டங்களையே அசைக்க முடிந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவரது ஊக்கமான உருக்கமான ஜெபம் தான். ஜெபவீரரான அவர், ஆண்டவருடைய பாதத்தில் விழுந்து ஜெபித்து தன் சரீரத்தையும், ஆவி, ஆத்துமாவையும் தெய்வீக பலத்தால் பலப்படுத்திக் கொண்டார்.
ஜெபம் செய்பவர்கள் பலம் பெறுவார்கள்.
""சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுவார்,'" (ஏசா. 40:29) என்ற வசனம் இங்கே குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....