Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 24 ஜூன், 2011

கேள்வி பதில்கள் 2 - பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா?

கேள்வி: பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா?

பதில்:
“அடிப்படையிலே நான் நல்ல மனிதன், ஆகவே, நான் பரலோகம் செல்வேன்” " நான் சில தீய காரியங்களை செய்திருந்தாலும், அதைவிட அதிகமாக நல்லகாரியங்களை நான் செய்கிறபடியால், நநன் பரலோகம் செல்வேன்." “ நான் வேதாகமத்தின்படி வாழவில்லையென்பதற்காக, தேவன் என்னை நரகத்திற்கு அனுப்பமாட்டார். காலம் மாறிவிட்டது!” உண்மையிலேயே மிகவும் மோசமானவர்களான குழந்தைகளுக்கு எதிராக பாலியல்ரீதியாக குற்றம்செய்கிறவர்கள், கொலைகாரர்கள் போன்றவர்கள்தான் நரகத்திற்கு செல்வார்கள்.”


இவைகள் ஜனங்களிடத்திலே, காணப்படும் பொதுவான விளக்கங்களா ஆகும். ஆனால் உண்மையென்னவெனில் இவைகள் அனைத்தும் பொய்யானவைகள். உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் நம் சிந்தையில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறான். சாத்தானும், அவனுடைய வழிகளைப் பின்பற்றுகிற எவரும் தேவனுக்கு பகைவர்கள் (1பேதுரு 5:8). சாத்தான் ஒரு ஏமாற்றுக்காரன், அவன் எப்பொழுதுமே தன்னை நல்லவனாக காண்பிக்கிறான் (2கொரிந்தியர் 11:14). ஆனால் தேவனைச் சார்ந்திராத மனங்கள் அனைத்தின் மீதும் அவனுக்கு ஆளுகை உண்டு. "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2கொரிந்தியர் 4:4).

தேவன் சிறிய பாவங்களைக் கண்டு கொள்வதில்லை அல்லது நரகமானது மிகவும் மோசமானவர்களுக்கே நரகம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவது ஒரு பொய் ஆகும். "ஒரு சிறிய பொய்" உட்பட எல்லாப் பாவமும் தேவனைவிட்டு நம்மை பிரிக்கிறது. எல்லாரும் பாவஞ்செய்து தாங்களாகவே சொந்த பிரயாசத்தினால் பரலோகத்தில் பிரவேசிக்கத்தக்க அளவில் நல்லவர்களாக இல்லை(ரோமர் 3:23). பரலோகத்திற்குள் செல்வது என்பது நன்மையானதைக் காட்டிலும், தீமை குறைந்த அளவில் இருப்பதை அடிப்படையாக வைத்து நடைபெறுகிற ஒரு காரியம் அல்ல. "(இரட்சிப்பு) கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது அப்படியல்லவென்றால் கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது (ரோமர் 11:6). பரலோகத்தில் செல்வதற்கான வழியைப் பெற நாம் எதுவும் செய்ய முடியாது(தீத்து. 3:5).

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்@ கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது@ அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்" (மத்தேயு 7:13). தேவனை நம்புவது என்பது மிகவும் குறைவாக இருக்கிற ஒரு கலாச்சாரத்தில் எல்லோரும் பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட, தேவன் அதை மன்னிக்கமாட்டார். "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்" (எபேசியர். 2:2).

தேவன் உலகத்தை சிருஷ்டித்த பொழுது, அது பூரணமானதாகவும், நல்லதாகவும் இருந்தது. பின்பு அவர்ஆதாமையும், ஏவாளையும் சிருஷ்டித்தார். மேலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிவதோ? அல்லது தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவதோ? அல்லது இல்லையோ என்ற தெரிந்துகொள்ளுதலாகிய சுய சித்தத்தை, அவர்களுக்கு தேவன் கொடுத்தார். ஆனால் அவர்கள் தேவனுக்கு கீழ்படியக் கூடாதபடிக்கு சாத்தானால் சோதனைக்குட்படுத்தப்பட்டு, பாவம் செய்தார்கள். இது அவர்கள்( அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொருவரும்) தேவனோடு ஒரு நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளக் கூடிய நிலையிலிருந்து பிரித்துவிட்டது. தேவன் பரிபூரணமுள்ளவர், அவர் பரிசுத்தமானவர். ஆகவே பாவத்தை நியாயந்தீர்த்தே ஆக வேண்டும். நாம் பாவிகளாயிருப்பதினாலே நம் சுய முயற்சியினால் நாம் தேவனுடன் நம்மை சீர்பொருந்தச் செய்யமுடியாது. ஆகவே நாம் பரலோகத்தில் தேவனுடன் இணைக்கப்படும்படியாக ஒரு வழியை உண்டாக்கினர். "தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனையடையும்படி, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16). " பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ,நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்(ரோமர் 6:23). நாம் அழியாதபடி, நமக்கு வழியைக் காண்பிக்கும்படி இயேசு கிறிஸ்து பிறந்து அவர் தாமே நமது பாவங்களுக்காக மரித்தார். அவர் தாம் மரித்து மூன்று நாட்களுக்குப் பிறகு கல்லறையிலிருந்து உயிர்த்தெழும்பி, மரணத்தின் மீதான தனது வெற்றியை நிரூபித்தார். ஜெயத்தை பெற்றுக் கொண்டதற்கு (ரோமர் 4:25). தேவனுக்கும், நமக்கும் நடுவாக இருந்த பிளவை கிறிஸ்து இணைத்தார். நாம் விசுவாசித்தால் மாத்திரமே நாம் அவருடன் ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்க முடியும்

“ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” (யோவான் 17:3). அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள், சாத்தானும் கூட விசுவாசிக்கிறான். இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு, மனந்திரும்பி, பாவங்களைவிட்டு விலகி அவரோடு ஒரு தனிப்பட்ட உறவை உருவாக்கி, அவரைப் பின்பற்ற வேண்டும். நாம் செய்கிற மற்றும் நம்மிடம் இருக்கிற அனைத்துக் காரியங்களிலும் இயேசு கிறிஸ்துவை நாம் நம்ப வேண்டும். "அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை" (ரோமர் 3:22).கிறிஸ்துவின் மூலமாகவேயன்றி இரட்சிப்பு இல்லையென்பதை வேதாகமம் தெளிவாக நமக்கு போதிக்கிறது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று யோவான் 14:6-ல் இயேசு கிறிஸ்து: சொல்லியிருக்கிறார்.

இரட்சிப்புக்கான ஒரே வழி. இயேசு கிறிஸ்துவே, ஏனென்றால் அவஒருவர் மாத்திரமே நமது பாவங்களுக்கான கிரயத்தை செலுத்த முடியும் (ரோமர் 6:23). வேறு எந்த மதமும், பாவத்தின் ஆழம் அல்லது ஆபத்தைக் குறித்தும், அதின் விளைவைக் குறித்தும் போதிப்பதில்லை. இயேசு கிறிஸ்து மாத்திரமே தரக் கூடிய பாவத்திற்கான நித்திய விலைக்கிரயத்தை, வேறு எந்த ஒரு மதமும் அருளுவதில்லை. மதத்தை தோற்றுவித்தவர்களில் எவரும் தேவனாக இருந்து மனிதனானதில்லை (யோவான் 1:1, 14). நம் கடனைச் செலுத்தி தீர்க்கும்படி இயேசு தேவனாக இருக்கவேண்டியதாயிருந்தது. அவர் மரிக்கும் படி ஒரு மனிதனாக இருக்க வேண்டியதாயிருந்தது. இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. "இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப்போஸ்தலர் 4:12).
கேள்வி: மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறீக்கிறது?

பதில்:
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறிக்கிறது? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வேதாகமத்தின் சிறந்த பகுதி யோவான் 3:1-21 ஆகும். ஆலோசனை சங்கத்தில் ஒரு உறுப்பினராகவும்(யூதர்களை ஆளுகை செய்பவர்களில் ஒருவன்), பிரபலமான பரிசேயராகவும் இருந்த நிக்கோதேமுவிடம் இயேசு கிறிஸ்து பேசிக் கொண்டிருந்தார். நிக்கோதேமு இராத்திரி வேளையிலே இயேசுவிடம் வந்தான். இயேசுவிடத்தில் கேட்கும்படி நிக்கோதேமுவிடம் கேள்விகள் இருந்தன.


இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் பேசும்பொழுது, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்” என்று சொன்னார். “அதற்கு நிக்கோதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படி பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து, பிறக்கக்கூடுமோ? என்றான். இயேசு பிரதியுத்தரமாக, ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டானென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உனக்கு சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்” என்றார். (யோவான் 3:3-7)

‘மறுபடியும் பிறத்தல்’ என்கிற பதம் எழுத்தின்படி ‘மேலிருந்து பிறத்தல்" என்பதைக் குறிக்கிறது. நிக்கோதேமுவுக்கு ஒரு உண்மையான தேவையிருந்தது. ஆவிக்குரிய மாற்றம் எனப்படும் இருதய மாற்றம் அவனுக்கு தேவையாயிருந்தது. புதுப்பிறப்பு, மறுபடியும் பிறந்தவர்களாக இருத்தல் என்பது விசுவாசிக்கிற ஒரு நபரிடம் நித்திய வாழ்வு உட்செலுத்தபடும் தேவனுடைய ஒரு செயல் ஆகும் (2கொரிந்தியர் 5:17, தீத்து. 3:5, 2பேதுரு 1:3, 1யோவான் 2:29; 3:9; 4:7; 5:1-4,18). இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உள்ள விசுவாசத்தின் மூலமாக “தேவனுடைய பிள்ளைகள் ஆகுதல்” என்கிற கருத்தையும் "மறுபடிப் பிறத்தல்" என்பது குறிப்பதாக யோவான் 1:12,13 கூறுகிறது.

"ஒருவன் ஏன் மறுபடியும் பிறப்பது அவசியமானதாக இருக்கிறது?" என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இயற்கையாகவே வரும். “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்த்தார்” என்று எபேசியர் 2:1ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். ரோமருக்கு எழுதும்போது, ரோமர் 3:23ல் அப்போஸ்தலன் எழுதியதாவது, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்.” ஆகவே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கும், தேவனோடு ஒரு உறவைப் கொள்ளும்படிக்கும், மறுபடியும் பிறத்தல் ஒரு நபருக்கு அவசியமாகிறது.

இது எப்படி நடக்கும்? “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” என்று எபேசியர் 2:8,9 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகிறது.. ஒருவன் "இரட்சிக்கப்படும்பொழுது", அவன் அல்லது அவள் மறுபடியும் பிறக்கின்றனர், ஆவியில் புதுப்பிக்கப்படுகின்றனர். மேலும் புது பிறப்பின் உரிமையினால், இப்போது தேவனுடைய ஒரு பிள்ளையாக இருக்கின்றனர். சிலுவையில் தாம் மரித்தபோது பாவத்திற்கான விலைக்கிரயத்தை செலுத்தி தீர்த்த ஒருவரகிய, இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, என்பது ஆவிக்குரியப் பிரகாரமாக "மறுபடியும் பிறத்தல்" ஐக் குறிக்கிறது. “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்” (2கொரிந்தியர் 5:17).

இதுவரை இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசியாமல் இருந்திருந்தால், ஆவியானவர் உங்கள் இருதயங்களில், இப்பொழுது ஏவினால் அதற்கு நீங்கள் ஒப்புக் கொடுப்பீர்களா? நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மனந்திரும்புதலுக்கான ஜெபத்தைச் செய்து, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இன்று மாறுவீர்ககளா? "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்" (யோவான் 1:12, 13).

இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மறுபடியும் பிறக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். நான் மன்னிக்கப்பட முடியும். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது?

பதில்:
துரித உணவு விடுதிகள் நாம் விரும்புகிறபடியே நமது உணவை வாங்க அனுமதிப்பதினால் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சில காபி கடைகள் தங்களிடம் நூற்றுக்கும் அதிகமான விதங்களில் மற்றும் (மணங்களில்) வாசனைகளில் காபி தருகிறோம் என்று சொல்லி பெருமைபட்டு கொள்கின்றனர். அப்படியே வீடுகளையும், கார்களையும் வாங்கும் போதும் நாம் விரும்புகிறபடி நாம் நமக்கு ஏற்ற விதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தே வாங்குகிறோம். உங்கள் சொந்த தேவைகள் மற்றும் விருப்பத்திற்குத்தக்கதாக நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


அதுபோல உங்களுக்கு சரியானதாக இருக்கும் ஒரு மார்க்கத்தைக் குறித்து என்ன? குற்றங்கள் இல்லாத, நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காத மற்றூம் அதைச் செய் இதைச் செய் என்று கூறி நம்மை அதிகம் தொந்தரவிபடுத்தாத மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது? நான் குறிப்பிட்டபடி பல மதங்கள் உள்ளன. ஆனால் மதமானது ஐஸ்கிரீமில் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்குவது போன்ற ஒரு காரியமா?

எத்தனையோ குரல்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. சே, முகமது அல்லது கன்பூசியஸ், புத்தர், சார்லஸ் டேஸ் ரசல் அல்லது ஜோசப் சுமித் என்பவர்களுக்கு மேலாக இயேசுவை ஏன் ஒருவர் கருதக் வேண்டும்? மொத்தத்தில், எல்லாசாலைகளும் பரலோகத்திற்குத்தானே வழிகாட்டுகின்றன? அடிப்படையில், எல்லா மதங்களும் ஒன்றுதானே? உண்மை என்னவெனில், எப்படி எல்லா சாலைகளும் இந்தியாவிற்கு நேராக செல்வதில்லையோ, அதுபோல எல்லா மதங்களும் பரலோகத்திற்கு வழிகாட்டுவது இல்லை.

இயேசுகிறிஸ்து மாத்திரமே மரணத்தை ஜெயித்தவராகையால், இயேசு மாத்திரமே தேவன் கொடுத்த அதிகாரத்தோடு பேசுகிறார் முகமது, கன்பூசியஸ், மற்றவர்கள் இந்த நாள்வரை கல்லறையிலேயே இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ, ரோமர்களின் கொடூரமான சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்கு பின்பு, தமது சொந்த வல்லமையினாலே உயிர்த்து கல்லறையை விட்டு வெளியே வந்தார். மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நம் கவனத்திற்குரியவர்கள். மரணத்தின் மீது வல்லமை உடையவர்கள் எவரும் சொல்பவை கேட்கப்படத்தக்கவை.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கும் சான்றுகள் மிகவும் அதிகமானவையாக இருக்கின்றன. முதலாவதாக, உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்கூடாகக் கண்ட 500 பேருக்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர். அதாவது ஏராளமான நேரடி சாட்சிகள் இருந்தன. 500பேரின் குரல்களை நாம் ஒதுக்கிதள்ள முடியாது. காலியான கல்லறையும் ஒரு சாட்சியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மரித்து போன சிதைந்த நிலையில் உள்ள சடலத்தைக் காண்பித்து உயிர்த்தெழுதலைக்குறித்த அனைத்து பேச்சுக்களையும் இயேசுவின் எதிரிகள் எளிதில் நிறுத்தியிருக்கலாம், ஆனால் அவ்வாறு காண்பிக்க அவர்களிடம் அவரின் சடலம் இல்லை. கல்லறை காலியாக இருந்தது. சீடர்கள் அவருடைய சரீரத்தை களவாடி இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அபடிப்பட்ட ஒரு நிலையை தவிர்க்கும்படி முனெச்சரிக்கையாக, இயேசுகிறிஸ்துவின் கல்லறை மூன்று நாட்களும் இராணுவவீரர்களால் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அவரது நெருங்கிய சகாக்கள் இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவுடன் பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டதைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த பய பீதியில் இருந்த அந்த மீனவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ வீரர்களோடு நேருக்குநேர் மோதி சடலத்தை திருடிச் செல்வது என்பது, இயலாத காரியம். அவர்களில் அனேகர் இரத்த சாட்சிகளாக மரித்தனர். ஒரு பொய்க்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்க மாட்டார்கள். எளிய உண்மை என்னவெனில், இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எவரும் மறுக்க முடியாது.

மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நாம் சொல்பவை நாம் கேட்கப்படதக்கவை. இயேசுகிறிஸ்து மரணத்தின் மேல் உள்ள தனது அதிகாரத்தை நிரூபித்து உள்ளார். ஆகவே அவர் சொல்வதை நாம் கேட்க வேண்டும். இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி நானே என்று இயேசு உரிமைப் பாராட்டினார் (யோவான்14:6). பல வழிகளில் அவர் ஒரு வழியல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவே வழி.

மேலும் இந்த இயேசு சொல்லுகிறதாவது, “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). நாம் வாழுகிற உலகம் கடினமான போராட்டம் நிறைந்த உலகம். அநேகர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, புண்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படித்தானே? இப்போது நமக்கு என்ன தேவை? மீட்பா அல்லது சாதாரண மதமா? உயிருள்ள இரட்சகரா அல்லது செத்துப்போன "தீர்க்கதரிசிகளில்" ஒருவரா? அர்த்தமுள்ள ஒரு உறவா? அல்லது வெறுமையான சடங்காச்சாரங்களா? இயேசுவைத் தவிர தெரிந்து கொள்ளப்படத்தக்கவர் வேறு யாரும் இல்லை.

நீங்கள் மன்னிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், இயேசுவே அந்த சரியான "மதம்" (அப்போஸ்தலர் 10;:43). நீங்கள் தேவனோடு அர்த்தமுள்ள ஒரு நல்ல உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால்,இயேசுவே அந்த சரியான "மதம்"(யோவான் 10:10). பரலோகத்தில் ஒரு நித்திய வீடு உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இயேசுவே அந்த சரியான "மதம்" (யோவான் 3:16). உங்கள் இரட்சகராக இயேசுகிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வையுங்கள், நீங்கள் வருத்தப்படவேண்டிய மாட்டீர்கள். உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக அவரில் நம்பிகை வையுங்கள். நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.

நீங்கள் தேவனுடன் ஒரு "சரியான உறவு" வைத்துக் கொள்ள விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

கேள்வி: இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது என்பது எதைக் குறிக்கிறது?

பதில்:
இயேசு கிறிஸ்துவை நீங்கள் உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? இந்தக் கேள்வியை சரியாக புரிந்துகொள்ளவேண்டுமெனில், நீங்கள் முதலாவதாக "இயேசுகிறிஸ்து," "சொந்தமான," மற்றும் "இரட்சகர்" ஆகிய பதங்களைப் புரிந்து கொள்ளவேண்டும்.


இயேசு கிறிஸ்து யார்? இயேசு கிறிஸ்து ஒரு நல்ல மனிதர், மிகப்பெரிய போதகர், அல்லது தேவனுடைய தீர்க்கதரிசி என்று கூட பலர் ஒப்புக்கொள்வர். இயேசுவைக் குறித்த இந்தக் காரியங்கள் நிச்சயமாகவே உண்மையானவை, ஆனால் அவர் உண்மையில் யாராக இருக்கிறார் என்பதை இவை முழுமையாக குறிப்பிடுவதில்லை. இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், மனித உருவில் வந்த இறைவன் என வேதாகமம் நமக்கு கூறுகிறது (யோவான் 1:1,14) நமக்கு போதிக்க, நம்மை சுகமாக்க, நம்மை சரிப்படுத்த, நம்மை மன்னிக்க மற்றும் நமக்காக மரிக்க தேவன் உலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து தேவன், சிருஸ்டிகர் மற்றும் மாட்சிமையுள்ள ஆண்டவர் ஆவார். இந்த இயேசுவை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

இரட்சகர் என்றால் என்ன? நமக்கு ஏன் ஒரு இரட்சகர் தேவை? நாம் எல்லாரும் பாவம் செய்தோம் என்றும் நாம் எல்லோரும் தீய செயல்களை செய்திருக்கிறோம் என்றும் வேதாகமம் நமக்கு கூறுகிறது (ரோமர் 3:10,18) நம் பாவத்தின் விளைவாக நாம் தேவகோபத்துக்கும் நியாத் தீர்ப்புக்கும் உரியவர்களானோம். முடிவிலாத அனாதி தேவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கான நீதியான தண்டனை நித்திய தண்டனையே (ரோமர் 6:23); வெளிப்படுத்தல் 20:11-15). ஆகவே தான் நமக்கு ஒரு இரட்சகர் தேவை.

இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து நமக்கு பதிலாக நம்முடைய இடத்தில் அவர் மரித்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திற்கான விலைமதிப்பற்ற கிரயம் ஆகும் (2கொரிந்தியர் 5:21) நமது பாவங்களுக்கான தண்டனையை இயேசு தீர்த்தார் (ரோமர் 5:8). நாம் செலுத்தாமலிருப்பதற்காக இயேசு அதை செலுத்தி தீர்த்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க போதுமானதாயிருந்தது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நிருபிக்கிறது ஆகவேதான் இயேசு ஒருவர் மாத்திரமே இரட்சகர் ஆக இருக்கிறார் (யோவான். 14:6, அப்போஸ்தலர். 4:12) உங்கள் இரட்சகர் இயேசுவை நம்புகிறீர்களா?

இயேசு உங்கள் "சொந்த" இரட்சகரா? ஆலயத்திற்கு செல்வது, சில சடங்காச்சாரங்களை செய்வது, சில பாவங்களை தவிர்ப்பது ஆகியவைதான் கிறிஸ்தவம் என அனேகர் கருதுகின்றனர். அது அல்ல கிறிஸதவம். உண்மையான கிறிஸ்தவம் என்பது இயேசுவுடனான தனிப்பட்ட உறவு ஆகும். உங்கள் சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவரில் உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வைப்பதைக் குறிக்கிறது. வேறொருவருடைய விசுவாசத்தினால் எவரும் இரட்சிக்கபடுவதில்லை.இரசிக்கப்படுகிறதற்கான ஒரே வழி இயேசுவை தனிப்பட்ட முறையில் உங்கள் இரட்சகராகவும், உங்கள் பாவங்களுக்கான விலைக்கிரயமாக அவரின் மரணத்தையும் அவருடைய உயிர்த்தெழுதலை நித்திய ஜீவனுக்கான உத்திரவாதமாகவும் ஏற்றுக் கொள்ளுவதே! (யோவான்3:16) இயேசு உங்கள் சொந்த இரட்சகரா?

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவிலும், சிலுவையில் அவர் செய்து முடித்த கிரியையிலும் வைக்கும் விசுவாசமும் மாத்திரமே பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

கேள்வி: இரட்சிப்பின் திட்டம் என்றால் என்ன?

பதில்:
நீங்கள் பசியுடன் இருக்கிறீர்களா? சரீரபிரகாரம் பசி அல்ல. உன் வாழ்கையில் ஏதோ ஒரு காரியத்தை குறித்தான ஆவல்? உனக்குள் உன்னை திருப்திபடுத்தாத காரியங்கள் ஏதாகிலும் உண்டா? அப்படியானால் இயேசுவே வழி! இயேசு சொன்னார் "ஜீவ அப்பம் நானே என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோ. 6:35).


குழப்பமா? வாழ்க்கையின் பாதை தெரியவில்லையா? யாரோ ஒருவர் உன் வாழ்க்கையின் ஒளியை அனைத்துவிட்டது போல் இருக்கின்றதா? ஆப்படியானால் இயேசுவே வழி! இயேசு சொன்னார் "நான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன் என்னை பின்பற்றுகிறவன் இருளிளே நடவாமல் ஜீவ ஒளியைப் அடைந்திருப்பான் என்றார்"(யோ.8:12).

உன் வாழ்கையில் கதவுகள் அடைபட்டுபோனதா? அனேக வழிகளை நீ முயற்சித்தும் அவைகள் வெறுமையும் அர்த்தமற்றதாய் இருக்கிறதா? உன் வாழ்வை ஏதாவது ஒரு வழியில் நிறப்பவேண்டும் என்றிருக்கிறாயா? ஆப்படியானால் இயேசுவே வழி! "நானே வாசல், என் வழியாய் உட்பிரவேசித்தால் மேய்ச்சலை கண்டடைவான்" (யோ. 10:9).

என்று இயேசு சொல்கிறார். மற்றவர்கள் எப்பொழுதும் உங்களை வெறுக்கிறார்களா? உன்னுடைய உறவில் ஆழமில்லையா? உறவு வெறுமையாய் தோன்றுகிறதா? யாராவது உன்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்களா? அப்படியானால் வழி இயேசுவை! இயேசு சொன்னார்" நானே நல்ல மேய்ப்பன்.

என்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா? அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்கிறேன் என்று சந்தேகப்படுகின்றாயா? நீ மரித்த பின்பு வாழ விரும்புகிறாயா? அப்படியானால் வழி இயேசுவே! இயேசு சொன்னார்" நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காய் தன் ஜீவனை கொடுக்கிறான்" (யோ. 10: 11,14).

இந்த வாழ்க்கைக்கு பின் என்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா "நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுசாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோ. 11:25-26, பிர. 7:20, ரோ. 3:23) நம்முடைய பாவத்தினாலே நாம் தேவனை விட்டு பிரிக்கப்பட்டோம் தேவனோடு ஐக்கியம் விட்டு போனது (யோ. 3:36).

உன்னுடைய வாழ்க்கையில் குழப்பங்கள் மாற உன்னுடைய பாவத்தை சுமந்து தீர்த்த கிறிஸ்துவிடம் வா (II கொரி. 5:21) நீ இரட்சிப்படைய வேண்டும் என்பதே அவர் திட்டம் அவர் விருப்பமும் கூட. அவர் ஒருவரால் மாத்திரம் உன் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க முடியும் அவர் ஒருவரே இரட்சிப்பின் வழி அவரை நோக்கி பார்! இரட்சிப்பார்! இரட்சிப்படைவாய்.
 
கேள்வி: கிறிஸ்தவம் என்றால் என்ன?

பதில்:
இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது "கிறிஸ்தவம்" அல்லது "கிறிஸ்தவன்" என்று "வெப்ஸ்டர்" என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது.


"கிறிஸ்தவம்" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு "கிறிஸ்தவர்கள்" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் "கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்" அல்லாத கிறிஸ்துவை "பின்பற்றுகிற கூட்டம்" "கிறிஸ்தவம்" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது.

திருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார். உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).
 
கேள்வி: ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் என்ன?

பதில்:
ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் ரோமரின் புஸ்தகத்திலிருந்து இரட்சிப்பின் பாதைக்கு நடத்துகிறதான வசனங்களை கொண்டு சுவிசேஷம் அறிவித்தல். இது ஓர் எளிய வழி ஆனால் தேவன் எப்படி இரட்சிப்பை அருளினார். நமக்கு ஏன் இரட்சிப்பு வேண்டும் நாம் எப்படி இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் வரும் பலன் என்ன என்று போதிக்கின்றதான வல்லமையான வழி.


ரோமரின் இரட்சிப்பு பாதையில் முதல் வசனம் (ரோ 3:23) "நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையறற்றவர்களானோம்" ஒருவரும் பேதைகளல்ல. தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தோம் (ரோமர் 3:10-18) வரையுள்ள வசனங்கள் நம் வாழ்க்கையின் பாவகாரியங்களை படம் பிடித்து காட்டுகின்றதாயிருக்கிறது. இரண்டாவது வசனம் (ரோமர் 6:23) பாவத்தினால் வரும் பலனை போதிக்கிறது பாவத்தினால் நாம் சம்பாதித்தது மரணம்.

சரிரபிரகாரமான மரணம் மாத்திரம் அல்ல கிருபை வரமோ நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காய் மரித்ததினால் தேவன் நம் மேல் வைதத அன்பை தெரியப் பண்ணினார். கிறிஸ்து நமக்கு நித்திய ஜீவன் அருளும் பொருட்டு பாவமில்லாத அவர் பாவமானார்.

நான்காவது (ரோமர் 10:9) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "நமக்காய் அவர் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நாம் இரட்சிக்கப்படுவோம் (ரோ 10:13) சொல்கிறது "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிற எவனும் இரட்சிக்கபடுவான்" நித்திய மரணத்தின்று நம்மை மீட்ட இயேசுவினை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு அவரிடம் வந்தால் நிச்சயம் அவர் பாவமன்னிப்பு அளித்து நித்திய வாழ்வை தருவார். இறுதியாக (ரோ 5:1)ம் வசனம் "இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்". ரோ 8:1 சொல்கிறது. "கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினையில்லை" கிறிஸ்து நமக்காய் நம்முடைய பாவங்களுக்காய் மரித்ததினாலே நாம் ஆக்கினை அடையமாட்டோம். இறுதியாக தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்த வசனத்தை பார்போம் ரோ8:38-39 "மரணமானாலும் ஜீவனானாலும். கர்த்தராகிய இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

கேள்வி: பாவிகளின் ஜெபம் என்றால் என்ன? நான் ஜெபிக்கலாமா?

பதில்:
பாவிகளின் ஜெபம் என்பது தான் ஒரு பாவி, எனக்கு இரட்சகர் வேண்டும் என்று அறிந்தவன் அல்லது உனர்ந்தவன் தேவனிடம் ஜெபிக்கும் ஜெபம். இந்த ஜெபத்தை செய்வதினால் அதின் மூலம் நமக்கு நன்மை ஒன்று பயக்காது. பாவிகளின் ஜெபம் என்பது நான் பாவி, செய்த தவறு என்ன? தனக்கு அதினின்று இரட்சிப்பு தேவை என்று உணரவைப்பதே.


பாவிகளின் ஜெபத்தின் முதல் நிலை நாம் அனைவரும் பாவிகள் என்று உணரவைப்பதே (ரோ3:10) "அந்தபடியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்று வேதம் தெளிவhய் சொல்கிறது நாம் அனைவரும் பாவிகள் தேவனுடைய இரக்கமும், மன்னிப்பும் நமக்கு தேவை (தீத்து 3:5) பாவத்தினாலே நாம் நித்திய தண்டனையை வருவித்து கொண்டோம். பாவிகளின் ஜெபமானது நியாயத்தீர்ப்புக்கு பதிலாய் கிருபையையும் தேவகோபத்திற்கு பதிலாய் இரக்கத்தையும் வேண்டி தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறதாயிருக்கிறது.

இரண்டாம் நிலையானது தேவன் பாவத்திலிருந்து நம்மை மீட்க அவர் பட்ட பாடுகளை உணர்த்துகிறது. நம்முடைய பாவங்களுக்காய் அவர் காயப்பட்டு மரித்து கல்வாரி சிலுவையில் மரணத்தை ஜெயமாக விழுங்கினார் (கொலோ2:15;இ 1கொரி 15) மரித்த கிறிஸ்து உயிரோடு எழுநதுஇ இன்றைக்கும் ஜீவித்து கொண்டிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது அவரை (1 கொரி. 15:1-15) விசுவாசித்து. அவர் எனக்காக நான் நித்திய ஜீவனை அடையும்படி அவர் மரித்தார் என்று நம்புவாயானால் நிச்சயமாய் அவர் உன் பாவத்தை மன்னித்து உன்னை இரட்சிப்பார்.

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular