பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்
கேள்வி: ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா?
பதில்: ஒருவர் ஒருமுறை இரட்சிக்கப்பட்டிருந்தால் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா? மக்கள் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக அறிந்துகொள்ளும் போது அவர்கள் கர்த்தரோடே ஒரு உறவுக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். இந்த உறவு அவர்களுடைய இரட்சிப்பை எப்பொழுதுமே பாதுகாக்கப்பட்ட ஒன்றாக உத்திரவாதம் அளிக்கிறது. பல வேத பகுதிகள் இந்த உண்மையை அறிவிக்கின்றன.
(a) “எவர்களை முன்குறித்திருக்கிறாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார் எவர்களை அழைத்திருக்கிறார் அவர்களை நீதிமான்களாக்கியுமிருகிறார், எவர்களை நீதிமான்களாக்கியிருக்கிறாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்று ரோமர் 8:30 கூறுகிறது. கர்த்தர் நம்மைத் தெரிந்துகொண்ட பொழுதிலிருந்தே பரலோகத்தில் அவருடைய பிரசன்னத்தில் மகிமையடைச்செய்தது போலிருக்கும். விசுவாசி ஒரு நாள் மகிமையில் பிரவேசிப்பதை எதுவும் தடைசெய்ய முடியாது ஏனென்றால் கர்த்தர் இதை முன்னதாகவே பரலோகத்தில் திட்டம் பண்ணியிருக்கிறார். ஒருவர் நீதிமானாக்கப்பட்டால் அவர் இரட்ச்சிப்புக்கு உத்திரவாதம் உண்டு – அவருக்கு இருக்கும் பாதுகாப்பு. அவர் ஏற்கனவே பரலோகத்தில் மகிமைப்பட்டுவிட்டது போன்றது.
(b) ரோமர் 833-34ல் பவுல் இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார் “தேவன் தெரிந்து கொண்டவர் மேல் குற்றஞ்சாட்டுகிறவர் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறார்; அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர் நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” தேவன் தெரிந்து கொண்டவர் மேல் குற்றஞ்சாட்டுகிறவர் யார்? யாருமில்லை ஏனென்றால் கிறிஸ்துவே நமக்காக ப்ரிந்து பேசுகிறவராக இருக்கிறார். யார் நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பவர்? ஒருவருமில்லை ஏனெனில் நமக்காக மரித்த கிறிஸ்துவே நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர். நமக்காகப் பரிந்து பேசுகிறவரும், நம்மை நியாயந் தீர்க்கிறவரும் நம் இரட்சகரே.
(c) விசுவாசிகள் விசுவசிக்கும்போது மறுபடி பிறக்கிறார்கள் (மறுபடி ஜெனிப்பிக்கப்படுதல்) (யோவான் 3:3, தீத்து 3:5). ஒரு கிறிஸ்தவர் இரட்சிப்பை இழப்பதற்கு, அவர் மறுபடி ஜெனிப்பிக்கப்படாமலிருக்க வேண்டும். மறுபடி பிறத்தல் எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்கு வேதாகமம் எந்த சான்றும் கொடுக்கவில்லை.
(d) பரிசுத்த ஆவியானவர் எல்லா விசுவாசிகளுக்குள்ளும் தங்கி வாசம் செய்கிறார் (யோவான் 14:17; ரோமர் 8:9); எல்லா விசுவாசிகளையும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணுகிறார் (1 கொரிந்தியர் 12:13). ஒரு விசுவாசி இரட்சிக்கப்பட்டதிலிருந்து விலகிப் போகவேண்டுமானால், அவருக்குள் “வாசம் பண்ணப்படாமலும்” கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து பிரிந்திருக்கவும் வேண்டும்.
(e) யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறாரோ அவருக்கு “நித்திய வாழ்வு உண்டு என்று யோவான் 3:15 கூறுகிறது. கிறிஸ்துவில் நீங்கள் இன்று விசுவாசித்து நித்திய வாழ்வைப் பெற்றுக் கொண்டு நாளை அதை இழந்துபோனால் அது “நித்தியமானதாக” ஒருபோதும் இருந்திருக்க முடியாது. ஆகவே நீங்கள் இரட்சிப்பை இழந்தால் வேதாகமத்தில் நித்திய ஜீவனைக் குறித்த வாக்குத்தத்தங்கள் தவறாயிருக்கும்.
(f) விவாத்தின் இறுதியான் முடிவுக்கு வேதபகுதியே சிறந்த விளக்கத்தை அளிக்கிறது என்று கருதுகிறேன், “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானுலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” ரோமர் 8:38-39). உங்களை இரட்சித்த தேவனே உங்களை காக்க வல்லவர். நாம் ஒருமுறை இரட்சிக்கப்பட்டோமானால் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டிருப்போம். நம்முடைய இரட்சிப்பு மிக நிச்சயமாக நித்தியத்திற்கும் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

கேள்வி: கலப்பினத் திருமணத்தைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?
பதில்: கலப்பினத் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டது (உபாகமம் 7:3-4). இருப்பினும், இதன் காரணம் அடிப்படையாக இனம் சார்ந்ததல்ல, மாறாக மதம் சார்ந்தது. தேவன் மற்ற இனத்தாருடன் சம்பந்தங்கலவாதிருக்கும்படிக் கட்டளை கொடுத்ததின் நோக்கம் அவர்கள் விக்கிரகாராதனைக்காரர்களும் பொய்யான தெய்வங்களை வணங்குகிறவர்களுமாயிருந்ததுதான். விக்கிரகாரதனைக்காரர்கள், அந்நிய தெய்வங்களை வணங்குகிறவர்கள், மற்றும் புறஜாதியாருடனும் கலப்புத்திருமணம் செய்தால் இஸ்ரவேலர்கள் கர்த்தரைவிட்டு விலகிப் போவார்கள். இதைப்போன்ற ஒரு கோட்பாடே புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டாலும் அதன் நிலை வேறு: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” (2 கொரிந்தியர் 6:14). இஸ்ரவேலர்கள் (ஒரே மெய்யான தேவனில் விசுவாசங் கொண்டவர்கள்) விக்கிரகாராதனைக்காரர்களைத் திருமணஞ் செய்துகொள்ளக்கூடாது என்று கட்டளையிடப்பட்டதைப் போலவே, கிறிஸ்தவர்களும் (ஒரே மெய்யான தேவனில் விசுவாசங் கொண்டவர்கள்) அவிசுவாசிகளைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கட்டளை பெற்றனர். இந்தக் கேள்விக்குக் குறிப்பிட்டு பதிலளிக்க வேண்டுமென்றால், இல்லை, கலப்புத்திருமணம் தவறு என்று வேதாகமம் கூறவில்லை.
மார்ட்டின் லூதர் சொன்னதைப் போலவே, குணத்தை வைத்து ஒரு மனிதரை எடைபோடலாமே ஒழிய நிறத்தை வைத்து அல்ல. இனத்தை வைத்து பாரபட்சம் பார்ப்பதற்கு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் இடமில்லை (யாக்கோபு 2:1-10). துணையைத் தெரிந்தெடுக்கும்பொழுது, தன்னை மணம் செய்துகொள்ளப்போகிறவர் இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசங்கொண்டு மறுபடி பிறந்தவரா எனப்தை ஒரு கிறிஸ்தவர் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். துணையை தெரிந்தெடுக்க வேதாகமம் கூறும் தரம் கிறிஸ்துவில் நம்பிக்கை, நிறமல்ல (யோவான் 3:3-5). கலப்பினத்திருமணம் சரியா தவறா என்ற காரியமல்ல, மாறாக, அது ஞானத்தையும், பகுத்தறிதலையும் ஜெபத்தையும் குறித்தது.
அதை ஏற்றுக்கொள்ள முடியாத வேற்று மனிதர்களால் கலப்புத்திருமணம் செய்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் பிரச்சினைகள்தான் கலப்பினத்திருமணங்களை குறித்து நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரணம். ஒதுக்கப்ப்டுவதும் கேலிக்குள்ளாவதும் பல கலப்பினத் தம்பதிகள் அனுபவிக்கும் ஒன்று. சில வேளைகளில் இது சொந்த வீட்டாரிடமிருந்தே வருகிறது. தங்களது குழந்தைகளின் நிறம் பெற்றோரிடமிருந்தும் கூடப்பிறந்தவர்களிடமிருந்தும் மாறுபடும்பொழுது சில கலப்பினத் தம்பதிகள் மத்தியில் பிரச்சினை வருகிறது. திருமணம் செய்வதற்கு முடிவெடுக்கும்பொழுது இந்தக் காரியங்களைக் கறுத்தில்கொண்டு அவற்றிர்க்குத் தயாராயிருக்க வேண்டும். மீண்டுமாக, ஒரு கிறிஸ்தவர் யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் வேதாகமம் இடும் ஒரே கட்டுப்பாடு அந்த நபர் கிறிஸ்துவின் உடலாகிய சபையிலே அங்கத்தினரா என்பதுதான்.
கேள்வி: பெண் சபை மேய்ப்பர்கள்/பிரசங்கியார்கள்? ஊழியத்தில் உள்ள பெண்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்: பெண்கள் மேய்ப்பர்களாகவும் பிரசங்கிகளாகவும் பணியாற்றுவதைப் பற்றியதான கேள்வியைவிட பெரிய சர்ச்சை இன்றைய நாளிலே சபையிலே வேறொன்றுமில்லை. இதன் விளைவாக, ஆண்களா பெண்களா என்ற விவாதமாக இதைப் பார்க்கமலிருப்பது மிகவும் முக்கியம். பெண்கள் மேய்ப்பர்களாக பணியாற்றக் கூடாது, வேதாகமம்கூட பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கிறது என்று நம்புகிற பெண்களும் உண்டு. பெண்கள் மேய்ப்பர்களாக பணியாற்றலாம், பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று நம்புகிற ஆண்களும் உண்டு. இது ஆணாதிக்கமோ வேற்றுமை பாராட்டுதலோ குறித்த பிரச்சினை அல்ல. இது வேதாகம விளக்கம் அல்லது புரிதலைப் பற்றியது.
“ஸ்த்ரீயானவள்...”(1 தீமோத்தேயு2:11-12) என்று வேதாகமம் எடுத்துரைக்கிறது. கர்த்தர் சபையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு பொறுப்புக்களை நியமிக்கிறார். இது மனிதகுலம் உண்டாக்கப்பட்டதின் மற்றும் பாவம் உலகில் தோன்றிய விதத்தின் விளைவு (1 தீமோத்தேயு2:13-14). கர்த்தரே, பெண்கள் போதிக்கும் மற்றும் ஆண்களின் மீது ஆவிக்குரிய அதிகாரம் செலுத்தும் பொறுப்புகளில் பணியாற்றுவதை, அப்போஸ்தலர் பவுலின் வழியாக, கட்டுப்படுத்துகிறார். இது பெண்கள் சபையிலே மேய்ப்பர்களாக பணியாற்றுவதை விலக்குகிறது. மேய்ப்பர்கள் என்பது ஆண்களுக்குப் பிரசங்கிப்பதையும், போதிப்பதையும், ஆண்கள்மேல் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்துவதயும் உள்ளடக்கும்.
பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவதைக் குறித்தான இந்தக் கண்ணோட்டத்திற்க்கு பல “மறுப்புகள்” கூறப்படுகின்றன. ஒரு பொதுவான மறுப்பு என்னவென்றால் முதாலாம் நூற்றாண்டிலே பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள், ஆகையால் பவுல் அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறார் என்பது. ஆனாலும் 1 தீமோத்தேயு 2:13-14 -ல் படிப்பறிவைக் குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. படிப்பறிவு ஊழியத்திற்கு ஒரு தகுதியாய் இருக்குமேயானால், இயேசுவின் சீடர்களில் பெரும்பாலோனோர் தகுதி பெற்றிருக்க முடியாது. பொதுவாக சொல்லப்படும் இரண்டாவது மறுப்பு பவுல் எபேசுவிலுள்ள பெண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கிறார் என்பது (1 தீமோத்தேயு எபேசுவிலிருந்த சபைக்கு மேய்ப்பராயிருந்த தீமோத்தேயுவிற்கு எழுதப்பட்டது என்பது. எபேசு பட்டணம் ஆர்டிமிஸ் என்ற உண்மையற்ற கிரேக்க/ரோம தேவதையின் கோயிலுக்குப் பேர்பெற்றது. ஆர்டிமிஸ்ஸின் வழிபாட்டிலே பெண்களே அதிகாரம் பெற்றிருந்தனர். ஆனாலும் 1 தீமோத்தேயுக்கான நிருபம் ஆர்டிம்ஸ்ஸைப் பற்றி எங்கும் குறிப்பிடுவதில்லை. பவுலும் ஆர்டிமிஸ் வழிபாட்டை கட்டுப்பாடுகளுக்கான காரணமாகக் 1 தீமோத்தேயு2:11-12 –ல் குறிப்பிடுவதில்லை
பொதுவாகக் கூறப்படும் மூன்றாவது மறுப்பு என்னவெனில், பவுல் கணவர்களையும் மனைவியரையும் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறாரே தவிர பொதுவாக ஆண்களையும் பெண்களையும் குறித்தல்ல. இப்பகுதியில் உள்ள கிரேக்கச் சொற்கள் கணவர்களையும் மனைவியரையும் குறிப்பிடலாம், ஆனாலும் இவ்வார்த்தைகளின் முதன்மைப் பொருள் ஆண்களையும் பெண்களையுமே குறிக்கிறது. மேலும் இதே சொற்கள் 8 முதல்10 வரை உள்ள வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8ஆவது வசனத்தில் சொல்லப்பட்டபடி கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி செபிக்க வேண்டியது கணவர்கள் (புருஷர்கள்) மட்டும்தானா? தகுதியான வஸ்திரத்தினாலும், நற்கிரியைகளினாலும் தேவனை ஆராதிக்க வேண்டியது பெண்கள் (ஸ்திரீகள்) மட்டும்தானா? அப்படி இல்லை. 8 முதல் 10 வரை உள்ள வசனங்கள் கணவரையும் மனைவியரை மட்டுமல்ல அனைத்து ஆண்களையும் பெண்களையும் குறிக்கிறது. 11 முதல் 14 முடிய உள்ள வசனங்களில் கணவரையும் மனைவியரையும் மட்டும் குறிக்க மாறுகிறது என்று சொல்வதற்கான சூழ்நிலைக்காரணங்கள் ஒன்றுமில்லை.
ஊழியத்தில் பெண்கள் ஈடுபடுவதை பற்றிய இந்த கருத்துக்கு மற்றொரு மறுப்பு வேதாகமத்தில் தலைமை பதவி பெற்றிருந்த பெண்கள், குறிப்பாக பழைய ஏற்பாட்டின் மிரியாம், தெபொராள், ஹுல்தாள் போன்றவர்களின் எடுத்துக்காட்டாகும். இந்த மறுப்பு சில முக்கியமான காரணங்களை கவனத்தில் கொள்வதில்லை. முதலாவதாக, இருந்த 13 நியாயாதிபதிகளில் தெபொராள் மாத்திரமே பெண் நியாயாதிபதி. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பல டஜன் தீர்க்கதரிசிகளில் ஹுல்தாள் ஒருத்தி மாத்திரமே ஒரே பெண் தீர்க்கதரிசி. மிரியாமுக்கும் தலைமைப் பதவிக்கும் உள்ள ஒரே சம்பந்தம் அவள் மோசே ஆரோன் என்பவர்களின் சகோதரி எனப்படுவதே. அத்தாலியா, யெசெபெல் என்று ராஜாக்களின் காலத்தில் இருந்த இரண்டு முக்கியமான் பெண்களை தேவனுக்கேற்ற பெண் தலைவர்கள் என்று சற்றேனும் கருதமுடியாது. இன்னும் சொல்லப்போனால், பழைய ஏற்பாட்டில் பெண்களின் அதிகாரம் என்பது ஒரு தேவையில்லாத கருத்து. கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபைக்கு 1 தீமோத்தேயு மற்றும் இதர சபை கண்காணிப்பு பற்றிய நிருபங்கள் ஒரு புதிய கோட்பாட்டுக் கண்ணோட்டத்தை முன் வைக்கின்றன. அது இஸ்ரவேல் ராஜ்ஜியத்திற்கோ, பழைய ஏற்பாட்டு அமைப்புக்கோ அல்லாமல் சபைக்கு அதிகார கட்டமைப்பை பற்றியது.
புதிய ஏற்பாட்டில் பிரிஸ்கில்லாளும் பெபேயாள் போன்றவர்களை வைத்தும் இது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிர்ஸ்கில்லாளும் ஆக்கில்லாளும் கிறிஸ்துவுக்காக உண்மையுள்ள ஊழியக்காரர்களாக அப்போஸ்தலர் நடபடிகள் 18 ஆம் அதிகாரத்தில் கூறப்படுகின்றனர். பிரிஸ்கில்லாளின் பெயர் அவள் கணவரின் பெயருக்கு முன்னரே வருவது அவளது முக்கியத்துவத்தைக் குறிப்பதற்காக இருக்கலாம். ஆனாலும் 1 தீமோத்தேயு 2:11-14ல் கூறப்படுவதற்கு முரண்பாடான ஊழிய காரியத்தில் பிரிஸ்கில்லாள் ஈடுபட்டதாக எங்கும் விவரிக்கப்படவில்லை. பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாளும் அப்பொல்லோவை தங்கள் வீட்டினுள் சேர்த்து கர்த்தருடைய வார்த்தையை போதித்து அவனை சீஷத்துவத்துக்குள் நடத்தினார்கள் (அப்போஸ்தலர் நடபடிகள் 18:26).
ரோமர் 16:1 –ல் பெபேயாள் ஊழியக்கார்ருக்குப் பதில் உதவிக்காரர் என்று கருதப்படும்பொழுதுகூட அது சபையிலே பெபேயாள் ஒரு போதகர் என்று குறிப்பதாயில்லை. “போதக சமர்த்தன்” என்பது மூப்பர்களுக்காக கொடுக்கப்பட்ட தகுதியேயன்றி உதவிக்காரருக்குக் கொடுக்கப்பட்டதல்ல (1 தீமோத்தேயு 3:1-13; தீத்து 1:6-9). மூப்பர்கள்/கண்காணிப்பாளர்கள்/உதவிக்காரர் இவர்களைப் பற்றி “ஒரே மனைவியுடைய புருஷனும்”, “பிள்ளைகள் நல்லொழுக்கமுள்ளவர்களாய் கீழ்ப்படியப்பண்ணுகிறவர்களும்”, “மதிக்கப்படத்தக்கவர்களாயும்” என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா தகுதிகளுமே தெளிவாக ஆண்களையே குறிக்கிறது. இதோடு கூட மூப்பர்கள்/கண்காணிப்பாளர்கள்/உதவிக்காரர் பற்றிக் குறிப்பிட 1 தீமோத்தேயு 3:1-13-லும் தீத்து 1:6-9-லும் ஆண்பால் துணைப்பெயர்கள் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன.
1 தீமோத்தேயு 2:11-14வின் கட்டமைப்பு “காரணத்தை” தெளிவுபடுத்துகிறது. 13ஆம் வசனம் “என்னத்திலானெனில்” என்று ஆரம்பித்து 11-12ஆம் வசனங்களில் பவலின் கூற்றுக்கான “காரணங்களைக்” குறிப்பிடுகிறது. எதனால் பெண்கள் போதிக்கவோ, ஆண்கள் மேல் அதிகாரம் செலுத்தவோ கூடாது? ஏனென்றால் “முதலில் ஆதாம் படைக்கப்பட்டான், பின்பு ஏவாள். ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஏவாளே வஞ்சிக்கப்பட்டாள்.” தேவன் ஆதாமை முதலாவதாக படைத்தபின்பு ஏவாளை ஆதாமுக்குத் “துணையாகப்” படைத்தார். படைப்பின் இந்த வரிசையமைப்பு குடும்பங்களுக்கும்(எபேசியர் 5:22-23) சபைக்கும் பொதுவாகப் பொருந்தும். ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள் என்பது பெண்கள் சபைமேய்ப்பர்களாக பொறுப்பேற்கவோ ஆண்களின் மீது அதிகாரம் செலுத்தவோ கூடாது என்பதற்கும் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் விரைவில் வஞ்சிக்கப்படுபவர்கள் ஆகவே அவர்கள் போதிக்கக்கூடாது என்று சிலரை நம்பவைக்கிறது. இது விவாதத்திற்குரிய கருத்து. பெண்கள் விரைவில் வஞ்சிக்கப்படுபவர்கள் என்றால் குழந்தைகளுக்கும் (விரைவில் வஞ்சிக்கப்படக்கூடியவர்கள்) பெண்களுக்கும் (மிக விரைவில் வஞ்சிக்கப்படக்கூடியவர்கள்) அவர்களை ஏன் போதிக்க அனுமதிக்க வேண்டும். எழுதப்பட்டது இப்படிக் கூறவில்லை. ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள் என்பதால் பெண்கள் ஆண்களுக்குப் போதிக்கவோ ஆண்கள் மேல் அதிகாரம் செலுத்தவோ கூடாது. இதன் காரணமாக, சபையிலே போதிப்பதற்கான் முதன்மையிடத்தை கர்த்தர் ஆண்களுக்கு கொடுத்துள்ளார்.
பல பெண்கள் விருந்தோம்பல், இரக்கம், போதனை, பணிவிடை ஆகிய வரங்களில் சிறந்து விளங்குகின்றனர். உள்ளுர் சபையின் பெரும்பாலான ஊழியம் பெண்களைச் சார்ந்துள்ளது. சபையிலே ஆண்களின் மேல் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்துவதற்கு மட்டுமே பெண்கள் தடைசெய்யப்படுகின்றனர், பொது இடத்தில் ஜெபிப்பதற்கோ, தீர்க்கதரிசனம் உரைப்பதற்கோ அல்ல (1 கொரிந்தியர் 11:5). பரிசுத்த ஆவியின் வரங்களை உபயோகிப்பதற்கு வேதாகமம் எங்கும் தடைசெய்வதில்லை (1 கொரிந்தியர் 12). மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்கும், ஆவியின் கனியை நிரூபித்துக் காண்பிப்பதற்கும் (கலாத்தியர் 5:22-23), இழந்துபோனவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும் (மத்தேயு28:18-20; அப்போஸ்தலர் நடபடிகள்1:8-1; 1 பேதுரு3:15) ஆண்களைப் போலவே பெண்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
சபையிலே ஆவிக்குரிய போதனையை வழங்கும் பதவிகளில் பணியாற்ற கர்த்தர் ஆண்களை மட்டுமே பிரதிஷ்டை செய்துள்ளார். இது ஆண்கள் போதிப்பதில் சிறந்தவர்கள் அல்லது பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்லது அறிவில் குறைந்தவர்கள் (இது உண்மையல்ல) என்பதால் அல்ல. சபை நடைபெறும்படி கர்த்தர் வடிவமைத்த வெறும் ஒரு வழிதான் இது. தங்களுடைய வாழ்க்கையின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் ஆண்களே ஆவிக்குரிய தலைமைக்கு ஒரு மாதிரி அமைக்க வேண்டும். சற்றே குறைவான அதிகாரமுள்ள பாத்திரங்களை பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் மற்ற பெண்களுக்கு போதிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள் (தீத்து 2:3-5). பெண்கள் குழந்தைகளுக்குப் போதிப்பதையும் வேதாகமம் தடைசெய்வதில்லை. ஆண்களுக்குப் போதிப்பதற்கும் அவர்கள் மேல் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்துவதற்கும் மட்டுமே பெண்கள் தடைசெய்யப்பட்டுள்ளார்கள். இது தர்க்கரீதியாக மேய்ப்பர்களாகவும் பிரசங்கிகளாகவும் பணியாற்றுவதிலிதிலிருந்து பெண்களை விலக்கிவைக்கிறது. இது பெண்களை எவ்விதத்திலும் மதிப்பில் குறைந்தவர்களாக்கவில்லை, மாறாக் இது அவர்களுக்கு தேவனுடைய ஊழியத்தின் பங்கில் அவருடைய திட்டத்திற்கும் அவர் அவர்களுக்கு அருளும் வரங்களுக்கும் ஏற்ற நோக்கத்தைக் கொடுக்கிறது.

கேள்வி: தற்கொலையைப் பற்றிய கிறிஸ்தவ கண்ணோட்டம் என்ன? தற்கொலையைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது?
பதில்: தற்கொலை செய்துகொண்ட ஒரு குறிப்பிட்ட ஆறுபேரைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. அபிமெலெக்கு (நியாதிபதிகள் 9:54), சவுல் (1 சாமுவேல் 31:4), சவுலின் ஆயுததாரி (1 சாமுவேல் 31:4-6), அகிதோப்பேல் (2 சாமுவேல் 17:23), சிம்ரி (I ராஜாக்கள் 16:18) மற்றும் யூதாஸ் (மத்தேயு 27:5). இதில் ஐந்துபேர் அக்கிரமக்காரரும் பாவிகளுமான மனிதர்கள் (சவுலின் ஆயுத்தாரியின் எப்படிப்பட்டவன் என்று கணிக்கப் போதுமான தகவல் சொல்லப்படவில்லை). சிலர் சிம்சோனின் சாவும் தற்கொலையே (நியாதிபதிகள் 16:23-31) என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிம்சோனின் நோக்கம் தன்னைத்தான் கொல்வது அல்ல, பெலிஸ்தரை கொன்று வீழ்த்துவதுதான். வேதாகமக் கண்ணோட்டத்தில் தற்கொலை, கொலைக்குச் சமம். தன்னைத்தான் கொல்வது என்பதைத் தவிர அது வேறொன்றுமில்லை. ஒரு மனிதன் எப்போது, எப்படி மரிப்பது என்று தீர்மானிப்பது தேவன் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.
வேதாகமத்தின்படி, ஒரு மனிதன் பரலோகத்திற்கு செல்வது என்பதைத் தீர்மானிப்பது தற்கொலை அல்ல. இரட்சிக்கப்படாத மனிதர் தற்கொலை செய்துகொண்டால் அவர் நரகத்திற்கு செல்வதைத் “துரிதமாக்கிக்கொண்டார்” என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனாலும் அந்த மனிதர் தற்கொலை செய்துகொண்டதற்காக அல்ல, கிறிஸ்துவின் மூலமாய் வரும் இரட்சிப்பை நிராகரித்தார் என்பதற்காகவே நரகத்திலிருப்பார். தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கிறிஸ்தவரைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? நாம் உண்மையாகவே கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளும் நிமிடத்திலிருந்தே நமக்கு நித்திய ஜீவனின் நிச்சயம் கிடைக்கிறது என்று வேதாகமம் போதிக்கிறது (யோவான் 3:16). வேதாகமத்தின்படி, நித்திய ஜீவன் நமக்கு உண்டு என்பதை எந்த சந்தேகமுமின்றி கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ளலாம் (1 யோவான் 5:13). தேவனுடைய அன்பைவிட்டு ஒரு கிறிஸ்தவனை எதுவும் பிரிக்க இயலாது (ரோமர் 8:38-39). “உண்டாக்கப்பட்ட எதுவும்” தேவனுடைய அன்பைவிட்டு ஒரு கிறிஸ்தவரைப் பிரிக்க முடியாது என்றால், தற்கொலை கூட ஒரு கிறிஸ்தவரைத் தேவனுடைய அன்பைவிட்டு பிரிக்க இயலாது. இயேசு நம்முடைய எல்லோருடைய பாவங்களுக்காகவும் மரித்தார். ஆகவே ஆன்மீகத் தாக்குதலும் பலவீனமும் நிகழும் ஒரு நேரத்தில் ஒரு கிறிஸ்தவர் தற்கொலை செய்துகொண்டாலும் அது இன்னமும் கிறிஸ்துவின் இரத்தால் மறக்கப்பட்ட பாவமாகவே அது இருக்கிறது.
தற்கொலை இன்னமும் தேவனுக்கெதிரான ஒரு கடுமையான பாவம். வேதாகமத்தின்படி, தற்கொலை என்பது கொலையே, அது எப்போதுமே தவறானது. கிறிஸ்தவர் என்று கூறிக்கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொல்லும்போது அவரது விசுவாசம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்தான கடுமையான சந்தேகங்களை எழுப்பத்தான் வேண்டும். தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் ஒருவரை, குறிப்பாக ஒரு கிறிஸ்தவரை, எந்தச் சூழ்நிலையும் நியாயப்படுத்த முடியாது. தேவனுக்காக வாழ்க்கையை வாழ்வது என்பதற்காகவே கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, எப்பொழுது மரிக்க வேண்டும் என்ற தீர்மானம் கர்த்தருடையது, கர்த்தருடையாதக மட்டுமே இருக்க வேண்டும். தற்கொலையைப் பற்றி விவரிக்கவில்லையெனினும், தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கிறிஸ்தவருக்கு நடப்பது என்ன என்பதைப் பற்றி 1 கொரிந்தியர் 3:15 நன்றாகவே விவரிக்கிறது: “அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியலக்கப்பட்டு தப்பினது போலிருக்கும்.”

கேள்வி: நித்திய பாதுகாப்பு வேதாகமப்படியானதுதானா?
பதில்: மக்கள் கிறிஸ்துவை இரட்சகராக அறிந்துகொள்ளும்பொழுது, நித்திய பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கும், தேவனோடு கூடிய ஒர் உறவுக்குள் கொண்டுவரப் படுகிறார்கள். “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்” என்று யூதா 24 அறிவிக்கிறது. கர்த்தரின் வல்லமை விசுவாசியை வழுவாமல் காக்க முடியும். தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே நம்மை நிறுத்துவது அவரைப் பொறுத்தது, நம்மைப் பொறுத்ததன்று. நமது நித்திய பாதுகாப்பு நாம் நம்முடைய இரட்சிப்பை பாதுகாத்துக்கொள்வதல்ல, அது கர்த்தர் நம்மைக் காப்பதன் விளைவு.
“நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.” (யோவான் 10:28-29) என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உரைக்கிறார். இயேசுவும் பிதாவும் தங்களுடைய கரங்களில் நம்மை உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள். பிதா, குமாரன் இருவருடைய இறுக்கமான பிடியிலிருந்து நம்மைப் பிரிப்பவர் யார்?
விசுவாசிகள் “மீட்பின் நாளுக்கென்று முத்திரையிடப்பட்டிருக்கிறார்கள்” என்று எபேசியர் 4:30 கூறுகிறது. விசுவாசிகளுக்கு நித்திய பாதுகாப்பு இல்லையெனில், முத்திரையிடப்படுவது மீட்பின் நாளுக்கென்பதாக உண்மையில் அல்ல, வெறும் பாவத்தில் விழும், விசுவாசத்தை மறுதலிக்கும், நம்பிக்கை இழக்கும் நாள்வரை என்றுதான் இருக்க முடியும். யாரெல்லாம் இயேசுக் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு “நித்திய ஜீவன் உண்டு” என்பதாக யோவான் 3:15-16 கூறுகிறது. ஒருவருக்கு நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டு பின்னர் அது எடுக்கப்பட்டுவிடுமெனில் அது முதலாவது “நித்தியமாக” இருக்கமுடியாது. நித்திய பாதுகாப்பு உண்மையில்லையெனில், வேதாகமத்தில் நித்திய ஜீவனைக் குறித்தான வாக்குத்தத்தங்கள் அனைத்தும் தவறானதாக இருக்கும்.
நித்திய பாதுகாப்புக்கான மிக வலிமையான வாதம் ரோமர் 8:38-39 ஆகும், “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ளா தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். நமது நித்திய பாதுகாப்பு, தம்மாலே மீட்கப்பட்டவர்களுக்கான கர்த்தருடைய அன்பை ஆதாரமாகக் கொண்டது. நமது நித்திய பாதுகாப்பு, கிறிஸ்துவாலே சம்பாதிக்கப்பட்டும், பிதாவாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டும், பரிசுத்த ஆவியினாலே முத்திரையிடப்பட்டுமிருக்கிறது.

கேள்வி: மரணத்திற்குப்பின் நடப்பது என்ன?
பதில்: மரணத்திற்குப்பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயே கொஞ்சம் குழப்ப நிலைதான் உள்ளது. சிலர் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் "நித்திரையடைகிறார்கள்", அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும் அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள். வேறு சிலர் மரிக்கும் தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர் மனிதர்கள் இறக்கும்பொழுது, கடைசி உயிர்த்தெழுதலுக்கும் கடைசி நியாயத்தீர்ப்பிற்கும், இறுதியாக, தங்கள் நித்திய குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு "தற்காலிகமான" பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்படுகிறார்கள் என்று கோருகிறார்கள். ஆகமொத்தம், மரணத்திற்குப்பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து வேதாகமம் என்னதான் சொல்லுகிறது?
முதலாவது, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது என்னவென்றால் மரணத்திற்குப்பின் விசுவாசிகளுடைய ஆத்துமா/ஆவி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனென்றால், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பதினால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன (யோவான் 3:16,18,36). விசுவாசிகளுக்கு, மரணம் என்பது "இந்த தேகத்திலிருந்து குடிபோகுதலும் கர்த்தரிடத்தில் குடியிருத்தலுமாம்" (2கொரிந்தியர் 5:6-8; பிலிப்பியர் 1:23). ஆனால், 1கொரிந்தியர் 15:50-54 மற்றும் 1தெசலோனேக்கியர் 4:13-17 போன்ற வேதபகுதிகள் விசுவாசிகள் மறுபடி எழுந்திருப்பதையும் மகிமையின் தேகம் கொடுக்கப்படுவதையும் விவரிக்கின்றன. விசுவாசிகள் மரித்தவுடனே கிறிஸ்துவோடுகூட இருக்கச் செல்வார்கள் என்றால், இந்த எழுந்திருக்குதலின் நோக்கம் என்ன? இப்படியிருக்கையில், மரித்தவுடன் விசுவாசிகளின் ஆத்துமா/ஆவி கிறிஸ்துவுடனே இருக்கச் செல்லுகிறதென்றும், மாம்சசரீரம் கல்லறையில் "நித்திரையில்" இருக்கும் என்று தோன்றுகிறது. விசுவாசிகளின் எழுந்திருக்குதலின்போது மாம்சசரீரமானது உயிர்த்தெழப்பட்டு, மகிமையடைந்து பின்பு ஆத்துமா/ஆவியுடன் மறுபடி இணைக்கப்படுகிறது. மீண்டுமாய் இணைக்கப்பட்ட இந்த மகிமையின் ஆவி ஆத்துமா சரீரமே புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும்பொழுது விசுவாசிகள் சுதந்தரித்துக்கொள்ளும் நித்திய சொத்தாயிருக்கும் (வெளிப்படுத்தின விசேஷம் 21-22).
இரண்டாவது, இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு மரணம் என்பதன் பொருள் நித்திய ஆக்கினை. ஆனாலும், விசுவாசிகளுக்கு நடப்பதைப்போலவே, அவிசுவாசிகளும் தங்களுடைய கடைசி உயிர்த்தெழுதலுக்கும், நியாயத்தீர்ப்பிற்கும், நித்தியமாக வாழும்நிலைக்கும் காத்திரும்படி ஒரு தற்காலிகமான ஒரு குடியிருப்புக்கே அனுப்பப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. லூக்கா 16:22-23 ஐசுவரியமுள்ள மனுஷன் மரித்தவுடனே வேதனைக்குள்ளாகிறதாக கூறுகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 மரித்த அவிசுவாசிகள் அனைவரும் உயிர்தெழப்பட்டு, வெள்ளைச் சிங்காசனத்தின் முன் நியாயந்தீர்க்கப்பட்டு பின்பு அக்கினிக்கடலிலே தள்ளப்படுவதாக விவரிக்கிறது. ஆகவே அவிசுவாசிகள் மரித்தவுடனேயே நரகத்திற்கு (அக்கினிக்கடல்) அனுப்பப்படுவதில்லை பதிலாக நியாயத்தீர்ப்பிற்கும் தண்டனைக்குமெனெ ஒரு தற்காலிகமான இடத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவிசுவாசிகள் உடனடியாக அக்கினிக்கடலுக்கு அனுப்பப்படவில்லையெனினும் மரணத்திற்கு அடுத்த நிலை என்பது இன்பமானது ஒன்றுமில்லை. "இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே" (லூக்கா 16:24) என்றுதான் அந்த ஐசுவரியமுள்ள மனுஷனும் கூப்பிட்டான்.
ஆகவே, மரணத்திற்குப் பின்பு, ஒரு மனிதர் ஒரு "தற்காலிகமான" பரலோகத்திலோ, நரகத்திலோ வசிக்கிறார். இந்த தற்காலிகமான இடத்திற்குப்பின் கடைசி உயிர்தெழுதலின்போது அவருடைய நித்தியமாக வாழும்நிலையில் மாற்றம் இருக்காது. நித்தியமாக வாழும்படி குறிப்பிடப்படும் "இடத்தில்" மட்டுமே மாற்றம் இருக்கும். விசுவாசிகள் புதிய வானத்திலும் புதிய பூமியிலும் நுழையும்படி இறுதியாக அனுமதி பெறுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 21:1). அவிசுவாசிகள் அக்கினிக்கடலுக்கு இறுதியாக அனுப்பப்படுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15). இதுவே மனிதர்களின் இறுதியான, நித்தியமான குடியிருப்பு - இது அவர்கள் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்துவில் மாத்திரம் நம்பிக்கை கொண்டிருந்தார்களா என்பதை மட்டுமே பொறுத்தமைகிறது (மத்தேயு 25:46; யோவான் 3:36).

கேள்வி: செல்லப் பிராணிகள்/ மிருகங்கள் பரலோகத்திற்கு செல்லுமா? பிராணிகள்/ மிருகங்களுக்கு ஆத்துமாக்கள் உண்டா?
பதில்: செல்லப் பிராணிகள்/ மிருகங்களுக்கு ஆத்துமாக்கள் உண்டா, செல்லப் பிராணிகள்/ மிருகங்கள் பரலோகத்தில் காணப்படுமா என்பவை பற்றி வெளிப்படையான போதனை வேதாகமத்தில் இல்லை. இருந்தாலும், பொதுவான வேதாகமக் கோட்பாடுகளை வைத்து இந்த காரியத்தைப் பற்றிய தெளிவை உண்டாக்கலாம். மனிதனும் (ஆதியாகமம் 2:7) மிருகங்களும் (ஆதியாகமம் 1:30; 6:17; 7:15, 22) ஜீவ சுவாசத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவெனில் மனிதன் தேவனுடைய சாயலாகவும் அவரின் ரூபத்தின் படியும் படைக்கப்பட்டான் (ஆதியாகமம் 1:26-27), ஆனால் மிருகங்களோ அப்படியல்ல. மனிதர் தேவனுடைய சாயலாகவும் அவரின் ரூபத்தின் படியும் படைக்கப்பட்டவர் என்பதால் ஆவிக்குரிய தன்மை, சிந்தை, உணர்வு மற்றும் விருப்பம் உள்ளவர்கள். மரணத்திற்குப் பின்னும் நிலைத்திருக்கும் ஒரு பகுதியை தங்களின் சுயத்தில் பெற்றுள்ளனர். ஆனால் செல்லப் பிராணிகள்/ மிருகங்களுக்கு “ஆத்துமா” அல்லது உடலல்லாத ஒரு அம்சம் இருக்குமேயானாலும் அதன் “குணம்” வேறாகவும், குறைந்த்தாகவுமே இருக்கமுடியும். செல்லப் பிராணிகள்/ மிருகங்களின் “ஆத்துமாக்கள்” மரித்தபின் நிலைப்பதில்லை என்பதே இந்த வேறுபாட்டின் பொருளாக இருக்க முடியும்.
ஆதியாகமத்திலுள்ள கர்த்தரின் சிருஷ்டிப்புச் செயல்முறையில் மிருகங்களும் ஒன்று என்பது நாம் கருத்தில்கொள்ள வேண்டிய இன்னொரு காரணம். தேவன் மிருகங்களைப் படைத்தபின்பு அது நல்லது என்று கண்டார் (ஆதியாகமம் 1:25). ஆகவே புதிய பூமியிலே (வெளிப்படுத்தின விசேஷம் 21:1) பிராணிகள் இருக்கக்கூடாது என்பதற்கான எந்தக் காரணமுமில்லை. ஆயிரமாண்டு ஆட்சியிலும் (ஏசாயா 11:6; 65:25) நிச்சயமாகவே மிருகங்கள் இருக்கலாம். இவைகளில் சில நாம் இந்த பூமியில் வைத்திருந்த செல்லப்பிராணிகளாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. கர்த்தர் நீதியுள்ளவர் ஆகவே இந்த விஷயத்தில் அவரது முடிவு என்னவானாலும் சரி அது நாம் பரலோகத்திற்குச் சென்றடையும்போது முழுவதும் ஒப்புக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும்.

கேள்வி: பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்: “செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக” (லேவியராகமம் 19:28) என்று பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்கு கட்டளை கொடுக்கிறது. ஆகையால், இன்றைய விசுவாசிகள் பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு கீழே இல்லையென்றாலும் (ரோமர் 10:4; கலாத்தியர் 3:23-25; எபேசியர் 2:15) உடம்பில் குத்திக்கொள்வதைப் பற்றி ஒரு கட்டளை இருந்தது என்னும் உண்மை சில கேள்விகளை எழுப்பத்தான் செய்யும். ஒரு விசுவாசி உடம்பில் குத்திக்கொள்ள வேண்டுமோ இல்லையோ என்பதைப் பற்றி புதிய ஏற்பாடு எதுவும் கூறவில்லை.
பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் பற்றிய விஷயத்தில், நாம் தூய்மையான மனசாட்சியுடனே, நேர்மையாக கர்த்தரிடத்தில் அவருடைய நல்லநோக்கங்களுக்காக அந்தக் காரியத்தை ஆசீர்வதிக்கும்படி தீர்மானிக்க முடியுமா என்பது ஒரு நல்ல சோதனையாக் இருக்கும். “ஆகையால் நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர் 10:31). புதிய ஏற்பாடு பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் போன்றவற்றிர்க்கு எதிராக கட்டளையிடவில்லையெனினும் கர்த்தர் நம்மை பச்சைகுத்திக்கொள்ளவும் அலகு/உடம்பு குத்திக்கொள்ளவும் அனுமதிப்பார் என்று நம்ப ஒரு காரணமும் சொல்லவில்லை.
வேதாகமம் நேரடியாகக் குறிப்பிடாத காரியங்களில், இது கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்குமோ இல்லையோ என்று சந்தேகம் வருமாயின் அதைப் போன்ற காரியங்களில் ஈடுபடாமலிருப்பதே நல்லது என்பது ஒரு முக்கியமான வேதாகமக் கோட்பாடு. விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே என்று ரோமர் 14:23 நினைவுறுத்துகிறது. நமது சரீரம் மற்றும் ஆத்துமா தேவனாலே மீட்கப்பட்டது, அவருக்குச் சொந்தமானது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 1 கொரிந்தியர் 6:19-20 பச்சைகுத்திக்கொள்ளுதல் அல்லது அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதலைப் பற்றி நேரடியாக் கூறவில்லையெனினும் இது நமக்கு ஒரு கோட்பாட்டை நிச்சயமாகவே வலியுறுத்துகிறது. “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.” இந்த பெரிய உண்மை நாம் நம்முடைய இந்த சரீரத்தை வைத்து என்ன செய்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதின் மேல் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். நமது சரீரம் தேவனுக்குச் சொந்தமானது என்றால், நாம் பச்சை/அலகு அல்லது உடம்பு குத்திக் அடையாளம் இட்டுக்கொள்ளும்பொழுது நமது தேவனின் தெளிவான அனுமதி நமக்கிருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

கேள்வி: காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?
பதில்: காயீனின் மனைவி யாரென்பதை வேதாகமம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவனது சகோதரியோ, மருமகளோ அல்லது பேத்தியோ போன்றவர்தாம் காயீனின் மனைவியாக இருந்திருக்க முடியும் என்ற ஒரே பதில்தான் இங்கு சாத்தியம். காயின் ஆபேலைக் கொலை செய்தபோது (ஆதியாகமம் 4:8) அவனது வயது என்ன என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. இருவரும் விவசாயிகள் என்பதனால் இருவரும் வயது வந்தவர்கள் எனலாம். சொந்தக் குடும்பமும் இருந்திருக்கலாம். ஆபேல் கொலை செய்யப்பட்டபோது, காயீனையும் அபேலையும் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு குழந்தைகளும் இருந்தார்கள் என்பது தெளிவு. நிச்சயமாகவே பின்பு இன்னும் பல குழந்தைகளைப் பெற்றார்கள் (ஆதியாகமம் 5:4). ஆபேலைக் கொலை செய்தபின் காயீன் தன் உயிருக்குப் பயந்திருந்தான் (ஆதியாகமம் 4:14) என்னும் உண்மை அப்பொழுதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மேலும் பல குழந்தைகள் இருந்திருப்பார்கள், சொல்லப்போனால் பேரக்குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. காயீனின் மனைவி (ஆதியாகமம் 4:17) ஆதாம் ஏவாளுடைய மகளோ அல்லது பேத்தியோதான்.
ஆதாமும் ஏவாளும் மட்டுமே முதலாவது படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. மக்கள்தொகை அதிகமாகி குடும்பத்திற்குள்ளேயே திருமண உறவு ஏற்படுத்திக்கொள்வது தேவையில்லை (லேவியராகமம் 18:6-18) என்ற காலம் வரும்வரை குடும்பத்திற்குள்ளேயே எற்படும் திருமண உறவை கர்த்தர் தடுக்கவில்லை. மிகவும் நெருங்கிய, முறையில்லாத உறவினர்களிடையில் நிகழும் சேர்க்கை இக்காலத்தில் அதிகமாக மரபியல் சீர்கேடுகளில் முடிகிறது எதனாலெனில், ஒரே மரபியற்குழுவைச் சேர்ந்த இரண்டுபேர் (எ.கா. ஒரு சகோதரனும் சகோதரியும்) சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, கோளாறான குணங்கள் ஆற்றலடையும் ஆபத்தான நிலை உருவாகிறது. வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்தஅவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது பெற்றோர்கள் இருவரும் ஒரே கோளாறு பண்புகளைக் கொண்டிருக்கும் நிலைமை மிகக்குறைவு. மனிதகுல மரபியல் குறியீடு “மாசுபடுதல்” அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆண்டுகள் நூற்றாண்டுகளாக மரபணு குறைவுகள் தலைமுறை தலைமுறைகளாக பல மடங்குகளாக உயர்ந்து, பூதாகரமாக மாறிவிட்டது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எந்த மரபணுக்குறைவும் இருக்கவில்லை. அதனால் அவர்களும், அவர்களது சந்ததியில் அடுத்து வந்த சில தலைமுறைகளும் நமக்கு இன்று இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான உடல்நிலை இருந்தது. ஆதாம் ஏவாளின் குழந்தைகளுக்கு எந்த மரபணுக் குறையும் இருக்கவில்லை. அதன் பலனாக குடும்பத்திற்குள்ளே நெருங்கிய உறவினர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வது பாதுகாப்பானதாக இருந்தது.

கேள்வி: சுயப்புணர்ச்சி – வேதாகமத்தின்படி இது பாவமா?
பதில்: வேதாகமம் (மூலம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்) சுயப்புணர்ச்சியைப் பற்றி குறிப்பிடுவதும் இல்லை சுயப்புணர்ச்சி பாவமா இல்லையா என்று கூறுவதும் இல்லை. சுயப்புணர்ச்சி குறித்த விஷயத்தில் அதிகமாக சுட்டிக்காட்டப்படும் வேதாகமப் பகுதி அதியாகம்ம் 38:9-10 ல் கூறப்படும் ஓனானின் கதை. தரையிலே “தன் வித்தை விழவிடுவது” பாவம் என்று சிலர் இந்தப் பகுதியின் விளக்கமாக அர்த்தஞ்சொல்லுவர். ஆயினும் இந்தப் பகுதி குறிப்பாய்ச் சொல்லுவது இதல்ல. “வித்தை தரையில் விழவிட்டதற்காக” கர்த்தர் ஓனானைத் கண்டிக்கவில்லை, மாறாக, தன் சகோதரனுக்கு சந்த்தியை உண்டாக்க வேண்டிய கடமையிலிருந்து தவறியதற்கே கர்த்தர் அவ்வாறு செய்தார். இந்த பகுதி சுயப்புண்ர்ச்சியைப் பற்றியதில்லை மாறாக ஒரு குடும்ப கடமையை நிறைவேற்றுவதைப் பற்றியதே. சுயப்புணர்ச்சி பாவம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் இரண்டாவது பகுதி மத்தேயு 5:27-30. இச்சைச் சிந்தனைகளை கொண்டிருப்பதற்கு எதிராக இயேசு பேசிவிட்டு பின்பு “உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால் அதை தறித்து எறிந்துபோடு” என்கிறார். இந்தப் பகுதிக்கும் சுயப்புணர்ச்சிக்கும் இடையில் இணை இருந்தாலும் இயேசு சுயப்புணர்ச்சியைத்தான் சுட்டிக்காட்டுகிறார் என்று கூறுவதற்கில்லை.
சுயப்புணர்ச்சி பாவம் என்று வேதாகமம் வெளிப்படையாக எங்கும் சொல்லவில்லையானாலும், சுயப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் செயல்கள் பாவமா என்பதைப் பற்றியும் ஒரு கேள்வியுமில்லை? இச்சையான சிந்தனை, பாலுணர்வுத் தூண்டல்கள் மற்றும் அல்லது நிர்வாண உடலுறவுக் படங்கள் போன்றவைகள்தான் அதிகமாக சுயப்புணர்ச்சிக்கு இட்டுச் செல்வன. இந்த பிரச்சினைகளையே சரி செய்ய வேண்டியிருக்கிறது. இச்சையினால் வரும் பாவங்களையும், ஒழுக்கந்தவறிய சிந்தனைகளையும், ஆடை நிர்வாண உடலுறவுக் காட்சிகள் ஆகியவற்றை கைவிடமுடியுமானால் சுயப்புணர்ச்சி ஒர் பிரச்சினையே இல்லை. மனிதர்கள் பலரும் சுயப்புணர்ச்சி சம்பந்தப்பட்ட குற்ற உணர்வுடனே போராடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையில், சுயப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் விஷயங்களே அதிகமாக மனந்திரும்ப வேண்டியவைகளாக இருக்கின்றன.
சுயப்புணர்ச்சி பிரச்சினை பற்றி நோக்க சில வேதாகமக் கோட்பாடுகள் உண்டு. “வேசித்தனமும் மற்றெந்த அசுத்தமும் ஆகிய பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவும்கூடாது” என்று எபேசியர் 5:3 அறிவிக்கிறது. இந்த கடினமான சோதனைக்கு சுயப்புணர்ச்சி எப்படி தப்பித்துக்கொள்ள முடியும் என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. “ஆகையால் புசித்தாலும், குடித்தாலும், என்னத்தைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர்10:31) என்று வேதாகமம் கூறுகிறது. எந்த காரியத்தில் கர்த்தருக்கு மகிமை கொடுக்கமுடியாதோ அதைச் செய்யக்கூடாது. ஆகவே ஒரு காரியம் தேவனுக்குப் பிரியமானது என்று முழுமையாக ஒப்புக்கொள்ள ஒரு மனிதருக்கு முடியாத பட்சத்தில் அந்தக் காரியம் பாவமே: “விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே” (ரோமர் 14:23). மேலும் நாம் நினைவில் கொள்ளவேண்டியது நம் உடல் கர்த்தரால் மீட்கப்பட்டதும் அவருக்குச் சொந்தமானதுமாகும். “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரிந்தியர் 6:19-20). இந்த பெரிய உண்மை நாம் நம்முடைய உடலை வைத்து என்ன செய்கிறோம் என்பதின் மேல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவேண்டும். இந்தக் கோட்பாடுகளை வைத்துப் பார்க்கும்பொழுது, சுயப்புணர்ச்சி பாவம் என்ற முடிவு வேதாகமப்படி சரிதான். தெளிவாகவே, சுயப்புணர்ச்சி கர்த்தருக்கு மகிமையை கொண்டு வருவதில்லை; ஒழுக்கந்தவறுகிறது போன்ற தோற்றத்தை அது தவிர்ப்பதுமில்லை, நம் உடல் கர்த்தருக்குச் சொந்தமானது என்ற சோதனையையும் இது தாண்டுவதில்லை.

கேள்வி: ஓரினச்சேர்க்கையைக் குறித்து வேதாகம்ம் என்ன சொல்லுகிறது? ஓரினச் சேர்க்கை பாவமா?
பதில்: ஓரினச்சேர்க்கைச் செயல் பாவம் என்ற ஒரே கருத்தையே வேதாகமம் கூறிவருகிறது. (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22; ரோமர் 1:26-27; 1கொரிந்தியர் 6:9). கர்த்தரை மறுதலிப்பதும் கர்த்தருக்குக் கீழ்படியாமலிருப்பதின் விளைவுதான் ஓரினச்சேர்க்கை என்று ரோமர் 1:26-27 குறிப்பிட்டு போதிக்கிறது. மனிதர்கள் தொடர்ந்து பாவத்திலும் அவிசுவாசத்திலும் இருக்கும்பொழுது, கர்த்தரைவிட்டு பிரிந்து வாழும் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமற்றதும் நம்பிக்கையற்றதுமாகிறது என்பதைக் காண்பிக்கும்பொருட்டு கர்த்தர் அவர்களை துன்மார்க்கமும் தகாததுமாதுமான பாவத்திற்கு “ஒப்புக் கொடுக்கிறார்”. ஓரினச்சேர்க்கைப் “பாவம் செய்தவர்கள்” பரலோகராஜ்ஜியத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று 1கொரிந்தியர் 6:9 அறிவிக்கிறது.
ஓரினச்சேர்க்கை இச்சையுடையவனாக கர்த்தர் ஒரு மனிதரைப் படைப்பதில்லை. மனிதர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறுவதற்கு பாவமும் அவர்களது சொந்த விருப்பமும் தேர்வுமுமே இறுதியான காரணங்கள் என்று வேதாகமம் கூறுகிறது (ரோமர் 1:24-27). சில மனிதர்கள் பிறக்கும்பொழுதே வன்முறையிலும் மற்ற பாவங்களிலும் நாட்டமுடையவர்களாக பிறப்பதுபோல் ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுடையவராக பிறக்கலாம். இதை வைத்துக்கொண்டு ஒரு மனிதர் பாவ இச்சைகளுக்கு இடம் கொடுத்து பாவம் செய்ய விளைவதை அனுமதிக்க முடியாது. ஒரு மனிதர் பிறக்கும்பொழுதே மூர்க்கம்/கோபக் குணமுடையவராக இருந்தது பின்பு அவர் அந்த குணங்களுக்கு அடிமைபடுவதை சரி என்றாக்கிவிடுமா? இல்லவே இல்லை. ஓரினச்சேர்க்கையும் அதுபோலத்தான்.
ஆகிலும் மற்றெந்த பாவத்தையும்விட ஓரினச்சேர்க்கையை “பெரிதான” பாவம் என்று வேதாகமம் கூறவில்லை. எல்லாப் பாவமும் தேவனுக்கு விரோதமானதுதான். 1 கொரிந்தியர் 6:9-10-ல் பட்டியலிடப்படும் தேவனுடைய ராஜ்ஜியத்தைவிட்டு மனிதனைப் பிரிக்கும் பல காரியங்களில் ஒன்றுதான் ஓரினச்சேர்க்கை. ஒரு விபச்சாரிக்கும், விக்கிரகாராதனைக்கார்ருக்கும், கொலைகாரருக்கும், திருடர் போன்றவர்க்கும் தேவனுடைய மன்னிப்பு உண்டோ அப்படியே ஓரினச்சேர்க்கையாளருக்கும் உண்டு என்று வேதாகமம் கூறுகிறது. பாவத்தின்மேல் ஜெயத்திற்காக அளிக்கப்படும் பெலனை, ஓரினச்சேர்க்கையாளர்களையும் சேர்த்து, தங்களுடைய இரட்சிப்பிற்காக இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசங்கொள்ளுகிறவர்கள் எல்லோருக்கும் தேவன் வாக்குத்தத்தம் பண்ணுகிறார் (1 கொரிந்தியர் 6:11; 2 கொரிந்தியர் 517; பிலிப்பியர் 4:13).
இனி வரும் பலன்
பதிலளிநீக்குகிறிஸ்துவுக்குள் ஜீவிக்கும் ஒரு மெய் கிறிஸ்தவனின் முழு நம்பிக்கையும், ஆத்தும தவிப்பும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையை தவிர வேறென்னவாக இருக்க முடியும்! கடைசி தேவ எக்காளம், சரீர மீட்பு, எடுத்துக்கொள்ளப்படுதல் போன்ற வார்த்தைகள் நம்மை அதிக பரவசமூட்டுகிறதல்லவா! தங்கள் ஜீவியத்தின் எல்லா அம்சங்களிலும் சோதிக்கப்பட்டு அதில் ஜெயங்கொண்டவர்களோ உயர உயரச் சென்று எல்லா வானங்களுக்கும் மேலாக தேவ சிங்காசனத்தை அடைவார்கள். மற்றவர்களோ கைவிடப்பட்டு உபத்திரவத்தின் கண்ணியிலே சிக்கிக்கொள்ளுவார்கள். கர்த்தராகிய இயேசு எல்லா கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொள்ளும்படியாக வராமல் கறை, திரை, பிழை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் முற்றிலும் பரிசுத்தமாக்கப்பட்ட மகிமையுள்ள சபைக்காகவே வருகிறார். எனினும் இந்நாட்களில் இரகசிய வருகையையும் அதை தொடர்ந்து சம்பவிப்பவைகளையும் குறித்து அநேக பிரசித்தி பெற்ற வேத பண்டிதர்களின் பல்வேறு மாறுபட்ட வியாக்கியானங்கள் நமது மோட்ச பிரயாணத்திற்கு மிகுந்த இடறலை உண்டாக்கியிருப்பது வருந்தத்தக்கதாயிருக்கிறது. சத்தியத்தின்மேலுள்ள ஆழமான அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் இவைகளை விவரிக்கும்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் பெரும் குழப்பத்திலே முடிவடைந்திருக்கின்றன. இவ்விதமான மாறுபட்ட வியாக்கியானங்கள் தேவ ஜனங்கள் பலருக்கும் மிகவும் பரிதாபகரமான நஷ்டத்தை உண்டாக்கியிருப்பது மிகுந்த துக்ககரமானதாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தைகள் ஒருபோதும் மாறிப்போவதில்லை!
இருப்பினும் கிருபையின் காலம் முழுவதும் பலியினாலே அவரோடுகூட உடன்படிக்கை பண்ணிய அவருடைய பரிசுத்தவான்கள் மூலம் அவருடைய சரீரமாகிய சபைக்கு இவைகளின் உண்மைப்பொருளை தேவன் விளங்கப்பண்ணியிருக்கிறார். அதனடிப்படையில் கடைசி நாட்களில் சம்பவிக்கப்போகிறவைகளின் வரிசைக்கிரமத்தை யாவரும் எளிதில் விளங்கிக்கொள்ளும்படியாக, கால வரிசைக்கிரம வரைபடமாக விவரிக்க அதிக பிரயாசம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது (சங்கீதம் 68:11). இது முற்றிலும் தேவ கிருபையே.
வெளிப்படுத்தின விசேஷத்தை அடிப்படையாக கொண்ட இவ்வரைபடமானது ஜெயங்கொண்ட சபையின் எடுத்துக்கொள்ளப்படுதல், அதை தொடர்ந்ததான ஏழு வருட உபத்திரவம் (இரு வேறு நோக்கிலான தரிசனம்), ஆயிர வருச அரசாட்சி, வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு, நித்திய வாசஸ்தலங்கள் மற்றும் உயிர்த்தெழுதலின் ஏழு வரிசைகளையும் கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையின் மூன்று கட்டங்களையும் விவரிக்கிறது.
இவ்வரைபடம் விவரிக்கும் வரிசைக்கிரமத்தின் உண்மைப்பொருளை நாம் ஆவிக்குரிய விவேகத்துடன் விளங்கிகொள்ளுவோமாயின் அது இனிச் சம்பவிக்கபோகிற ஏழு வருட உபத்திரவத்திற்கு தப்பி அதற்கு முன்பாக மத்திய ஆகாயத்தில் வெளிப்படும் "ஆனந்த பாக்கியத்தை" நோக்கி நம்மை உந்தி தள்ளுவதாயிருக்கும். மேலும் நாம் நேசித்து சேவிக்கும் கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்படி, திட அஸ்திபாரமாகிய பிரதான மூலைக்கல்லின் மீது போடப்பட்டிருக்கும் அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தை அடையாளங் கண்டுகொள்ளுவதற்கும் அதில் இசைவிணைப்பாக ஊன்றக் கட்டப்படுவதின் அவசியத்தை நோக்கியும் நம்மை துரிதப்படுத்துவதாயிருக்கும்!
இவ்வரைபடத்தை பின்வரும் இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள். நீங்கள் பயனடைந்திருப்பீர்களாயின் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவன்தாமே நம்முடைய மனக்கண்களை பிரகாசிப்பாராக!
https://goo.gl/5HDYKQ
என் நேசரே! தீவிரியும்,.. (உன் 8:14).