Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 24 ஜூன், 2011

மிகவும் முக்கியமான கேள்வி பதில்கள் - இயேசு கிறிஸ்து யார்?

கேள்வி: இயேசு கிறிஸ்து யார்?

பதில்:
இயேசு கிறிஸ்து யார்? கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு மாறாக ஒரு சிலரே இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் இருந்தாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து உண்மையாகவே ஒரு மனிதன் என்றும் இஸ்ரவேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான கருத்தாகும். இதைக் குறித்த விவாதம் இயேசு கிறிஸ்துவின் முழு அடையாளங்களைக் குறித்து பேசப்பட்டபொழுது தான் துவங்கியது. எல்லா பெரிய மதங்கள் என்று அழைக்கப்படுகிறவைகளுமே இயேசு கிறிஸ்து பெரிய தீர்க்கதரிசி என்றோ அல்லது ஒரு நல்ல போதகர் என்றோ அல்லது ஒரு தேவ மனிதன் என்றோ போதிக்கின்றன. ஆனால் பரிசுத்த வேதாகமம் அவரை தீர்க்கதரிசியிலும் பெரியவர் என்றும். அவரே நல்ல போதகர் என்றும் அல்லது தேவ குமாரன் என்றும் கூறுகிறது.


சி.எஸ்.லூயிஸ், மியர் கிறிஸ்டியானிட்டி (பெறும் கிறிஸ்துவம்) என்ற தமது புஸ்தகத்தில் இப்படியாக எழுதுகிறார். இதன் மூலமாக எந்த ஒருவரும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து முட்டாள்தனமான கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவே விரும்புகிறேன் அதாவது இயேசு கிறிஸ்துவை ஒரு நல்ல சன்மார்க்க போதகராக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் அவர் தெய்வம் என்று அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை என்ற இந்தக் கருத்து மிகவும் முட்டாள் தனமானது. இதை நாம் அப்படிக்கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. வெறும் மனிதனாக இருக்கும் ஒரு மனிதன். ஓரு மிகப் பெரிய சன்மார்க்க போதகர் சொல்லக் கூடிய கருத்துக்களைப் போல, இயேசு கிறிஸ்து சொன்னதோடு ஒப்பிட முடியாது. அப்படி இயேசு கிறிஸ்துவை ஒப்பிடுகிறவன் புத்தியில்லாத பைத்தியம் பிடித்தவனாக இருக்க வேண்டும் அல்லது அழுகிப்போன முட்டைக்கு சமானமாயிருக்கிற ஒரு மனிதனாக இருக்க வேண்டும் அல்லது நரகத்திற்கு சொந்தக் காராணாயிருக்கிற சாத்தானாக இருக்க வேண்டும். மேற்சொன்ன கருத்தை உடையவர்கள் ஏதாவதொன்றைத் தெரிந்து கொள்ளலாம் ஒன்று மனிதனாக இருந்தவரும் இருக்கிறவருமான தேவகுமாரன் அல்லது பைத்தியம் பிடித்த மனிதன், அதைக் காட்டிலும் கீழான மனநிலையிலிருக்கிறவன். அவன் முட்டாளாயிருக்கிற படியினால் அவனை அடைத்து வைக்கலாம். அவனைக் காரி உமிழலாம். சாத்தான் என்று எண்ணி அவரைக் கொல்லளாம். மாறாக அவனைக் கடவுள் என்று சொல்லி அவனது காலில் விழலாம். ஆகவே இப்படிப்பட்ட கவர்ச்சிகரமான முட்டாள் தனத்தை உடைய ஒருவரை ஒரு சிறந்த மனித போதகராக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது நல்லது. ஆனால் இவற்றைச் செய்வதற்குரிய வாய்ப்பை. அவர் நம்மிடத்தில் விட்டு விடுவதில்லை. இப்படிச் செய்ய வேண்டுமென்றும் அவர் விரும்பவில்லை.

அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தன்னை யாரென்று சொன்னார்? பரிசுத்த வேதாகம் அவரைக் குறித்து யாரென்று சொல்கிறது. முதலாவதாக இயேசு கிறிஸ்து (யோ10:3)ல் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம். பார்ப்பதற்கு தன்னைக் கடவுளென்று, அவர் சொன்னதாக இவ்வசனத்தில் தெரியவில்லை. அப்படியிருந்தும், அந்த வாக்கியத்துக்கு; யூதர்களின் பிரதிபலிப்பைப் பாரங்கள். 'யூதர்கள் அவருக்கு பிரதியுத்தரமாக, நற்கிரியையினித்தமாக நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை - நீ மனிதனாயிருக்க உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறபடியினால், உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்".(யோ10:33) இந்த வாக்கியம் இயேசு கிறிஸ்து தன்னை தேவனைன்று குறிப்பிட்டதாக சொல்லுகிறது. யூதர்கள் இயேசு கிறிஸ்து தன்னை கடவுளென்று குறிப்பிட்டதை புரிந்து கொண்டார்கள். இதற்கு இயேசு கிறிஸ்து, மறுக்கவோ, மாறுத்தரம் சொல்லவோ இல்லை (யோ8:58) ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நானிருக்கிறேன் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்'என்றார்". அப்பொழுது அவர் மேல் கல்லெறியம்படி கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள். (யோ8:59) இயேசு தன்னைக் குறித்து குறிப்பிடும் பொழுது, 'நான்" என்று குறிப்பிடுவதை பார்க்கலாம். அது பழைய ஏற்பாட்டில் தேவன் தன்னைக் குறித்து தமது நாமத்தை வெளிப்படுத்தியதிற்கு ஒப்பாயிருக்கிறது.(யாத்3:14) இயேசு கிறிஸ்து கடவுள் என்று சொல்லாவிட்டால், யூதர்கள் அவன் மேல் கல்லெறியும் படி ஏன் கற்களை எடுத்துக் கொண்டார்கள். (யோ1:1) அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்று சொல்லுகிறது. (யோ1:16) அந்த வார்த்தை மாம்சமானார் என்று குறிப்பிடுகிறது. இவைகள் இயேசு கிறிஸ்துவே, மாம்சத்தில் வந்த கடவுள் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா என் ஆண்டவரே, என் தேவனே என்று அழைக்கிறார். (யோ20:28) இயேசுகிறிஸ்து அதைத் திருத்தவில்லை. பரிசுத்த பவுல் அப்போஸ்தலர் இயேசுகிறிஸ்துவைக் குறித்து மகாதேவனும், நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து (தீத்து2:13)ல் குறிப்பிடுகிறார். பரிசுத்த பேதுரு அப்போஸ்தலனும் நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவென்று (2பேதுரு1:1) குறிப்பிடுகிறார். புpதாவாகிய தேவனும், தமது குமாரனுடைய அடையாளத்திற்கு சாட்சி பகருகிறார். தம்முடைய முழு அடையாளத்தைக் குறித்து சாட்சியாக 'ஒ தேவனே உம்முடைய சிங்காசனம் (சங்45:6) தேவனே உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உமது ராஐ;யத்தின் செங்கோல் தகுதியுள்ள செங்கோலாயிருக்கிறது என்று சொல்கிறார். பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்கள். கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை வெளிப்படுத்துகிறது. நமக்கொரு பாலகன் பிறந்தார். நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும் அவர் நாமம் அதிசயமானவர் ஆலொசனைக் கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும் (ஏசா9:6).

ஆகவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நல்ல போதகர் என்று விசுவாசிக்கிறேன் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதல்ல என்று ஊ.ளு.லூயில் வாதிடுகிறார். இயேசுகிறிஸ்து தெளிவாக தன்னை மறுக்க முடியாத அளவில் தன்னைக் கடவுளென்று அறிக்கையிடுகிறார். அவர் தேவனாக இல்லாமலிருப்பாரானால் அவர் பொய்யர் ஆகவே, அவர் தீர்க்கதரிசியிலும், போதகரிலும் இருந்து வேறுபடுகிறார். நவீன பண்டிதர்கள். இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையை அபத்தமாக்கும்படியாக. உண்மையான வரலாற்று நாயகனான இயேசு சொன்னதாக வேதாகமம் சொல்கிற அநேக காரியங்களை சொல்லவில்லை என்று கருத்து தெரிவிக்கிறார்கள். ஆண்டவருடைய வார்த்தையைக் குறித்து பேசுவதற்கு, அவர் செய்தார் செய்யவில்லை என்று சொல்வதற்கு நாம் யார்? இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக இயேசு கிறிஸ்து சொன்ன அல்லது சொல்லாமலிருந்த காரியங்களின் ஆழங்களை அறிந்து கொள்ள இந்த காலத்தில்லுள்ள பண்டிதர்களால் எப்படி அறிந்து கொள்ள முடியும். அவரோடு கூட வசித்த, வாழ்ந்த, ஊழியம் செய்த சீஷர்களாலேயே அவரை அறிந்து கொள்ள முடியவில்லையே (யோ14:26).

இயேசுகிறிஸ்துவின் உண்மையான அடையாளங்களுக்கடுத்த கேள்வி ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது? இயேசுகிறிஸ்து தெய்வமா? இல்லையா? என்பதை ஏன் முக்கியத்துவப்படுத்த வேண்டும்? ஏனென்றல் இயேசு கிறிஸ்து தெய்வமாக இல்லாமல் இருப்பாரேயானால், உலகத்தின் பாவத்திற்கான பரிகாரமாக அவரது இரத்தம் போதுமானதாக இருந்திருக்காது (1யோ2:2) தேவன் மாத்திரமே ஒரு நித்திய பரிகாரத்தை செய்ய முடியும். (ரோமர்5:8, 2கொரி5:21) இயேசு கிறிஸ்து கண்டிப்பாக நமது கடன்களை தீர்த்தே ஆக வேண்டியதிருந்தது. இயேசுகிறிஸ்து மரிக்கும்படியாகவே மனிதனாக வேண்டியதிருந்தது. இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதின் முலமாக மாத்திரமே வருகிறது. அவருடைய தெய்வத்தன்மை என்பது அவரே இரட்சிப்பிற்கு ஒரே வழி என்பதுவே ஆகும். ஆகவே இயேசுகிறிஸ்து 'நானே வழியும், சத்திமும் ஐPவனுமாயிருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வாரன்" (யோ14:6) என்று பகிரங்கமாக அறை கூவல் விடுகிறது. அவரது தெய்வத்தன்மையை விளக்குவதற்கு போதுமானது ஆகும்.

கேள்வி: கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் ழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

பதில்:
கடவுள் உயிர் வாழ்கிறாரா? இதை நான் மிகவும் விருப்பத்துடன் கண்டுபிடிப்பதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுதுள்ள கணக்கெடுப்பின்படி 90 சதவிகித ஜனங்கள் கடவுள் உயிரோடிருக்கிறாரென்றும், மேலான ஒரு சக்தி இருக்கிறது என்றும் நம்புகின்றனர். இருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் மேல் அவர் உயிரோடிருக்கிறார் என்பதை வெளிப்படுத்த பொறுப்புகள் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் வேறு சில காரணங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.


எப்படியிருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதோ நிரூபியாமல் இருப்பதோ கூடாத காரியம் நாம் கடவைள விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதகாரியம். (எபி.11:16) கடவுள் விரும்பினால் அவர் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியும் அவர் அப்படிச் செய்தால் அவரை விசுவாசிப்பதற்கு ஏதுமில்லாமல் போய்விடும். (யோ. 20:29)

விசுவாசத்தினால் கடவுளை நம்பவேண்டும் என்று சொல்வதனால், அவர் இருக்கிறார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்று சொல்லிவிட முடியாது. (சங். 19:1-4) நாம் நட்சத்திரங்களைக் காண்பதிலும், அகில உலகத்தையம் காண்பதிலும், இயற்கையின் அதிசயங்களைப் கவனிப்பதிலும், சூரியன் மறைவதின் அழகை ரசிப்பதிலும் இவைகளை படைத்த ஒருவர் இருக்கிறார் என்பதைப் புரியச்செய்கிறது. இவைகள் எல்லாம் போதுமானதாக இல்லாவிட்டால், நம்முடைய இருதயங்களிலே, அவர் வாழ்கிறார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. (பிர.3:11) நம்முடைய வாழ்கைக்குப் பின், இதைவிட மேலான ஒரு வாழ்வு இருக்கிறது என்பது தெரிகிறது. அறிவுப்பூர்வமாக ஒருவேளை இதை நாம் மறுக்கலாம். தேவபிரசன்னம் நம்மில் இருந்துகொண்டிருக்கிறது. சிலர் கடவுள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கிறார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. (சங்.14:1).

வரலாற்றில் முழுவதுமாக பார்க்கும்பொழுது எல்லாக் கலாச்சாரத்திலும், மனித மேம்பாட்டிலும், எல்லாக் கண்டங்களிலும் தேவன் இருக்கிறார் என்பதை 98 சதவிகித ஜனங்கள் நம்புகிறார்கள். இவர்கள் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புவதற்கு ஏதாவது ஒரு தூண்டுதல் இருக்கலாம்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு பரிசுத்த வேத விவாதத்தை தவிர வேறு விவாதங்களும் உள்ளன.

1. ஆன்டோலாஜிக்கல் (Ontological) விவாதத்தின் கருத்துக்களின் அடிப்படையில் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கப்படுகின்றன. “கடவுளைத்தவிர வேறொரு பெரியகாரியம் இருக்க முடியாது. இருப்பது இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் பெரியது. ஆகையால் அந்த பெரியகாரியம் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். கடவுள் இல்லாவிட்டால் அந்த பெரியகாரியம் இருந்திருக்க முடியாது. ஆனால் இது முரன்பாடான கடவுளைக்குறித்த விளக்கம்.

2. டெலிலாஜிக்கல் (Teleological) விவாதம்: உலகம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருப்பதனால், இதனை உருவாக்கிய ஒருவர் இருக்கவேண்டும். உதாரணமாக பூமி சூரியனுக்கு 100 மைல் தூரமாயிருந்தாலும் அருகாமையில் இருந்தாலும். பூமியில் வசிக்கிற மக்கள் உயிர்வாழ முடியாது. நம்முடைய தட்ப வெட்ப நிலையில் சில சதவிகிதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் பூமியிலிருக்கிற எல்லா உயிரினங்களும் மரித்துப்போய்விடும். நம் உடம்பிலுள்ள ஒரு அணு உருவாகுவதற்கு அனேக புரத அணுக்கள் தேவை. அதாவது ஒரு அணு உருவாக குறைந்தபட்சம் 10243 புரத மூலக்கூறுகள் தேவை. அதாவது பத்;தோடு(10) 243 பூஜ்ஜியங்களைச் சேர்க்க வேண்டும்.

3. காஸ்மோலாஜிக்கல்(Cosmological) விவாதம் : தேவன் இருக்கிறார் என்பதற்கு ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொருகாரணம் இருக்கிறதென்று விவாதிப்பவர்கள். உலகமும் அதில் உள்ளயெல்லாம் ஒரு செயல். இவைகளெல்லாம் உருவாகுவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். காரணமாவதற்கு இறுதியாக எல்லாவற்றையும், எல்லா செயல்களுக்கும் காரணமாயிருக்கிற ஒருவர் இருக்கவேண்டும். அவருக்கு மேலே அவரை உருவாக்குவதற்கு காரணமாக யாருமில்லை. தன்னை உருவாக்க ஒருவருமில்லாமல் இருக்கிறவர் தான் கடவுள்.

4. ஒழுக்கநெறி (Moral) விவாதம் : இது நல்நடத்தையைப் பற்றியது. வரலாற்றில், எல்லாக் கலாச்சார மக்களுக்கும் ஒரு நியதி அல்லது ஒழுங்குமுறைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் தவறு அல்லது சரி என்று உணர்கிற உணர்வு உண்டு. கொலை, பொய், திருட்டு, தவறான நடத்தை இவைகளெல்லாம் எல்லா நாடுகளைச் சார்ந்தவர்களும் இது தவறு, இது சரி என்று மறுப்பு தெரிவிக்கிறார்கள். நன்மை எது, தீமை எது என்ற உணர்வு எல்லா மனிதருக்கும் இருக்கிறது. இந்த உணர்வு கடவுளிடத்திலிருந்துதான் வருகிறது. இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் மக்கள் தேவனைக் குறித்த அறிவைமறுத்து பொய்யை நம்புவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு தெளிவாக சொல்கிறது. (ரோ. 1:25) மக்கள் கடவுளை நம்பாமல் இருப்பதற்கு, எந்த ஒரு கராணத்தையம் கூற முடியாது. (ரோ.1:20) அறிவியல் பூர்வமாக கடவுளை நிரூபிக்க முடியாது என்று அவரை நம்பாமல் இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் தங்களைக் குறித்து அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும், பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணரவேண்டும். (ரோ.3:23,6:23) கடவுள் இல்லையென்றால் நாம் நம் விருப்பப்படி நம் மனம்போல வாழலாம். பரிணாமக் கொள்கையைப் பிடித்துக்கொண்டு கடவுளை உதாசினப்படுத்தி வாழ்கிற ஒரு கூட்டம் உண்டு.

கடவுள் உயிரோடிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கும் கடுமையான முயற்சியே, கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு நான் கொடுக்கும் இறுதியான விவாதம். கடவுள் இருக்கிறார் என்பது எனக்கு எப்படித்தெரியம்? நான் கடவுளுடன் தினமும் பேசுவதால், அவர் இருக்கிறார் என்பதை அறிகிறேன். அவர் பேசுவதை நான் சத்தமாகக் கேட்பதில்லை ஆனால் அவர் பிரசங்கத்தை, வழிநடத்துதலை, அன்பை, கிருபையை உணர்கிறேன். என் வாழ்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுக்கிற பொழுது கடவுள் இருக்கிறார் என்பதைத்தவிர, வேறு விளக்கம் கொடுக்க முடியவில்லை. கடவுள் என்மை ஆச்சரியமான விதமாக இரட்சித்து என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். ஆகவே அவரைத்துதித்து அன்பு செலுத்துவதைத்தவிர நான் ஒன்றும் இல்லை என்று உணர்கிறேன்.

இறுதியாக கடவுள் இருக்கிறார் என்பதை விசுவாசத்தின் மூலமாக அறிந்துகொள்கிறோம். (எபி.11:6). தேவன்பேரில் வைக்கும் விசுவாசம் என்பது குருட்டுத்தனமானதல்ல. விசுவாசம் என்பது ஒரு பாதுகாப்பான, வெளிச்சமான அறையில் அடி எடுத்து வைப்பதாகும். இதில் ஏற்கெனவே 90 சதவிகித மக்கள் இருக்கிறார்கள்.

கேள்வி: இயேசு கடவுளா? தான் கடவுள் என்று எப்போதாவது சொன்னாரா?

பதில்:
நானே கடவுள் என்று இயேசு நேரடியாக சொன்னதாக பரிசுத்த வேதாகமத்தில், எந்த பகுதியிலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படியென்றால், அவர் கடவுளென்று அவர் சொல்லவில்லையென்று பொருள் படாது. உதாரணமாக (யோ. 10:30ல்) இயேசு சொல்வதைக் கவனியுங்கள். “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். இது இயேசு தம்மை கடவுள் என்று சொன்னார் என்பது போல காணப்படாமல் இருக்கிறது. ஆனால் இந்த வாக்கியத்திற்கு யூதர்களின் பிரதிபலிப்பைப் பாருங்கள், நற்கிரியைகளினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறதினாலேயே உன்மேல் கல்லெறிகிறோம்”.


யூதர்கள் இயேசு தன்னை கடவுளென்று சொல்வதாக உணர்ந்து கொண்டார்கள். தொடர்ந்து வருகிற அந்த வசனங்களில் இயேசுகிறிஸ்து, நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லவுமில்லை. ஆகவே நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பதின் மூலமாக, தான் கடவுளென்பதை இயேசுகிறிஸ்து அறிவுறுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. யோ. 8:58ல் இன்னுமொரு உதாரணத்தைப் பார்க்கிறோம். மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்கு சொல்லுகிறேன். ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்றார். இந்த இடத்திலும் யூதர்கள் இயேசுவின் மேல் கல்லெறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் கல்லெறிய முயற்சி செய்தார்கள்.

யோ. 1:1 சொல்கிறது. “அந்த வார்த்தை தேவனாயிருந்தது”. யோ. 1:14ல் “அந்த வார்த்தை மாம்சமானார்” என்று குறிப்பிடுகிறது. இவைகள் இயேசுவே மாம்சத்தில் வெளிப்பட்ட கடவுள் என்பதைக் குறிப்பிடுகிறது. அப். 20:28ல் தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்து கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு என்று எழுதுகிறார். சொந்த இரத்தத்தினாலே சபையை யார் விலைக்கிரயமாக வாங்கினார்? “இயேசுகிறிஸ்து”. அப். 20:28ல் தேவன் வாங்கினாரென்று அறிக்கையிடுகிறது. “ஆகவே இயேசுவே கடவுள்”.

இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா “என் ஆண்டவரே! என் தேவனே” என்று யோ. 20:28 சொல்லுகிறதைப் பார்க்கிறோம். இயேசுகிறிஸ்து அந்த வார்த்தையை திருத்தவில்லை. (தீத்து 2:13) நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து வருவதற்கு காத்திருங்கள் என்று நம்மை உற்சாகப்படுத்துகிறது (II பேதுரு 1:1). ஏபி. 1:8ல் பிதாவாகிய தேவன், இயேசுவைக் குறித்து: “தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உம்முடைய இராஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது” என்று சொல்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் அப்போஸ்தலனாகிய யோவானை நோக்கி, தேவன் ஒருவரையே ஆராதனை செய்வாயாக என்று தேவதூதன் சொல்வதாக பார்க்கிறோம். பரிசுத்த வேதாகமத்தின் பல பகுதிகளில் இயேசுகிறிஸ்து ஆராதிக்கப்படுவதைப் பார்க்கிறோம் (மத். 2:11, 14:33, 28:9, 28:17), லூக். 24:52, யோ. 9:38). அவரை ஆராதித்ததற்காக ஒருவரையும் இயேசு கடிந்துகொள்ளவில்லை. அவர் தேவனாக இல்லாமல் இருப்பாரேயானால், தன்னை ஆராதிக்கக் கூடாதென்று ஜனங்களுக்கு சொல்லியிருப்பார். இவைகள் மட்டுமன்றி, இயேசுவின் தேவத்துவத்தைக் குறித்து, பல வேத வசனங்கள் குறிப்பிடுகிறது.

மிக முக்கியமான காரணமென்னவெனில், இயேசு தெய்வமாக இல்லாவிட்டால், அவர் தெய்வமென்று சொல்லப்படாவிட்டால், அவரது மரணம் முழு உலகத்தின் பாவத்திற்கும், விலைக் கிரயமாக செலுத்தப்பட்டிருக்க முடியாது (I யோ. 2:2). தேவன் மாத்திரமே, இப்படிப்பட்ட நித்திய விலைக்கிரயத்தை செலுத்த முடியும். தேவன் மாத்திரமே உலகத்தின் பாவத்தை சுமந்து (II கொரி. 5:21) மரித்து உயிரோடெழும்ப முடியும். அவர் பாவத்திற்குமேல், மரணத்திற்கு மேல் வெற்றி சிறந்து, தேவனாக நிருபித்தார்.

 கேள்வி: தேவனின் பண்புகள் யாவை?

பதில்:
முயற்சிக்கும் போது தேவனை குறித்த அனேக காரியங்களை அறிய முடியும். இதை ஆராய்கிறவர்கள் இந்த விளக்கங்களை முழவதுமாய் கொடுக்கப்பட்டுள்ள வேத வசன குறிப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள் வேதாகம குறிப்பு இன்றியமையாததாகும். வேதத்தின் ஆலோசனை இல்லாமல், மனிதனுடைய ஆலோசனை இருக்குமானால் அவைகள் வீண்.


ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துவது மற்றவர்கள் அறியும்வண்ணம் இருக்க வேண்டும் என்று தன்மை தெரிந்து கொண்டார் தேவனின் பண்புகளில் ஒன்று "ஒளி" தன்னைத் தானே வெளிப்படுத்தி காண்பித்தல் (ஏசா 60:19 யாக் 1:17) தன்னை வெளிப்படுத்தின தேவனை புறக்கணியாமல் அவரை பற்றி அறிய முற்படுவோம் இயேசு கிறிஸ்து தேவனைப் பற்றி அறிய தயை செய்வாராக.

முதலாவது தேவன் நம்மை படைத்தார் நாம் அவருடைய கரத்தின் கிரியைகள் என்பதை அறிந்துகொள்வோம் (ஆதி 1:11 சங். 24:1) தேவன் மனிதனை தன்னுடைய சாயலாக சிருஷ்டித்து அவருடைய மற்ற படைப்புகளை ஆள அவனை வைத்தார் (ஆதி. 1:26-28) இந்த பரந்த படைப்பு அதின் அழகு அதின் ஒழுங்குகள் ஆகியவற்றின் மூலம் தேவனுடைய பண்புகளை நாம் காணமுடியும். தேவன் எப்படிப்பட்டவர் என்பதை ஆராய்ச்சி செய்யும் நமக்கு கீழே கொடுக்கபட்டுள்ள தேவனுடைய சில பெயர்கள் நமக்கு உதவியாக இருக்கும்.

ஏலோஹிம் - வல்லமையுள்ளவர் (ஆதி:1:1)

அடோனாய் கர்த்தர் (எஜமானுக்கும் வேலைகாரனுக்கம் உள்ள உறவை காட்டுகிறது) (யாத். 4:10,13)

எல்எலியோன் - உன்னதமான தேவன் (ஆதி. 14:20)

எல்ரோன் - காண்கிற தேவன் (ஆதி 16:13)

எல்ஷடாய் - சர்வவல்லவர்(ஆதி17:1)

எல்ஹோலம் - அநாதி தேவன் (ஏசா 40:28) யாவே - கர்த்தர் நானே (யாத் 3:13,14)

இருக்கிறவராகவே இருக்கிறேன் நாம் ஆண்டவருடைய பண்புகளைப் பார்ப்போம் அவர் நித்தியமானவர். அப்படியானால் அவருக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவருக்கு அழிவில்லை. அவரை அளவிடமுடியாது (உபா 33:27) (சங் 90:2) (தீமோ. 1:17) அவர் மாறாதவர் (மல் 3:6) (எண்.23:19) (சங். 102:26-27)

அவர் எங்கும் நிறைந்தவர். எங்கும் நிறைந்தவர் என்பதினாலே எல்லாமே தேவனல்ல (சங்.139:7-13, எரே 23:23) அவர் எல்லாம் அறிந்தவர் நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் நம்முடைய சிந்தனைகள் எல்லாவற்றையும் அறிந்தவர் (சங் 139:1-5, நீதி 5:21)

தேவன் ஒருவரே, அவரையன்று வேறு தேவனல்ல, அவர் ஒருவரே பாத்திரர் (உபா. 6:4) தேவன் நீதியுள்ளவர், தவறான காரியங்களை விரும்பாதவர். ஆவருடைள நீதியும், நியாயமும் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கே! இயேசு கிறிஸ்துவும் நம்முடைய பாவங்களுக்காய் தேவனுடைய நியாயத்தீர்ப்பை சந்தித்தார் (யாத் 9:27, மத்.27:45இ46, ரோ 3:21-26)

தேவன் பேரரசர், அவர் உன்னதமானவர், அவர் செய்கின்ற காரியங்களுக்கு நாம் இடையுராய் இருக்க முடியாது (சங் 93:1, சங். 95:3, எரே 23:20) தேவன் ஆவியாய் இருக்கிறார். அவரை நாம் காணமுடியாது (யோவான் 1:18, 4:24) தேவன் திரித்துவமுள்ளவர். திருத்துவம் என்றால் மூவரில் ஒருவர். மகிமையில, வல்லமையில் சமமானவர்கள், கருத்தில் ஒன்றுபட்டவர்கள், பெயரில் "ஒருமை". "ஒருமை" என்பது தன்மையில் மூன்று பேரும் வேறுபட்டவர்கள் என்பதைக்காட்டுகிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி (மத் 28:19 மாற் 1:9-11). தேவன் சத்தியமுள்ளவர், அவர் பொய்சொல்கிறவர் அல்ல, அவர் கறைபடாதவர் (சங் 117:2, 1சாமு 15:29)

தேவன் பரிசுத்தமானவர். ஆவர் அநீதீக்கு விலகுகிறவரும். அதை வெறுக்கிறவருமாய் இருக்கிறார். அவர் தீமையைக்கண்டு கோபம் கொள்கிற தேவன். வேதத்திலே அக்கினியானது பரிசுத்த ஆவியோடு ஒப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார். (ஏசா 6:3) (ஆபகூக் 1:13, யாத் 3:2-5, எபி 12:29) 'தேவன் கிருபை உள்ளவர்" என்ற வார்த்தையானது அவருடைய அன்பு, தயவு, கருணை, நற்குணங்கள் போன்றவைகளோடு ஒருங்கிணைந்த வார்த்தையாகும். ஆவர் கிருபை உள்ளவராக இல்லை என்றால், அவருடைய பண்புகள் நம்மை அவரை விட்டு விலக்கியிருக்கும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழாமல் நாம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையிலே அறிய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் (யாத் 34:6 சங் 31:19, யோவா3:16, 17:3).

கேள்வி: வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா?

பதில்:
இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதின் மூலம் வேதத்தை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். வேதம் நம் வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால், வேதம் அடிப்படையிலே நிலையான அழுத்தத்தை நமக்கு கொடுக்கிறது. வேதம் தேவனுடைய வார்த்தை என்றால், நாம் அதிலே பலனடைந்து அதை படித்து அதற்கு கீழ்படிந்து முழவதுமாய் அதை நம்ப வேண்டும். தேவன் நமக்கு வேதத்தை கொடுத்ததின் நோக்கம். அவர் நம்மில் வைத்த அன்பின் உதாரணம், ஆதாரமும் ஆகும்.


"வெளிப்படுத்தல்" என்ற வார்த்தையின் அர்த்தம் தேவன் மனுமக்களோடு சரியான உறவை வைத்துக்கொள்ளுதல் மற்றும் மனுமக்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளுதல் ஆகும். தேவன் இவைகளை வேதத்தில் வெளிப்படுத்தாதிருந்தால் நாம் அறிந்திருக்க முடியாது. 1500ஆண்டுகளுக்கு மேலாக தேவன் தன்னை வெளிப்படுத்தினதை வேதத்தின் மூலம் காணலாம். மனிதன் தேவனோடு எப்படி சரியான உறவை வைத்துக்கொள்வது என நமக்கு வெளிப்படுத்துகிறது. நம்முடைய தனிப்பட்ட காரியங்களுக்கும், விசுவாச சம்மந்தபட்ட காரியங்களுக்கும் வேதமே முழு அதிகாரம் நிறைந்ததாய் இருக்க வேண்டும்.

வேதம் தேவனுடைய வார்த்தையா? அல்லது ஒரு நல்ல புத்தகமா? என்று எப்படி அறிவது? இதுவரை எந்த மத புஸ்தகத்திலும் எழுதப்படாத ஒற்றுமை வேதத்தில் உண்டு அது என்ன? வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தைதானா? ஆதாரம் உண்டா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு வேதத்தை நாம் சரியாக ஆராய்வோம் என்றால், தேவனுடைய வார்த்தைகளாக அருளப்பட்ட வேதவசனங்களில் போதுமான பதில் கிடைக்கும்.

வேதம் தேவனுடைய வார்ததை என்பது சந்தேகமே இல்லை. (2 தீமோ.3:15-17) வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்திற்கும். கடிந்து கொள்ளுதலுக்கும். சீர்திருத்தலுக்கும், நீதியைபடிப்பித்தலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாய் இருக்கிறது என்று சொல்லுகிறது.

வேத வசனங்கள் தேவனால் அருளப்பட்டபைகள்தானா? அவைகள் உண்மைதானா என்பதை அறிய இன்று வேதத்தின் உள்ளடங்கிய ஆதாரங்கள் அவசியம். வேதத்தின் உள்ளடங்கிய ஆதாரங்கள் முதல் ஆதாரம் அவைகள் 66 புஸ்தகங்களாயிருந்தாலும் அவைகள் எல்லாம் ஒரே குறிக்கோள் உடையதாயிருக்கிறது. மூன்று கண்டத்தில் மூன்று வித்தியாச மொழிகளை கொண்டு, வித்தியாசமான வாழ்கை, நடத்தை கொண்ட 40க்கும் அதிகமான மக்களால் எழுதப்பட்டாலும், துவக்க முதல் முடிவு மட்டும் எந்த முரண்பாடும் இல்லாமல் ஒன்றுபட்ட ஒரே புஸ்தகம். வேறே எந்த ஒரு புஸ்தகத்திலும் இல்லாத ஒற்றுமை வேதத்தில் இருப்பதினால் இது தேவ ஆவியானவரால், தேவ பிள்ளைகளைக் கொண்டு எழுதப்பட்டது என்பது நிரூபனமானகிறது.

வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை அதின் தீர்க்கதரிசன வசனங்கள் நிரூபிக்கிறது. வேதத்தில் அதிகமான தீர்க்கத்தரிசனங்கள் அடங்கியிருக்கிறது ஒரு தேசத்தை குறித்ததான எதிர்காலம் , ஒரு மனிதனை குறித்ததான எதிர்காலம். யார் மேசியாவாக வரப்போவது? இரட்சகர் யார்? என்று இயேசு கிறிஸ்துவை குறித்து மாத்திரம் முன்னூறுக்கும் அதிகமான தீர்க்கதரிசன வசனங்கள் பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ளது இயேசு கிறிஸ்து யாருடைய குடும்பத்தில் பிறப்பார்? எப்படி, எங்கே பிறப்பார்? எப்படி மரிப்பார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார். வேதத்தின் தீர்க்கதரிசனங்கள் ஒன்றும் தவறிபோனதில்லை வேறு எந்த மத புத்தகமும் வேதத்தை போன்று பின் நடக்க போகின்றவைகளை முன்பாகஅறிவித்ததில்லை.

மூன்றாவது வேதத்தின் ஒற்றுமையும், வல்லமையும் தேவவசனம் தான் என்று நிரூபிக்கிறது. பாவிகள் மனந்திரும்புகிறார்கள், ஓரினச் சேர்கையில் கட்டுண்டவர்கள் விடுதலையாகிறார்கள், கடினமுள்ள குற்றவாளிகள் மனம் திரும்புகிறார்கள். போதைக்கு அடிமையானவர்கள் சுகம் அடைகிறார்கள், அன்பு கூறாதவர்கள் அன்பு கூறுகிறார்கள். வேதம் இப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வரக்கூடிய வல்லமையுடையது ஏனென்றால் வேதம் உண்மையிலே தேவனுடைய வார்த்தை. வேதத்தின் வெளிப்புற ஆதாரங்களும், வேதம் உண்மையிலே தேவ வசனம் என்று நிரூபிக்கிறது.

தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த சான்று மற்றும் அனேக சரித்திர சான்றுகளும் உண்டு. உண்மைகள் நிறைந்த. சரியான காலங்கள் கொண்ட சரித்திர ஆதாரங்கள் உண்டு. வேதத்தில் உள்ள காலங்கள் நேரங்கள் எல்லாம் உண்மை என்றும்இ எந்த ஒரு புஸ்தகத்திற்கும் இல்லாத உண்மையான சரித்திர ஆதாரங்கள் வேதத்திற்கு உண்டு என்று சரித்திர ஆசிரியரும், தொல்பொருள் ஆராய்சியாளர்களும் வேதம் உண்மை என்றும் வேதவசனம் தேவனுடைய வார்த்தை என்றும் நிரூபிக்கின்றனர்.


கேள்வி: கிறிஸ்தவம் என்றால் என்ன?

பதில்:
1கொரி.15:1-4 சொல்கிறது, அன்றியும் சகோதரரே நான் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நீங்கள் அதை கைக்கொண்டால் அதனாலே இரட்சிக்கப்படுவீர்கள் .மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்கும். நான் அடைந்ததும் உங்களுக்கு பிரதானமாய் ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,அடக்கம் பண்ணபட்டு, வேதவாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார்”. கிறிஸ்தவர்கள் வேதவசனங்கள் தேவனால் அருளபட்டவை என்றும் அதில் எந்த பிழைகளும் இல்லை என்றும் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி ஆகிய மூன்று தன்மைகளில் தேவன் நம்மை வெளிபடுத்துகிறார் என்றும் விசுவாசிக்கின்றனர் (2தீமோ 3:16,7, 2பேது 1:20-21).


தேவன் மனிதன் தன்னோடு ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று அவனை படைத்தார். ஆனால் அவனுடைய பாவம் தேவனை விட்டு அவனை பிரித்தது (ரோ 5:12,3:23) என்பதை கிறிஸ்தவர்கள் நம்புகிறோம். தேவனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் முற்றிலும் மனிதனாகவும் முற்றிலும் தெய்வமாகவும் சுற்றி திரிந்தார், அநதபடியே சிலுவையிலும் மரித்தார் என்று கிறிஸ்தவம் போதிக்கிறது (பிலி 2:6-11) இயேசு கிறிஸ்து மரித்தபின் அடக்கம் பண்ணபட்டு, உயிர்த்தெழுந்து விசுவாசிகளுக்காய் பிதாவின் வலது பாரிசத்தில் இருந்துகொண்டு பரிந்து பேசுகிறார் (எபி 7:25) என்பதையும்,கிறிஸ்துவின் மரணம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் தேவனுடன் முறிக்கப்பட்டதான நம்முடைய உறவு மீண்டும் சரிபடவும் போதுமானது என்பதை விசுவாசிக்கிறோம் (எபி 9:11-14,10:10. ரோ. 6:23, 5:8).

நாம் இரட்சிக்கபட வேண்டும் என்றால் சிலுவையில் இயேசு முடித்ததான பணியின் மேல் நம் விசுவாசத்தை செலுத்த வேண்டும். இயேசு என்னுடைய பாவத்திற்காய் என்னுடைய இடத்தில் பலியானார் என்று விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொள்கிறவன் இரட்சிக்கப்படுவான். இதை காட்டிலும் அதிகமானதை யாரும் செய்ய அவசியிமல்லை. தம் சொந்த கிரியைகளில் தேவனை எவரும் பிரியபடுத்த முடியாது, ஏனென்றால்! நாம் அனைவரும் பாவிகள் (ஏசா 6-7,53:6) நாம் அதிகமானதொன்றும் செய்யவேண்டியது இல்லை! ஏனென்றால் கல்வாரிசிலுவையில் இயேசு கிறிஸ்து எல்லா பணியையும் செய்து முடித்தார் “முடிந்தது” (யோ 19:30).
கேள்வி: கடவுள் என்பவர் உண்மைதானா?

பதில்:
“கடவுள்” என்பவர் உண்மைதான்; என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற மூன்று விதங்களினால் அறிந்து கொள்கிறோம். படைப்பு, தேவன் அருளின "வார்த்தை" மற்றும் தேவனின் ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து.


தேவன் என்பவர் உண்மைதான் என்பதற்கு அடிப்படையான ஆதாரத்தை அவர் உண்டாக்கினவைகளிலிருந்து பெற்றுக்கொள்கிறோம். “வானங்கள் தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது” (சங். 19:1). எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும், ஆதலால் அவர்கள் சாக்கு போக்கு சொல்ல இடமில்லை” (ரோ. 1:20).

நான் ஒரு கைக்கடிகாரத்தை வயல்வெளியிலே கண்டுபிடிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுவோம். நான் அது ஒன்றுமில்லாமையிலிருந்து தற்செயலாகத் தோன்றினது என்றோ அல்லது அது ஏற்கனவே இருந்தது என்றோ நான் சொல்ல மாட்டேன். அந்த கைக்கடிகாரத்தின் வடிவமைப்பைக் கொண்டு ஒரு வடிவமைப்பாளர் கண்டிப்பாக இருக்கிறான் என்பதையே நான் நம்புவேன் இவைகளைக் காட்டிலும் தேவனின் படைப்பிலே, அழகான வடிவமைப்பையும், தெளிவான தோற்றத்தையும் நான் காண்கிறேன். கடிகாரங்களிலே நேரத்தைப் பார்ப்பது, கடிகாரத்தினாலல்ல, தேவனின் படைப்பிலுள்ள பூமியின் சுழற்சியினாலேயே நேரத்தைக் கணக்கிடுகிறோம். உலகத்தின் அமைப்பு அழகான படைப்பை வெளிப்படுத்துகிறது. அதைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறாரென்பதை நமது விவாதத்துக்கு கொண்டுவருகிறது.

ரகசிய குறியீட்டோடு வருகிற ஒரு செய்தி எனக்கு அளிக்கப்படுமேயானால், அதை திறந்து எனக்கு வெளிப்படுத்துகிற ஒருவரின் உதவியை நாடுவேன். ஆக இப்படைப்பை உண்டாக்கின ஒருவர் அந்த இரகசியத்தை மறைவாக அறிவு பூர்வமாக அனுப்பியிருக்கிறார் என்றே நான் சொல்வேன். நமது சரிரத்தின் அனுக்களிலே காணப்படுகிற டி.என்.ஏ. (DNA) குறியீடு எத்தகைய சிக்கல் நிறைந்ததாய்; இருக்கிறது? ஒருவர் அந்த குறியீட்டை (DNA) சரியாக வெளிப்படுத்த வேண்டுமெயானால் அதை நன்கறிந்த ஒருவர் தேவை. அப்படிதானே?

தேவன் அழகாக, இசைவாக அமைக்கப்பட்ட உலகத்தை உண்டாக்கினவர் மட்டுமல்லாமல், ஒவ்வொருவர் உள்ளத்திலும், நித்தியத்தைக் குறித்த உணர்வையும் வைத்திருக்கிறார் (பிர. 3:11) நம் கண்களால் காண்பதைக்காட்டிலும், சிறந்ததொரு வாழ்க்கை இருக்கிறது என்பதே. மனிதனின் உள்ளான எண்ணமாக இருக்கிறது - உலகத்தில் வழக்கமாய் நடைபெறுவதைக் காட்டிலும் மேலான ஒரு நிலை இருக்கிறது. நித்தியத்தைக் குறித்த வெளிப்பாடு குறைந்தபட்சம் இரண்டு வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது. 1. சட்டம் இயற்றுதல் 2. ஆராதனை.

ஓவ்வொரு காலக்கட்டத்திலும் உள்ள நல்லதொரு நாகரிகமும், சமுதாய ஒழுங்கு சட்டத்தை மதித்தே வந்திருக்கிறது. மிகவும் ஆச்சரியமாக, கலாச்சாரத்திற்கு, கலாச்சாரம் வேறுபட்டிருந்தாலும், ஒழுக்கம் என்பது எல்லாராலும் போற்றப்படுவதாக இருக்கிறது. உதாரணமாக அன்பு என்பது எல்லாராலும் மதிக்கப்படுகிறது. அதே சமயம் பொய் சொல்வது, எல்லோராலும் கண்டிக்கப்படுகிறது. பொதுவான ஒழுக்கம் அதாவது நல்லது எது? தீயது எது? என்பதை நிர்ணயிக்கும் உலகளாவிய ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்த நியதி எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் இருந்து ஒழுக்கத்தை நமக்குத்தந்து நடத்துகிறார் என்பதையே சுட்டிக் காண்பிக்கிறது.

அதைப் போலவே உலகத்திலுள்ள மக்களனைவரும் அவர் எந்த கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தேவனைத் தொழுது கொள்ள வேண்டும் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஒருவேளை அவர்கள் தொழுது கொள்கிற தெய்வமோ அல்லது பொருளோ வேறுபட்டிருக்கலாம். ஆனால் மேலான ஒரு சக்தி இருக்கிறது என்பதை எல்லாருடைய உள்ளுணர்வும் ஏற்றுக் கொள்கிறது. தேவன் தமது சாயலாகவே மனிதனை உண்டாக்கினார் என்பதுவே தேவனைத் தொழுது கொள்வதற்கு ஏற்ற மனோபாவத்தை மனிதனுக்குத் தருகிறது (ஆதி. 1:27).

மேலும் தேவன் தமது வார்த்தையைக் கொண்டு (பரிசுத்த வேதாகமத்தில்) தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். பரிசுத்த வேதாகமம் முழுவதுமே தேவன் இருக்கிறாரென்பதற்கு ஆதாரமாகவே இருக்கிறது (ஆதி. 1:1, யாத். 3:14) பெஞ்சமின் பிராங்கிளின் என்பவர் தனது சுயசரிதையை எழுதும்போது, தான் வாழ்ந்தேன் என்பதை நிருபிக்கும்படியாக நேரத்தை செலவிடவில்லை. அதைப்போலவே, தேவனும் பரிசுத்த வேதாகமத்தை நான் ஜீவிக்கிறேன் என்பதற்கு அதிகப்படியான நேரத்தை செலவிடவில்லை. வாழ்க்கையை மாற்றியமைக்கிற பரிசுத்த வேதாகமத்தின் தன்மை, ஒருமைப்பாடு, அதில் சொல்லப்பட்டிருக்கிற அற்புதங்கள் தேவனை வெளிப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்களாயிருக்கிறது.

தமது ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். (யோ. 14:6-11) ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார் யோ. 1:1, 14. “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம், சரிரப்பிரகாரமாக அவருக்குள் (இயேசு கிறிஸ்துவுக்குள்) வாசமாயிருக்கிறது” கொலோ. 2:9.

இயேசுகிறிஸ்துவின் அற்புதமான வாழ்க்கையில் பழைய ஏற்பாட்டின் அத்தனை பிரமாணங்களையும் பூரணமாக கடைப்படித்தார். மட்டுமன்றி மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அவருக்குள் நிறைவேறிவிட்டது (மத். 5:17). இயேசு கிறிஸ்து எண்ணிறந்த அற்புதங்களையும், ஏராளமான மனதுருக்கத்தையும், தான் கொண்டு வந்த செய்தியை உறுதிப்படுத்துவதற்கும், தெய்வத்துவத்திற்கு சாட்சியாகவும் செய்தார். (யோ 21:24,25) அவர் சிலுவையிலறையப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு உயிரோடெழும்பினார். இந்த உண்மை நூற்றுக்கணக்கான சாட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டது (I கொரி. 15:6). ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் இயேசு கிறிஸ்து யார் என்பதற்கு சாட்சியாயிருக்கிறது. பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் சொன்னது போல, ஏதாவதொரு மூளையில் நடந்த சம்பவமில்லை. (அப். 26:26) அநேக நாஸ்திகர்கள் தேவனில்லை என்பதற்கு அநேக ஆதாரங்களை கொடுப்பார்கள். ஆனாலும் அவைகள் அந்த ஆதாரங்களை உறுதிப்படுத்துவதில்லை. சங். 14:13. எல்லாமே விசுவாசத்தினாலேயே உண்டாகிறது எபி 11:6.

கேள்வி: வாழ்க்கையின் அர்த்தமென்ன?

பதில்:
நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது வாழ்க்கை நிறைவேறுதல், வாழ்வின் திருப்தி இவைகளை கண்டு பிடிப்பது எப்படி? நிலைத்திருக்கிற பொருளுள்ள, ஒரு வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதற்கு, எனக்குள் திறமையிருக்கிறதா? அநேகர் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுப் பிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களை எண்ணிப்பார்த்து, ஏன் என் வாழ்வில் விரிசல்? ஏன் நான் வெறுமையாக உணருகிறேன்? நான் நினைத்ததை ஒருவேளை சாதித்தாலும், ஏன் எனக்குள் இவைகள் நடைபெறுகிறது என்று சொல்லி ஆச்சரியப்படுகிறார்கள். ஓரு முறை, ஒரு பேஸ்பால் (Base Ball) விளையாடுபவரிடத்தில் முதலாவது விளையாடத் தொடங்கினபோது, விளையாட்டின் புகழ் உச்சக் கட்டத்தில் ஒருவர் உங்களிடம் என்ன சொல்ல வேண்டுமென்று, எதிர்பார்ப்பீர்கள் என்று சொல்லி கேட்பார்கள். அதற்கு அவர் நான் புகழின் உச்சியில் வரும்பொழுது, ஒன்றுமே இல்லை என்பதை சொல்வதற்கு ஒருவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று பதிலளித்தார். அநேகருடைய முயற்சிகள் பல ஆண்டுகள் கழித்து, அவர்களுடைய நோக்கங்கள் ஒன்றுமில்லை என்பதையே நிருபிக்கிறது.


மனித சமுதாயத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அநேகர், அநேக முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட முயற்சிகளில், இவைகள் அடங்கும், வியாபாரத்தில் வெற்றி, செல்வம் தேடுதல், நல்ல உறவை பராமரித்தல், பொழுதுபோக்கு நற்கிரியைகள் செய்தல் மற்றும் பால் இன காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் போன்றவைகள். இந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றி அடைவது போல காணப்பட்டாலும், அவர்களுக்குள் ஆழமானதொரு வெற்று உணர்வு இருப்பதாக சாட்சி கூறுகிறார்கள். அதாவது ஒரு நிறைவுமே இல்லாதது போன்ற ஒரு உணர்வு மட்டுமே மிஞ்சிஇருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில், பிரசங்கியின் புத்தகத்தை எழுதியவர், இந்த உணர்வை வெளிப்படுத்தும்போது, மாயை, மாயை எல்லாம் மாயை என்று சொல்கிறார்: இந்த ஆக்கியோனிடத்தில் அளவுக்கதியமாக செல்வமிருந்தது. அவரது காலத்திலே வாழ்ந்த எந்த ஒரு மனிதனைக் காட்டிலும் அவனுக்கு ஏராளமான மனைவிகள் இருந்தார்கள். மற்ற இராஜ்ஜியங்கள் பொறாமைப்படத்தக்க அளவில். அரண்மணைகளும், தோட்டங்களும் இருந்தது. புசிப்பதற்கு சிறந்த உணவும், குடிப்பதற்கு நல்ல திராட்சை ரசமும் மற்றும் எல்லா களியாட்டங்களையும் உடையவராயிருந்தார். ஒரிடத்தில் இப்படியாக என் மனம் விரும்பின ஒன்றையாகிலும் நான் தடை செய்ததில்லையென்று சொல்கிறார். தன் காரியங்களைக்காட்டி மொத்தமாக சொல்லும் பொழுது, “சூரியனுக்குக் கீழே நான்படும் பிரயாசங்கள், (கண்களால் பார்ப்பதும், புலன்களால் அனுபவிப்பது மட்டுமே வாழ்க்கை என்று கருதுகிறோம்). எல்லாம் மாயை, ஏன் இந்த வெறுமை? ஏனென்றால், நாம் அவ்வப் பொழுது இங்கு அனுபவிக்கிற எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நோக்கத்தோடு தேவன் நம்மை சிருஷ்டித்தார்.” சாலமோன் தேவனைக்குறித்து இப்படியாக சொல்கிறார்.

“மனிதன் இருதயத்திற்குள் நித்தியத்தை வைத்திருக்கிறார் என்று சொல்கிறார். அவ்வப்போழுது நாம் அனுபவிக்கிறவைகளோடு காரியம் முடிந்துவிடவில்லை என்பது இருதயத்திற்கே தெரியும். பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் தேவன் மனிதனை தனது சாயலாகவே சிருஷ்டித்தார் என்று காண்கிறோம். (ஆதி. 1:6) அதாவது நாம் தேவனைப் போலவே இருக்கிறோம். வேறு எந்த விதத்திலும் மற்றனதப்போலவோ, மற்றவைகளைப் போலவோ இல்லை. அது மாத்திரமல்ல, மனிதன் பாவத்தில் விழ்ந்து, சாபம் பூமிக்கு மேல் வருவதற்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிற இவைகளெல்லாம் உண்மையானவைகள் என்பதை காண்கிறோம்.

1. தேவன் மனிதனை சமுதாயத்தில் உள்ள ஒரு ஜீவனாகவே படைத்தார் (ஆதி.2:18-25).

2. தேவன் மனிதனுக்கு வேலை கொடுத்தார்.

3. தேவன் மனிதரோடு நல்ல உறவு வைத்திருந்தார் (ஆதி. 3:8).

4. தேவன் பூமியிலுள்ளவைகளின் மேல் மனிதனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார் (ஆதி. 1:26).

இவைகளுடைய முக்கியத்துவமென்ன? நம்முடைய வாழ்க்கையின் நிறைவேற்றுதலுக்கு, இவைகள் அவசியமானவைகள் என்பதை, வேன் திட்டமிட்டிருந்தார் என்றே நான் விசுவாசிக்கிறேன். ஆனால் மனிதன் விழ்ச்சியினிமித்தமாக (மனிதன் தேவனோடு வைத்திருந்த உறவில்) மனிதன் மிகவும் பாதிக்கப்பட்டான். பூமியின் மேல் சாபம் வந்தது.( ஆதி.3)

வேதாகமத்தின் கடைசிப் புத்தகமாகிய வெளிப்படுத்தல் விஷேசத்தில், கடைசி நாட்களில் நடைபெறும் எல்லா சம்பவங்களையும். வெளிப்படுத்தின பின்பு நாம் அறிந்திருக்கிறபடி, இந்த பூமியையும் இந்த வானத்தையும் அழித்து புதிய வானத்தையும், புதிய பூமியையும் உண்டாக்கி, அதை நித்தியமாக நிலைநிறுத்துவார் என்று வெளிப்படுத்துகிறதைப் பார்க்கிறோம். அப்பொழுது மனிதனோடு தேவன் கொண்டிருந்த பரிபூரணமான உறவை மீண்டுமாக மீட்டுத்தருவார். பாத்திரமற்றவர்களாக தீர்க்கப்பட்டவர்கள், அக்கினிக் கடலிலே போடப்படுவார்கள். (வெளி. 20:11-15) சாபமானது நீக்கப்படும், இனி பாவமிராது, துக்கமில்லை, வியாதியில்லை மரணமில்லை வேதனையில்லை (வெளி. 21:4) விசுவாசிகள் இவைகளெல்லாவற்றையும் சுதந்தரித்து கொள்வார்கள். தேவன் அவர்களோடு வாசமாயிருப்பார். அவர்கள் அவருடைய குமாரனாயிருப்பார்கள். (வெளி.2:7). இப்படியாக தேவன் உண்டாக்கின இந்த உறவின் வளையத்துக்குளே மனிதன் மீண்டுமாக வருகிறான். மனிதன் பாவஞ்செய்து தேவனோடுள்ள உறவை இழந்தான். தேவன் யாரெல்லாம் பாத்திரவான்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நித்தியமாக இந்த உறவை மீட்டுக் கொடுத்தார். ஆகவே எதையாவது, எல்லாவற்றையாவது கற்றுக்கொள்ள முயற்சிப்பது என்பது மரணமானது நித்தியத்தினின்று தேவனை பிரித்ததைப் பார்க்கிலும், மேலானதும், பயனற்றதுமாக இருக்கும். ஆனால் தேவன் நித்தியமான சந்தோஷத்தை பெற்றுக் கொள்ளும் படியாக அந்த வாழ்க்கையை பயனுள்ளதும், திருப்தி நிறைந்ததுமாக மாற்றியிருக்கிறார். இப்பொழுது எப்படியாக நித்திய சந்தோஷத்தையும், பூமிலே மேலான வாழ்வு என்பதையும் பார்ப்போம்.

இயேசுகிறிஸ்து மூலமாக மீட்டு கொடுக்கப்பட்ட அர்த்தமுள்ள வாழ்க்கை:

மேலே குறிப்பிட்டது போல, உண்மையான அர்த்தமுள்ள வாழ்வு இப்பொழுதும் நித்தியத்திலும். தேவனோடுள்ள உறவை மீட்டு கொள்வதன் மூலமாகவே பெற்று கொள்ள முடியும். இந்த உறவை ஆதாமும், ஏவாளும் பாவஞ் செய்ததினிமித்தமாகவே, அந்த உறவை இழந்து போனார்கள். இன்றைய நிலையில் தேவனோடு உள்ள அந்த உறவை அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து மூலமாக பெற்றுக்கொள்வது சாத்தியமாகிறது. (அப்.11:12,யோ. 14:6, யோ.1:12) ஒரு மனிதன் மனந்திரும்பும் பொழுது, அதாவது ஒருவனோ ஒருத்தியோ. புhவத்தில் வாழ்கிறதை விரும்பாமல் கிறிஸ்துவினால் பெரிய மனுஷனாக அல்லது மனுஷியாக மாற விரும்பும் பொழுது நித்திய ஜீவனை அவன் ஆதாயம் செய்து கொள்கிறான் அல்லது கொள்கிறாள். இயேசுவே இரட்சகரென்று அவரை சார்ந்து கொள்ள துவங்குகிறார்கள்.

இயேசுவே இரட்சகர் என்று அறிந்து கொள்வதினால் மாத்திரம் வாழ்க்கையின் முழு அர்த்ததை அறிந்து கொள்வதில்லை. அவரைக் கற்றுக்கொள்வதன் மூலமாக, பரிசுத்த வேத வசனங்களைத் தியானிப்பதின் மூலமாக அவரது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவரோடு நடப்பதின் மூலமாக வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுகொள்கிறோம். ஒருவேளை நீங்கள் அவிசுவாசியாயிருந்து, இப்பொழுது இயேசுவை ஏற்றுக் கொண்டவராக இருக்கலாம். இவைகள் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பலனை அல்லது நிறைவை தராததுபோலிருக்கலாம். மேலேயுள்ளவைகளை தயவுசெய்து வாசியுங்கள். இயேசு சொல்கிறார் வருத்தப்பட்டு பாவஞ்சுமக்கிறவர்களே, நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் முகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயிருக்கிறது (மத். 11:28-30, யோ. 10:10) நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்மைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். தன் ஜீவனை இழந்து போகிறவன், அதை கண்டடைவான். மத்.16:24,25. கர்த்தரிடத்தின் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்.

இந்த வேத வசனங்களெல்லாம் நாம் தெரிந்து கொள்வதைப் பொறுத்தே, வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. நாம் தொடர்ந்து நம் வாழ்க்கைக்கு நாமே வழிகாட்டலாம் (அதன் பெலன் வெறுமையான வாழ்வு) அல்லது தேவனைப் பின்பற்று வதற்கு நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது தேவ சித்தத்திற்கு நம்மை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழலாம். (அதன் பலனாக பரிபூரணமாக வாழ்க்கையையும், இருதய வாஞ்சை நிறைவையும் பெற்றுக் கொள்கிறோம். ஏனென்றால், நம்மை உண்டாக்கின நமது தேவன் நம்மை நேசிப்பது மாத்திரமல்ல, நமக்கு மிகவும் சிறந்ததையே கொடுக்க விரும்புகிறார். (இலகுவான வாழ்க்கை என்பதைக் காட்டிலும், நிறைவான வாழ்க்கை தருகிறார்)

இறுதியாக ஒரு போதக நண்பரிடமிருந்து கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் ஒரு விளையாட்டு ரசிகரென்று வைத்துக் கொள்வோம், ஒரு சிறந்த விளையாட்டை பார்க்கத் தீர்மானித்திருக்கிறீர்கள். அதற்காக ஒரு சில ஆயிரங்களை செலவழித்து, உயர்ந்த இடத்தைப் பெற்றுப் பார்க்க இருக்கலாம். ஏராளமான பணம் செலவழித்து, மைதானத்திற்கு மிக அருகில் உட்கார்ந்து பார்க்கலாம் இது ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஒப்பாயிருக்கிறது. ஞாயிற்று கிழமை கிறிஸ்தவர்களுக்கு தேவனை அருகிலே பார்பதென்பது கூடாத காரியம். ஏனென்றால் அதற்கான விலையை அவர்கள் செலுத்தவில்லை. அதே சமயத்தில் தேவன் கிரியை செய்வதை அருகாமையிலிருந்து பார்க்க விரும்புகிறவர்கள் சீடனாயிருக்கிறார்கள். சொந்த விருப்பத்தை நிறுத்தி தேவனுடைய நோக்கத்தை தொடர்வதற்கு தங்களை ஒப்புக் கொடுக்கிறார்கள். இதற்கு அவர்கள் விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறார்கள். (தங்களையும், தங்களுடைய சித்தத்தையும் பரிபூரணமாக அர்ப்பணித்திருக்கிறார்கள்) அவர்கள் பரிபூரணமாக தங்கள் வாழ்க்கையை அணுவவிக்கிறார்கள். அவர்கள் யாரையம் சந்திப்பதற்கு தயங்குவதில்லை. நீங்கள் விலைக்கிரயமாக செலுத்தியிருக்கிறீர்களா? இயேசுவைப் பின்பற்றுவதற்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக, நோக்கமுள்ளதாக மாறும். இதில் தாழ்ச்சி ஏற்படாது.

கேள்வி: பரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்?

பதில்:
பரிசுத்த ஆவியானவர் யார் என்பதைக் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு மாயமான சக்தி என்று சிலர் நினைக்கின்றனர். வேறு சிலரோ பரிசுத்த ஆவி கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்காக தேவனால் அளிக்கப்படும் ஆள்தத்துவம் இல்லாத சக்தி என்று நினைக்கின்றனர். பரிசுத்த ஆவியானவரைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? சுருக்கமாகக் கூறினால், பரிசுத்த ஆவியானவர் தேவன் என்று வேதாகமம் பறைசாற்றுகின்றது. மேலும், பரிசுத்த ஆவியானவர் தெய்வீகத் தன்மை உடையவர்; சிந்தை, உணர்வுகள் மற்றும் சித்தம் அனைத்தும் உடைய ஒரு நபர் என்றும் வேதாகமம் கூறுகிறது.


பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பது வேதாகமத்தின் பல இடங்களில் தெளிவாகக் காணப் படுகிறது உதாரணமாக, அப்போஸ்தலர் 5: 3-4. இந்த வசனங்களில் பேதுரு அனனியாவிடம் அவன் ஏன் பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் கூறினான் என்று, அவன் “மனிதனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னான்” என்றும் கண்டிக்கிறான். இது பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் கூறுவது என்பது தேவனிடத்தில் பொய் கூறுவதாகும் என்பதைக் காட்டுகின்றது. மேலும், தேவனுக்குரிய குணாதியங்களை உடையவராயிருப்பதாலும் பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, அவர் சர்வவியாபிகர் என்பதை சங்கீதம் 139: 7-8 ல் அறியலாம். “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.” மேலும், 1 கொரிந்தியர் 2: 10-11 வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் சர்வத்தையும் அறிந்தவர் என்பதையும் நாம் அறியலாம், “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்துருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.”

மேலும், பரிசுத்த ஆவியானவர் சிந்தை, உணர்வுகள் மற்றும் சித்தம் உடையவராயிருப்பதால் அவர் தெய்வீகத்தன்மை உடையவர் என்று நாம் அறியலாம். பரிசுத்த ஆவியானவர் சிந்திக்கிறவர் மற்றும் அறிகிறவர் (1 கொரிந்தியர் 2: 10). பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தமுடியும் (எபேசியர் 4:30). ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26-27). அவர் தமது சித்தத்தின் படி தீர்மானிக்கிறார் (1 கொரிந்தியர் 12:7-11). பரிசுத்த ஆவியானவர் தேவன், திரித்துவத்தில் மூன்றாம் நபர். இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்ததுபோல் தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் உண்மையாகவே தேற்றரவாளனாகவும், போதிக்கிறவராகவும் செயல்படமுடியும். (யோவான் 14: 16,26; 15:26)

கேள்வி: கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதத்தின் அடிப்படையிலானதா?

பதில்:
இயேசு தம்மைக் குறித்து கூறிய குறிப்பிட்ட கூற்றுக்களோடு கூட அவரது சீஷர்களும் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை அறிக்கையிட்டுள்ளனர். தேவனாலே மட்டும் செய்யக்கூடிய பாவத்தை மன்னிக்கும் தன்மை (ஆம் தேவனே பாவத்தினால் பாதிப்புக்குள்ளானவர்) (அப்போஸ்தலர் 5:31; கொலொசேயர் 3:13; சங்கீதம் 130:4; எரேமியா 31:34) இயேசுவுக்கு உண்டு என்று பறைசாற்றினார்கள். தோமா இயேசுவை நோக்கி, “என் ஆண்டவரே, என் தேவனே!” என்று கதறினார் (யோவான் 20:28). பவுல் இயேசுவை “மகா தேவனும், இரட்சகரும்” (தீத்து 2:13) என்று கூறி, மேலும் இயேசு மனிதனாக அவதரிப்பதற்கு முன், “தேவனுடைய ரூபமாயிருந்தார்” (பிலிப்பியர் 2:5-8) என்றும் சுட்டிக்காட்டுகிறார். பிதாவாகிய தேவன் இயேசுவைக் குறித்து “தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது” என்று கூறுகிறார் (எபிரேயர் 1:8). யோவான் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை [இயேசு] தேவனாயிருந்தது” என்று குறிப்பிடுகிறார் (யோவான் 1:1). வேதாகமத்தின் பல பகுதிகள் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை எடுத்துரைக்கின்றன (பார்க்க: வெளிப்படுத்தல் 1:17, 2:8, 22:13; 1 கொரிந்தியர் 10:4; 1 பேதுரு 2:6-8; சங்கீதம் 18:2, 95:1; 1 பேதுரு 5:4; எபிரேயர் 13:20). கிறிஸ்து அவரது சீஷர்களால் தேவனாக எண்ணப்பட்டார் என்பதற்கு இவற்றில் ஒன்றே போதுமானது.


பழைய ஏற்பாட்டில் யெகோவாவிற்கே (தேவனுடைய அதிகாரப்பூர்வமான நாமம்) உரிய நாமங்கள் இயேசுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டு நாமமான “மீட்பர்” (சங்கீதம் 130:7; ஓசியா 13:14) புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது (தீத்து 2:13; வெளிப்படுத்தல் 5:9). மத்தேயு 1 ல், இயேசு இம்மானுவேல்-“தேவன் நம்மோடிருக்கிறார்” என்றழைக்கப்படுகிறார். சகரியா 12:10 ல், யெகோவா தான், “அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து,” கூறுகிறார். ஆனால் புதிய ஏற்பாடு இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறிப்பிட இந்த வசனத்தைப் பயன்படுத்துகிறது (யோவான் 19:37; வெளிப்படுத்தல் 1:7). யெகோவாவைக் குறித்தும், இயேசுவைக் குறித்தும் “குத்தப்பட்டு நோக்கிப்பார்க்கப்படுவார்” என வேதாகமம் சொல்லுமானால், இயேசுவும் யெகோவாவும் ஒன்றே என்று அர்த்தம் கொள்ளமுடியும். மேலும், இயேசுவினுடைய நாமம் ஜெபத்தில் தேவனுடைய நாமத்தோடு பயன்படுத்தப்பட்டுள்ளது, “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” (கலாத்தியர் 1:3; எபேசியர் 1:2). கிறிஸ்து தெய்வீகத்தன்மை இல்லாதவரென்றால், இது தேவதூஷணமாகிவிடும். இயேசுவின் ஞானஸ்நானக் கட்டளையிலும் இயேசுவினுடைய நாமம் தேவனுடைய நாமத்தோடு இணைந்து காணப்படுகிறது, “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே [ஒருமை]” (மத்தேயு 28:19; மற்றும் 2 கொரிந்தியர் 13:14 யையும் காண்க).

தேவனால் மட்டுமே செய்யக்கூடிய செயல்கள் இயேசுவுக்கு ..... இயேசு மரித்தோரை எழுப்பினது மட்டுமல்லாமல் (யோவான் 5:21, 11:38-44) பாவத்தையும் மன்னித்தார் (அப்போஸ்தலர் 5:31, 13:38), அவர் உலகைப் படைத்து, தாங்கவும் செய்கிறார் (யோவான் 1:2; கொலொசேயர் 1:16-17). யெகோவா மட்டுமே சிருஷ்டிப்பின் போது இருந்தார் என்பதை ஒருவர் எண்ணும் போது இது மேலும் தெளிவாகின்றது. மேலும், தேவன் மட்டுமே உடைய தன்மைகளை கிறிஸ்து உடையவராயிருக்கிறார்: நித்தியத்தன்மை (யோவான் 8:58), எங்கும் நிறைந்த தன்மை (மத்தேயு 18:20, 28:20), சகலத்தையும் அறிதல் (மத்தேயு 16:21), சர்வவல்லமை (யோவான் 11: 38-44).

இப்போது, தான் கடவுள் என்று கூறுவது அல்லது அது உண்மையென்று மற்றவர்களை நம்பவைத்து முட்டாளாக்குவது வேறு, முழுக்க முழுக்க அது உண்மையென்று நிரூபிப்பது வேறு. கிறிஸ்து தன்னுடைய தெய்வீகத்தன்மைக்கான கோரிக்கையை பல அதிசயங்கள் மூலம் நிரூபித்திருக்கின்றார். இயேசுவின் அற்புதங்களில் ஒருசிலவற்றில் தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றியது (யோவான் 2:7), தண்ணீரின் மேல் நடந்தது (மத்தேயு 14:25), பொருட்களைப் பன்மடங்காக்கியது (யோவான் 6:11), குருடரைக் குணமாக்கியது (யோவான் 9:7), முடவரைக் குணமாக்கியது (மாற்கு 2:3), பிணியாளிகளைக் குணமாக்கியது (மத்தேயு 9:35; மாற்கு 1:40-42), மேலும் மரித்தோரை உயிரோடு எழுப்பியது (யோவான் 11:43-44; லூக்கா 7:11-15; மாற்கு 5:35) ஆகியவையும் அடங்கும். மேலும், கிறிஸ்து தாமே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். புறமதத்திலுள்ள புராணக்கதைகளின் பெயரளவில் மரித்து, உயிர்த்தெழும் கடவுள்களோடு ஒப்பிடும் போது, உயிர்த்தெழுதலைப் போன்ற எதுவும் மற்ற மதங்களால் வலியுறுத்தப்படவில்லை, மற்றும் மற்ற எந்தக் கோரிக்கையும் இந்த அளவிற்கு வேதத்திற்கு அப்பாற்பட்ட சான்றுகளை உடையதாயில்லை.

கிறிஸ்தவரல்லாத குற்றங்காண்கிற (நடுநிலை) அறிஞர்கள் கூட ஏற்றுக் கொள்ளுகின்ற இயேசுவைக் குறித்து குறைந்தது பன்னிரண்டு வரலாற்று உண்மைகள்:

1. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
2. அவர் அடக்கம் பண்ணப்பட்டார்.
3. அவரது மரணம் சீஷர்களை கலங்கச் செய்து நம்பிக்கை இழக்கவும் செய்தது.
4. சில நாட்களுக்குப் பின்பு இயேசுவின் கல்லறை காலியாகக் கண்டுபிடிக்கப் பட்டது (கண்டுபிடிக்கப் பட்டதாகக் கோரப்பட்டது).
5. உயிர்த்தெழுந்த இயேசுவின் காட்சிகளை உணர்ந்ததாக சீஷர்கள் நம்பினர்.
6. இதற்குப் பின்பு, சந்தேகித்தவர்கள் தைரியமான விசுவாசிகளாக மாறினர்.
7. இச்செய்தியே ஆதித் திருச்சபையின் மையப் பிரசங்கமானது.
8. இச்செய்தி எருசலேமில் பிரசங்கிக்கப் பட்டது.
9. இப்பிரசங்கத்தின் விளைவாக திருச்சபை தோன்றி வளர்ந்தது.
10. உயிர்த்தெழுதல் நாள் (ஞாயிறு) ஓய்வு நாளுக்குப் பதிலாக பிரதான ஆராதனை நாளானது.
11. யாக்கோபு,
12. கிறிஸ்தவத்திற்கு எதிரியாயிருந்த பவுல் உயிர்த்தெழுந்த இயேசுவின் காட்சியைக் கண்ட அனுபவத்தால் மாற்றப்பட்டார்.

இந்த குறிப்பிட்ட பட்டியலை யாராவது எதிர்த்தாலும் கூட, உயிர்த்தெழுதலை நிரூபிக்கவும், சுவிசேஷத்தை நிலைநாட்டவும் சில சான்றுகளே போதுமானது: இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், காட்சியளிப்புகள் (1 கொரிந்தியர் 15:1-5). ஒருவேளை சில கோட்பாடுகள் மேற்கூறிய ஒன்று அல்லது இரண்டு உண்மைகளுக்கு விளக்கமளிக்க முடிந்தாலும், உயிர்த்தெழுதலினால் மட்டுமே அனைத்தையும் விளக்கவும் கணக்கிடவும் முடியும். சீஷர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதாக கூறுவதை திறனாய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். மக்களை மாற்றின உயிர்த்தெழுதல் போல் பொய்களோ, பிரம்மைகளோ செய்யமுடியாது. முதலாவது, இதனால் அவர்களுக்கு லாபம் என்ன? கிறிஸ்தவம் பிரசித்தி பெறவுமில்லை, நிச்சயமாக பணம் ஈட்டித்தரவுமில்லை. இரண்டாவது, பொய்யர்கள் நல்ல இரத்தச்சாட்சிகளாகயிருக்க முடியாது. தங்களது விசுவாசத்திற்காக கொடூரமான முறையில் மரித்த சீஷர்களின் விருப்பத்திற்கு சிறந்த விளக்கம் உயிர்த்தெழுதல் தவிர வேறொன்றுமில்லை. ஆம், பலர் தாங்கள் உண்மையென்று நம்பின பொய்க்காக மரிப்பார்கள், ஆனால் எவரும் உண்மையில்லை என்று தாங்கள் அறிந்த ஒன்றுக்காக மரிக்கமாட்டார்கள்.

முடிவாக, கிறிஸ்து தான் யெகோவா என்று கூறினார், அதாவது அவர் தெய்வீகத்தன்மை உடையவர் (ஏதோ “ஒரு கடவுள்” அல்ல ஆனால் ஒரே உண்மையான தேவன்); அவரது சீஷர்கள் (விக்கிரக ஆராதனைக்குப் பயந்தவர்கள்) அவரை தேவன் என்று நம்பி ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்து தனது தெய்வீகத்தன்மையை அதிசயங்கள் (உலகையே மாற்றின உயிர்த்தெழுதல் உட்பட), மூலம் நிரூபித்தார். வேறெந்த கற்பிதக் கொள்கையும் (உத்தேசம்) இந்த உண்மைகளை விளக்க முடியாது. ஆம், கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதத்திற்கு ஒத்ததே.

 கேள்வி: இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா?

பதில்:
கிறிஸ்தவ உபதேசத்தில் ஒரு முக்கியமான கேள்வி இதுவாகத் தான் இருக்கக்கூடும். இந்தக் கேள்வி தான் கத்தோலிக்க திருச்சபைக்கும் ப்ராட்டஸ்ட்ன்ட் திருச்சபைகளுக்கும் பிரிவுண்டாக்கி மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தக் கேள்விக்கான பதிலே வேதாகமக் கிறிஸ்தவத்திற்கும், பல கிறிஸ்தவ கள்ள போதனைகளுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு. இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா? இயேசுவில் நம்பிக்கை மட்டும் வைப்பதால் நான் இரட்சிக்கப் படக்கூடுமா அல்லது இயேசுவில் நம்பிக்கை வைப்பதோடு கூட ஒரு சில காரியங்களையும் செய்யவேண்டுமா?


வேதத்திலுள்ள ஒரு சில புரிந்து கொள்ளக் கடினமான வசனங்களால் இந்தக் கேள்விக்கான விடை சிக்கலானதாக உள்ளது. ரோமர் 3:28, 5:1 மற்றும் கலாத்தியர் 3:24 ஆகிய வசனங்களை யாக்கோபு 2:24 கூட ஒப்பிட்டுப் பார்க்கவும். ஒரு சிலர் பவுலுக்கும் (இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டும்) யாக்கோபுக்கும் (இரட்சிப்பு விசுவாசத்தோடு கிரியைகளும்) இடையில் ஒரு வேறுபாட்டைக் காண்கின்றனர். பவுல் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறுகின்றார் (எபேசியர் 2:8-9). யாக்கோபோ விசுவாசத்தோடு கிரியைகளினாலே தான் நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறுவதாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே யாக்கோபு என்ன கூறுகின்றார் என்பதை ஆராய்ந்து பார்ப்பதின் மூலமே இந்த வெளிப்படையான சிக்கலுக்குத் தீர்வு காண முடியும். ஒரு மனிதன் விசுவாசத்தைக் கொண்டிருந்து நற்கிரியை இல்லாமல் இருக்கமுடியும் என்ற தவறான நம்பிக்கையை கண்டிக்கிறார் (யாக்கோபு 2:17-18). கிறிஸ்துவின் மேலுள்ள மெய்யான விசுவாசம் மாற்றப்பட்ட வாழ்க்கை மற்றும் நற்கிரியைகளைப் பலனாய்த் தரும் என்ற கூற்றை வலியுறுத்துகின்றார். யாக்கோபு விசுவாசத்தோடு கிரியைகளினாலே தான் நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறவில்லை, ஆனால் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட ஒருவரின் வாழ்வில் நற்கிரியைகளைக் காணமுடியும் என்று கூறுகின்றார். ஒருவர் தான் விசுவாசி என்று கூறிக்கொண்டு, அவரது வாழ்வில் நற்கிரியைகள் இல்லையென்றால் கிறிஸ்துவின் மேலுள்ள அவரது விசுவாசம் மெய்யானதாயிருக்காது (யாக்கோபு 2:14,17,20,26).

பவுலும் இதே காரியத்தை தனது நிரூபங்களில் கூறுகின்றார். கலாத்தியர் 5:22-23 ல் விசுவாசிகளின் வாழ்வில் இருக்க வேண்டிய நல்ல கனிகளைப் பட்டியலிடுகின்றார். நாம் கிரியைகளினாலே அல்ல விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டுள்ளோம் (எபேசியர் 2:8-9) என்று கூறிய மறுகணமே நாம் நற்கிரியைகளைச் செய்வதற்காக படைக்கப்பட்டோம் என்று பவுல் எடுத்துரைக்கிறார் (எபேசியர் 2:10). யாக்கோபைப் போலவே பவுலும் அதே அளவு மாற்றப்பட்ட வாழ்வை எதிர்பார்க்கிறார்: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). யாக்கோபும் பவுலும் இரட்சிப்பைக் குறித்த தங்களது போதனைகளில் வேறுபடவில்லை. அவர்கள் ஒரே காரியத்தை வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றனர். பவுல் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படமுடியும் என்று எடுத்துரைக்க, யாக்கோபோ கிறிஸ்துவின் மேலுள்ள உண்மையான விசுவாசம் நற்கிரியைகளைப் பலனாய்த் தரும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார்.

கேள்வி: என்னுடைய வாழ்வில் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வது எப்படி?

பதில்:
குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் தேவ சித்தத்தை அறிந்துகொள்ள இரண்டு திறவுகோல்கள் உண்டு. 1. நீங்கள் கேட்கின்ற அல்லது செய்ய நினைக்கின்ற காரியம் வேதத்தால் தடைசெய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். 2. நீங்கள் கேட்கின்ற அல்லது செய்ய நினைக்கின்ற காரியம் தேவனை மகிமைப்படுத்தவும், நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் வளரவும் உதவும் என்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு காரியங்களும் உண்மையாயிருந்தும், தேவன் நீங்கள் கேட்கின்ற காரியத்தைத் தரவில்லை என்றால், நீங்கள் கேட்கின்ற காரியத்தைத் தருவது தேவனுடைய சித்தமாயில்லாமல் இருக்கலாம். அல்லது ஒருவேளை நீங்கள் இன்னும் சிறிது காலம் அதிகம் காத்திருக்க வேண்டியதாயிருக்கலாம். ஒருசில சமயங்களில் தேவ சித்தத்தை அறிந்து கொள்வது கடினம். எங்கு பணிபுரிவது, எங்கு வாழ்வது, யாரைத் திருமணம் செய்வது என்பது போன்ற பல காரியங்களில் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தேவன் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தேவன் அரிதாகவே அந்த அளவிற்கு நேரடியாகவும் குறிப்பிட்டும் மக்களுக்கு பதிலளிக்கின்றார். அது போன்ற காரியங்களில் நாம் தெரிந்தெடுக்க தேவன் நமக்கு அனுமதியளிக்கின்றார்.


ரோமர் 12:2, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்,” என்று கூறுகின்றது. பாவம் செய்வது அல்லது தேவ சித்தத்தைத் தடுப்பது என்ற ஒரு தீர்மானத்தை மட்டும் நாம் எடுக்கக் கூடாது என்று தேவன் விரும்புகின்றார். தேவ சித்தத்தோடு ஒத்துப்போகும் தெரிந்தெடுப்புகளை நாம் எடுக்க தேவன் விரும்புகின்றார். அப்படியானால் உங்களுக்கான தேவனுடைய சித்தத்தை நீங்கள் அறிந்துகொள்வது எப்படி? நீங்கள் தேவனோடு நெருங்கி நடந்து, உண்மையாகவே உங்கள் வாழ்வில் அவரது சித்தத்தை விரும்பினால், தேவன் தமது விருப்பங்களை உங்கள் இருதயத்தில் வைப்பார். உங்களது சித்தமில்லாமல், தேவ சித்தத்தை விரும்புவதே இதன் திறவுகோல். “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4). வேதம் அதற்கு எதிராகப் பேசாமல், உங்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் உண்மையாகவே பலனளிக்கும் பட்சத்தில், நீங்கள் உங்கள் இருதயத்தைப் பின்பற்றித் தீர்மானிக்க வேதாகமம் அனுமதியளிக்கிறது. நீங்கள் உண்மையாகவே தாழ்மையோடும், திறந்த மனதோடும் தேவ சித்தத்தை நாடினால், அவர் உங்களுக்கு அவரது சித்தத்தை வெளிப்படுத்துவார்.


கேள்வி: என்னுடைய கிறிஸ்தவ வாழ்வில் எவ்வாறு நான் பாவத்தை மேற்கொள்வது?

பதில்:
பாவத்தை மேற்கொள்ளுகிற நமது முயற்சியில் நமக்கு உதவிட வேதாகமம் பல உதவிகளை அளிக்கிறது. இந்த வாழ்வில் நாம் பாவத்தை பரிபூரணமாக வெற்றி கொள்ள முடியாது (1 யோவான் 1:8). ஆனால் பாவத்தை மேற்கொள்வதே நம் இலட்சியமாக இருக்க வேண்டும். தேவனுடைய உதவியாலும், அவருடைய வார்த்தையின் படியே நடப்பதால் மூலமும், நாம் படிப்படியாக பாவத்தை மேற்கொண்டு மேலும் மேலும் கிறிஸ்துவைப் போல் மாறமுடியும்.


நாம் பாவத்தை மேற்கொள்ளுகிற முயற்சியில் வேதாகமம் அளிக்கும் முதலாவது உதவி பரிசுத்த ஆவியானவர். நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கே தேவன் பரிசுத்த ஆவியானவரை நமக்கு அளித்திருக்கின்றார். தேவன் மாம்சத்தின் செயல்களையும், ஆவியின் கனிகளையும் வேறுபடுத்திக் காண்பிக்கின்றார். அந்தப் பகுதியில் ஆவிக்கேற்றபடி நடக்க நாம் நடக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அனைத்து விசுவாசிகளும் பரிசுத்த ஆவியானவரை உடையவர்கள். ஆனாலும் நாம் ஆவியானவருக்குக் கீழ்படிந்து ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டுமென்று போதிக்கின்றது. நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் மாம்சத்தின் நடவாமல், பரிசுத்த ஆவியானவருடைய உணர்த்துதலுக்குக் கீழ்படிவதைத் தெரிந்தெடுக்க வேண்டுமென்பதே இதன் அர்த்தம்.

பரிசுத்த ஆவியானவர் தரக்கூடிய மாற்றத்தை பேதுருவின் வாழ்வில் தெளிவாகக் காணலாம். அவன் ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கு முன்பாக, கிறிஸ்துவை மரண பரியந்தம் பின்பற்றுவேன் என்று கூறிய பின்னும், மூன்றுமுறை மறுதலித்தான். பரிசுத்த ஆவியானரால் நிரப்பப்பட்ட பின்பு, பெந்தகோஸ்தே நாளில் வெளியரங்கமாகவும், தைரியமாகவும் யூதர்களிடத்தில் பேசினான்.

ஆவியானவருடைய உணர்த்துதலை அவித்துப்போடாமல் இருந்திட முயற்சிப்பதாலும் (1 தெசலோனிக்கியர் 5:19ல் கூறியது போல்), ஆவியானவரால் நிரப்பப்பட வேண்டுவதாலும் (எபேசியர் 5:18-21) நாம் ஆவிக்கேற்றபடி நடக்கலாம். ஒருவர் பரிசுத்த ஆவியானரால் நிரப்பப்படுவது எப்படி? முதலாவது, பழைய ஏற்பாட்டைப் போலவே இது தேவனால் தெரிந்தெக்கப்படுதல். அவர் எண்ணின காரியத்தை முடித்திட (அவர் தனிப்பட்ட நபர்களை தெரிந்தெடுத்து) அவர்களை தன்னுடைய ஆவியானவரால் நிரப்பினார் (ஆதியாகமம் 41:38, யாத்திராகமம் 31:3, எண்ணாகமம் 24:2, 1 சாமுவேல் 10:18).

யாரெல்லாம் தேவவார்த்தையினால் தங்களை நிரப்புகின்றார்களோ அவர்களை நிரப்பிட தேவன் தெரிந்தெடுக்கிறார் என்பதை எபேசியர் 5:18-21, கொலோசெயர் 3:16 இருந்து அறிய முடியும். இது நம்மை இரண்டாவது உதவிக்கு (resource) வழி நடத்துகின்றது.

நம்மை நற்கிரியைகளைச் செய்ய ஏதுவாக்க தேவன் அவருடைய வார்த்தையை நமக்கு அளித்திருக்கின்றார் என்று வேதாகமம் கூறுகின்றது (2 தீமோத்தேயு 3:16-17). நாம் எப்படி வாழவேண்டும் என்றும் எதை நம்ப வேண்டும் என்றும் போதிக்கின்றது, நாம் தவறான வழியைத் தெரிந்தெடுக்கும் போது அதை நமக்கு வெளிப்படுத்தி, சரியான வழிக்கு நாம் திரும்பிட உதவிசெய்து, அந்த வழியில் நிலைத்திருக்க உதவுகின்றது. எபிரேயர் 4:12, தேவனுடைய வார்த்தை, ஜீவனுள்ளதும், வல்லமையானதும், நம் இருதயங்களை ஊடுருவி, நம் இருதயம் மற்றும் சிந்தையின் ஆழமான பாவங்களை வேரறுத்து, மேற்கொள்ளக் கூடியது. சங்கீதக்காரன் சங்கீதம் 119ல் தேவவார்த்தையின் வாழ்வை மாற்றும் வல்லமையைக் குறித்து அலசி ஆராய்கின்றார். யோசுவா இந்த தேவவார்த்தையை மறவாமல், அதை இரவும், பகலும் தியானித்து அதற்குக் கீழ்படிவதே எதிரிகளை மேற்கொண்டு வெற்றி காண்பதற்கான திறவுகோல் என்று யோசுவாவுக்கு எடுத்துரைக்கப்பட்டது. போர் யுக்திகளின் அடிப்படையில் இது முட்டாள்தனமாகத் தோன்றினாலும், அவன் அதைச் செய்தான், அதுவே வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை அடைவதற்கான போர்களில் வெற்றியடையத் திறவுகோலாய் அமைந்தது.

இந்த வேதாகமத்தின் உதவியை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். வேதத்தை ஆலயத்திற்கு சுமந்து செல்வது அல்லது ஒரு தின தியானத்தை வாசிப்பது அல்லது தினமும் ஒரு அதிகாரத்தை வாசிப்பது என்று பெயரளவில் செய்கின்றோம், ஆனால் அதை மனப்பாடம் செய்ய, தியானிக்க அல்லது அதை நம்முடைய வாழ்வில் அப்பியாசப் படுத்தத் தவறி விடுகின்றோம்; வேதம் வெளிப்படுத்துகின்ற பாவங்களை அறிக்கையிடவோ, அது வெளிப்படுத்துகின்ற நன்மைகளுக்காக தேவனைத் துதிக்கவும் தவறி விடுகின்றோம்.

இதுவரையில் நீங்கள் தினமும் வேதத்தைப் படித்து, மனப்பாடம் செய்வதை பழக்கமாகக் கொள்ளாமலிருந்தால், இன்றே அதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டியது முக்கியம். நாட்குறிப்பேட்டை ஆரம்பிப்பதை சிலர் பயனுள்ளதாகக் காண்கின்றனர். வேத்திலிருந்து கற்றுக்கொண்ட ஏதாவது ஒரு காரியத்தை எழுதும் வரையில் விடப்போவதில்லை என்பதை ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள். சிலர் தேவன் பேசின காரியங்களில் மாறிட அவர் உதவி கேட்கும் ஜெபங்களைப் பதிவு செய்கின்றனர். வேதாகமம் ஆவியானவர் நம்முடைய வாழ்வில் பயன்படுத்தும் ஒரு கருவி (எபேசியர் 6:17), ஆவிக்குரிய போராட்டத்தில் போராடிட தேவன் தரும் மிக முக்கியமான மற்றும் பெரும்பான்மையான போர்க்கருவியாகும் (எபேசியர் 6:12-18).

பாவத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் மூன்றாவது மிக முக்கியமான உதவி ஜெபம். கிறிஸ்தவர்கள் உதட்டளவில் செயல்படுத்தி விட்டு, மிகவும் குறைவாகப் பயன்படுத்தும் ஆற்றல் இந்த ஜெபம். நாம் ஜெபக்கூடுகைகள், ஜெப நேரங்கள் போன்ற பல வைத்திருக்கின்றோம், ஆனாலும் ஆதித்திருச்சபையைப் போல் நாம் ஜெபத்தைப் பயன்படுத்துவது கிடையாது (அப்போஸ்தலர் 3:1; 4:31; 6:4; 13:1-3). பவுல் அவர் ஊழியம் செய்தவர்களுக்காக எப்படி ஜெபித்தார் என்பதை மீண்டும் மீண்டுமாகக் குறிப்பிடுகின்றார். ஜெபத்தைக் குறித்து அற்புதமான வாக்குத்தத்தங்களை தேவன் நமக்கு அளித்திருக்கின்றார் (மத்தேயு 7:7-11; லூக்கா 18:1-18; யோவான் 6:23-27; 1 யோவான் 5:14-15), மற்றும் பவுல் ஆவிக்குரிய போராட்டத்திற்கான ஆயத்தத்தைக் குறித்த பகுதியில் ஜெபத்தையும் சேர்க்கின்றார்.

நம்முடைய வாழ்வில் பாவத்தை மேற்கொள்ள ஜெபம் எவ்வளவு முக்கியமானது? கெத்சமனே தோட்டத்தில், பேதுரு மறுதலிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் இயேசு சொன்ன வார்த்தைகளை நாம் அறிவோம். இயேசு ஜெபிக்கும் போது, பேதுரு உறங்குகின்றார். இயேசு அவனை எழுப்பி, “ நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது,” என்றார் (மத்தேயு 26:41). பேதுருப் போல நாமும் சரியானதைச் செய்யவிரும்பினாலும், நமக்கு பலமில்லை. தேவனுடைய கண்டித்தலைப் பின்பற்றி, நாம் தொடர்ந்து நாடவும், தொடர்ந்து தட்டவும், தொடர்ந்து கேட்கவும் வேண்டும். அப்போது தேவன் நமக்குத் தேவையான பலனைத் தந்தருளுவார் .ஜெபம் என்பது மந்திர சூத்திரமில்லை. ஜெபம் என்பது நம்முடைய குறைவையும், தேவனுடைய அளவில்லாத வல்லமையையும் அறிக்கையிட்டு, நாம் நினைத்ததையல்ல, நாம் என்ன செய்யவேண்டுமென்று தேவன் நினைக்கின்றாரோ அதைச் செய்திட, அவரைச் சார்ந்திடுவதாகும் (1 யோவான் 5:14-15).

பாவத்தை மேற்கொள்ளுகின்ற நமது போராட்டத்தில் நான்காவது உதவி திருச்சபை, மற்ற விசுவாசிகளின் ஐக்கியம். இயேசு தன்னுடைய சீஷர்களை அனுப்பும்போது, இரண்டு இரண்டு பேராக அனுப்பினார் (மத்தேயு 10:1). அப்போஸ்தலர் நடபடிகளில் மிஷனரிகள் தனித்தனியாக செல்லவில்லை, மாறாக இரண்டு அல்லது மேற்பட்டவர்கள் கொண்ட குழுக்களாக சென்றனர். சபைகூடிவருதலை விட்டுவிடாமல், அத்தருணத்தில் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவேண்டுமென்று இயேசு கட்டளையிடுகின்றார் (எபிரெயர் 10:24). நம்முடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட வேண்டுமென்று அவர் கூறுகின்றார் (யாக்கோபு 5:16). பழைய ஏற்பாட்டிலுள்ள ஞான இலக்கியத்தில், இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல், ஒரு மனிதன் மற்றொருவனைக் கூர்மையாக்கக்கூடும் (நீதிமொழிகள் 27:17) என்று நமக்குக் கூறப்பட்ட்டிருக்கின்றது. கூட்டணியில் பலமுண்டு (பிரசங்கி 4:11-12).

அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் கணக்கு ஒப்புவிக்கின்ற ஒருவரைத் துணையாகக் கொண்டிருப்பது, கடினமான பாவங்களை மேற்கொள்ளுவதில் மிகப் பெரிய பயனாகக் கண்டுள்ளனர். உங்களோடு பேசக்கூடிய, ஜெபிக்கக்கூடிய, உற்சாகம் தரக்கூடிய, மேலும் கண்டிக்கக்கூடிய ஒருவர் இருப்பது மிகவும் பயனுள்ளது. சோதனை நம்மெல்லாருக்கும் பொதுவானது (1 கொரிந்தியர் 10:13). நாம் கணக்கு ஒப்புவிக்கின்ற ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோத் துணையாகக் கொண்டிருப்பது, கடினமான பாவங்களையும் கூட மேற்கொள்ள நமக்குத் தேவையான இறுதிகட்ட ஊக்குவிப்பையும், உற்சாகத்தையும் நமக்குத் தரக்கூடும்.

ஒரு சில சமயங்களில் பாவத்தின் மீது வெற்றி உடனடியாகக் கிடைக்கின்றது. மற்ற சமயங்களில் பாவத்தின் மீது வெற்றி தாமதமாகக் கிடைக்கின்றது. தேவனுடைய resources நாம் பயன்படுத்தும் போது, நம்முடைய வாழ்வில் தொடர்ச்சியாக மாற்றத்தைக் கொண்டுவருவதாக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். தேவன் தம்முடைய வாக்குத்தத்தில் உண்மையுள்ளவர் என்பதை நாம் அறிந்திருக்கிறபடியால் பாவத்தை மேற்கொள்ளுகிற நம்முடைய முயற்சிகளில் விடா முயற்சியுடன் செயல்படமுடியும்.

கேள்வி: கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா?

பதில்:
இவ்விஷயத்தைப் புரிந்துகொள்ள பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு அளிக்கப்பட்டதேயன்றி கிறிஸ்தவர்களுக்கல்ல என்பதை அறிந்து கொள்ளவேண்டும். சில சட்டங்கள் இஸ்ரவேல் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிந்து பிரியப்படுத்த வேண்டுமென்பதை விளக்குவதாயும் (உதாரணமாக, பத்து கட்டளைகள்). சில சட்டங்கள் இஸ்ரவேல் எவ்வாறு தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாகவும், பாவ நிவர்த்திக்கான வழியை விளக்குவதாகவும் இருக்கின்றன (பலிகள் பற்றிய ஒழுங்கு). மேலும், சில சட்டங்கள் இஸ்ரவேலரை மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்க ஏற்படுத்தப்பட்டன (உணவு மற்றும் உடைகள் சார்ந்த சட்டங்கள்). ஆனால் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் ஒன்றும் இன்று நம்மைக் கட்டுப்படுத்துகிறதில்லை. இயேசு சிலுவையில் மரித்த போது, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். (ரோமர் 10:4; கலாத்தியர் 3:23-25; எபேசியர் 2:15).


பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு பதிலாக, நாம் கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம் (கலாத்தியர் 6:2), அதாவது “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக... உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (மத்தேயு 22:37-39). நாம் இந்த இரண்டு கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தால், கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கும் அனைத்தையும் நிறைவேற்றி விடுகிறோம்: “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” (மத்தேயு 22:40). இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் பிரயோஜனமற்றது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பெரும்பாலனவை கட்டளைகள் “தேவனிடத்தில் அன்புகூருவாயாக” மற்றும் “பிறனிடத்தில் அன்புகூருவாயாக” என்ற இரண்டு கட்டளைகளில் அடங்கி விடுகின்றன.

நாம் தேவனிடத்திலும் பிறரிடத்திலும் எவ்வாறு அன்புகூர வேண்டுமென்பதை நன்கு விளக்குகிற ஒரு வழிகாட்டியே பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம். ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் என்று சொன்னால் அது தவறு. நியாயப்பிரமாணத்தின் ஒரு சில சட்டங்கள் இன்று நமக்குப் பொருந்தும் என்று சொல்வதும் தவறு. ஏனென்றால் கிறிஸ்துவானவர் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணமத்தின் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றினார்.

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல (1 யோவான் 5:3). பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணமத்தின் இரத்தினச்சுருக்கமே பத்துக் கட்டளைகள். பத்துக் கட்டளைகளில் ஒன்பது புதிய ஏற்பாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (ஓய்வு நாள் ஆசரிப்பு தவிர). நாம் தேவனில் அன்புகூருவோமானால் நிச்சயமாகவே நாம் அன்னிய தேவர்களை வணங்கவோ விக்கிரங்களுக்கு முன்பாக தலை வணங்கி நிற்கவோ மாட்டோம். இதே போல, நாம் பிறரை நேசிப்போமானால் சக மனிதர்களுக்கு விரோதமாக கொலை, பொய், விபச்சாரம், பொருள் அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம். பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பிரதான நோக்கமாவது நம்மால் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்க முடியாதென்பதை உணர்த்தி நமக்கு இயேசு கிறிஸ்து என்ற இரட்சகர் தேவை என்பதை விளக்குவதேயாகும் (ரோமர் 7:7-9; கலாத்தியர் 3:24). பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் ஒருபோதும் உலகாளவிய அளவில் எல்லா மக்களுக்கும் எல்லா கால கட்டத்திற்கும் உகந்த ஒரு சட்டமாக தேவனால் நியமிக்கப்படவில்லை. நாம் தேவனையும் பிறரையும் நேசிக்கவேண்டும். இவ்விரண்டு கட்டளைகளையும் உண்மையாகக் கடைபிடிப்போமானால் நிச்சயமாகவே தேவன் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிற அனைத்தையும் நாம் நிறைவேற்றிவிடுவோம்.

கேள்வி: நான் ஏன் தற்கொலை செய்யக்கூடாது?

பதில்:
ஒருவேளை இப்போது அந்த நிலையில் இருப்பாயானால், அது நம்பிக்கையின்மை, மனக்கசப்பு போன்ற பல உணர்வுகளோடிருப்பாய். நீ ஒரு ஆழமான பாதாளத்தில் இருப்பது போல் உணரக்கூடும், மேலும் இதற்கு மேல் எதுவும் சரியாகும் என்ற நம்பிக்கையேயில்லாமல் போய்விடும். நீ எந்த நிலைமையில் இருக்கிறாய் என்று யாரும் கவலைப்படவோ, உணர்ந்துகொள்ளவோ இல்லாதது போல் தோன்றும். வாழ்க்கை வாழ்வதில் ஒரு பயனுமில்லை ... அல்லது இருக்கின்றதா?


இத்தருணத்தில் ஒரு சில மணித்துளிகள் எடுத்து, தேவனை உன் வாழ்வின் உண்மையாக தேவனாக எண்ணுவாயானால், அவர் எவ்வளவு பெரியவர் என்பதை நிரூபிப்பார்; ஏனென்றால், “தேவனால் கூடாதது ஒன்றுமில்லை” (லூக்கா 1:37). ஒருவேளை கடந்தகால காயங்களின் தழும்புகள், உன்னை நிராகரிக்கப்பட்டு, கைவிடப்பட்டவனைப் போன்ற உணர்வுக்குள்ளாக்கி அடக்கிவைத்திருக்கலாம். இது சுய பச்சாதாபம், கோபம், கசப்பு, பழிவாங்கும் எண்ணங்கள், அல்லது தேவையில்லாத பயங்கள் போன்றவை முக்கியமான உறவுகளில் பிரச்சனைகளைக் கொண்டு வந்திருக்கலாம்.

நீ ஏன் தற்கொலை செய்யக்கூடாது? நண்பனே, உன் வாழ்வின் காரியங்கள் எவ்வளவு மோசமாயிருந்தாலும் சரி, உன்னைக் கலக்கத்தின் பாதையினூடே நடத்தி, அவரது அற்புத வெளிச்சத்திற்கு உன்னைக் கொண்டு வர, உனக்காக அன்பின் தேவன் காத்துக் கொண்டிருக்கிறார். அவரே உனது நிச்சயமான நம்பிக்கை, அவரது நாமம் இயேசு!

பாவமற்ற தேவகுமாரனாகிய இந்த இயேசு நீ கைவிடப்பட்டு, தாழ்மைப்படுத்தப் பட்ட நேரத்தில் உன்னோடிருக்கின்றார். ஏசாயா 53:2-6ல் ஏசாயா தீர்க்கதரிசி அவரைக் குறித்து, அவர் எல்லோராலும் “அசட்டை பண்ணப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவரும்” என்று சித்தரிக்கிறார். அவரது வாழ்வு முழுவதும் துக்கம் மற்றும் பாடுகள் நிறைந்ததாயிருந்தது. ஆனால் அவர் சுமந்த துக்கம் அவருடையதல்ல, நம்முடையது. அவர் குத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, நொறுக்கப்பட்டார், எல்லாமே நம்முடைய பாவங்களுக்காக. அவருடைய பாடுகளினாலே, நம்முடைய வாழ்வு மீட்கப்பட்டு, முழுமையடைய முடியும்.

நண்பனே, உன்னுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட வேண்டுமென்று அவர் எல்லாவற்றையும் சகித்தார். நீ எவ்வளவு பெரிய குற்றத்தைச் சுமந்தாலும் சரி, நீ தாழ்மையோடு அவரை உனது இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவர் உன்னை மன்னிப்பார் என்பதை அறிந்துகொள். “...ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்...” (சங்கீதம் 50:15). நீ செய்த பாவம் எவ்வளவு பெரியதாயிருந்தாலும், இயேசுவால் மன்னிக்கமுடியும். அவரது ஒரு சில பிரியமான தாசர்கள் கூட மோசமான பாவங்களான கொலை (மோசே), விபச்சாரம் மற்றும் கொலை (தாவீது ராஜா), உடல் மற்றும் உணர்வுரீதியாகக் காயப்படுத்துதல் (பவுல் அப்போஸ்தலன்) செய்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மன்னிப்பைப் பெற்று, தேவனுக்குள் புதிய வாழ்வைக் கண்டடைந்தனர். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” (2 கொரிந்தியர் 5:17).

நீ ஏன் தற்கொலை செய்யக்கூடாது? நண்பனே, தேவன் “உடைந்ததைச்” சரிசெய்யத் தயாராயிருக்கிறார், அதாவது உன்னுடைய வாழ்வை, நீ தற்கொலை மூலம் முடிக்க எண்ணின உன்னுடைய வாழ்வைத் சரிசெய்யத் தயாராயிருக்கிறார். ஏசாயா 61:1-3ல் தீர்க்கதரிசி, “சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும்... துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்.” என்று எழுதுகிறார்.

இயேசுவிடம் வா, அவர் நீ அவரை நம்புவதினால் அவர் உன் சந்தோசத்தை திரும்பவும் தந்து, உன்னை உபயோகமுள்ளவனாக மாற்றட்டும். இழந்துபோன உன்னுடைய சந்தோசத்தை அவர் புதிப்பித்து, உன்னை நிலை நிறுத்த புதிய ஆவியை உனக்குத் தருவேன் என்று வாக்களிக்கிறார். உன்னுடைய உடைந்து போன இருதயம் அவருக்கு விலையேறப்பெற்றது: “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்கீதம் 51:12, 15-17).

ஆண்டவரை உன் இரட்சராகவும், மேய்ப்பராகவும் ஏற்றுக் கொள்வாயா? அவர் உன்னை ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையின் (வேதாகமம்) மூலம் வழி நடத்துவார். நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்கீதம் 32:8). “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (ஏசாயா 33:6). கிறிஸ்துவுக்குள்ளிருக்கும்போதும் உனக்குப் பிரச்சனைகளிருக்கும், ஆனால் இப்போது உனக்கு நம்பிக்கையுண்டு. அவரே “சகோதரனிலும் அதிக சொந்தமாய் சிநேகிப்பவர்” (நீதிமொழிகள் 18:24). நீ தீர்மானிக்கும் கர்த்தராகிய இயேசுவினுடைய கிருபை உன்னோடிருப்பதாக!

இயேசுகிறிஸ்துவை உன் இரட்சகராக நம்பிட நீ விரும்பினால், இந்த ஜெபத்தை (வார்த்தைகளை) உன் இருதயத்தில் தேவனோடு பேசு: “தேவனே, எனக்கு நீர் தேவை. தயவுசெய்து நான் செய்தவை எல்லாவற்றையும் மன்னியும். என் விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கிறேன். மேலும் அவரே என் இரட்சகர் என்று நம்புகிறேன். தயவுசெய்து என்னைக் கழுவி, சுகமாக்கி, என் வாழ்வில் சந்தோசத்தைத் திரும்பித்தாரும். என் மேல் நீர் வைத்திருக்கிற அன்பிற்க்காகவும், எனக்குப் பதிலாக இயேசுவின் மரணத்திற்காகவும் நன்றி கூறுகின்றேன்.”

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular