விமர்சனங்களை சந்திக்கும் தைரியம் இருக்கிறதா ?
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் இருந்தார்.
ஒருமுறை, அரசியல்வாதி ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக, ஒரு பகுதியில்
முகாமிட்டிருந்த பெரும்பகுதி ராணுவத்தினரை, வேறொரு இடத்திற்குச்
செல்லும்படி உத்தரவிட்டார். அந்த சமயத்தில் யுத்தம் தொடர்பான செயலாளராக
எட்வின் ஸ்டான்டன் என்பவர் இருந்தார்.
அவர் அந்த உத்தரவை செயல்படுத்த மறுத்ததுடன் மட்டுமின்றி,""இப்படிப்பட்ட ஒரு உத்தரவைப் பிறப்பித்த லிங்கன் ஒரு முட்டாள்,'' என்றும் சொல்லிவிட்டார். இதுகுறித்து ஆபிரகாம் லிங்கனுக்கு தகவல் போய்விட்டது. ஆனால், அவர் கோபிக்கவில்லை. ""ஸ்டான்டன் அப்படிச் சொன்னால், அது சரியாகத்தான் இருக்கும். ஏனெனில், அவர் எப்போதுமே தன் செயல்பாடுகளை நிதானித்து செய்யக்கூடியவர். புத்திக்கூர்மையுள்ளவர்,'' என்று அவரைப் பாராட்டியதுடன் மட்டுமல்லாமல், ""என் முட்டாள்தனத்தை அவரிடமிருந்து அறிந்து சரிசெய்து கொள்ள விரும்புகிறேன்,'' என்று சொல்லி, அவரை நேரில் சந்திக்க வரும்படி அழைத்தார்.
இருவரும் சந்தித்துப் பேசினர். அதிபரின் உத்தரவை செயல்படுத்த மறுத்ததற்கான காரணத்தை, ஸ்டான்டன் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், ""நீங்கள் எடுத்த முடிவு தவறானது,'' என்று ஆணித்தரமாக சுட்டிக்காட்டினார். இதைக்கேட்ட லிங்கனும் தனது முடிவு தவறானது தான் என்பதை ஒப்புக்கொண்டார். தனது உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதன்பிறகு, ஸ்டான்டன் மிகவும் நாகரீகமாக, ""என்ன இருந்தாலும், நான் தங்களைக் குறித்து அப்படி ஒரு வார்த்தை சொன்னதற்காக வருந்துகிறேன்,
என்றார். அதற்கு லிங்கன்,""உங்கள் விமர்சனம் என்னை சரிசெய்து கொள்ள நன்மையாகவே இருந்தது,'' என்று பதிலளித்தார். லிங்கனின் மனப்பக்குவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். தன்னைப்பற்றிய மோசமான விமர்சனத்திற்கு கூட அவர் கோபம் கொள்ளவில்லை. பழிவாங்கும் உணர்வுடன் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மிகுந்த தாழ்மையுடன் அந்த பிரச்னையைக் கையாண்டிருக்கிறார்.
அது அவ ருடைய முதிர்ச்சியைக் காட்டுகிறது. இயேசுகிறிஸ்துவும் இதே போல, ""நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்'' (மத்11:39) என்கிறார். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இனிமேலாவது பெறுவோமே!

0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....