Tamil christian song ,video songs ,message ,and more

ஞாயிறு, 26 ஜூன், 2011

துன்பம் தொடர்கதையல்ல!

தாவீது ராஜா பல பிரச்னைகளுடன் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பொற்கொல்லர் வந்து, ""ராஜாவே! ஏதாவது நகை செய்ய வேண்டுமா?'' என்றார்.
எரிச்சலில் இருந்த ராஜா, ""போ, எனக்கு ஒரு மோதிரம் செய்து வா, நான் துக்கத்தோடு இருக்கும் சமயங்களில் அதைப் பார்த்தால் மகிழ்ச்சி பொங்க வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும்போது அதைப் பார்த்தால் துக்கப்பட வேண்டும். அந்தளவுக்கு மோதிரத்தின் அமைப்பு இருக்க வேண்டும்,'' என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பொற்கொல்லர் திகைத்து விட்டார். அரசன் ஏதோ சிக்கலில் இருக்கும் சமயத்தில் நகை அனுமதி கேட்க வந்தது தவறாகப் போய் விட்டதே. இப்படி ஒரு மோதிரத்தை எப்படி செய்வது என திகைத்தார். செய்யாவிட்டால் உயிர் போய்விடுமே என அழுதார்.
அதைக்கண்ட சாலொமோன் என்ற சிறுவன், ""பொற்கொல்லரே! இதற்காகவா அழுகிறீர்கள்! சாதாரண ஒரு மோதிரம் செய்து, அதில் ""இது நிலைக்காது கடந்து போகும்'' என்று எழுதி ராஜாவிடம் கொடுத்து விடுங்கள். பிறகு நடப்பதைப் பாருங்கள்,'' என்றான்.
பொற்கொல்லரும் அதே போல மோதிரத்துடன் சென்றார். அன்றும் ராஜா துக்கத்தில் இருந்தார்.
மோதிரத்தை வாங்கிய அவர், அதில் எழுதியிருந்தை வாசித்தார்.
""ஆஹா... அருமையான வாசகம்... அப்படியானால், நமது துக்கம் கடந்து போய்விடும்,'' என்று தன்னைத் தேற்றிக்கொண்டார். மிகவும் ஆறுதலடைந்தார். சந்தோஷப்பட்டார்.
ஆம்...எந்த துக்கத்தையும் கர்த்தர் நீடிக்க விடமாட்டார். காயப்படுத்தியவருக்கும் காயம் கட்டுகிற தேவன் அல்லவா அவர்!
""இனி நீ அழுது கொண்டிராய். உன் கூப்பிடுதலின் சத்தத்திற்கு அவர் உருக்கமாய் இரங்கி அதை உடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார் (ஏசா.31:19) என்ற பைபிள் வசனம் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிரச்னைகள் வந்தால் அழாதீர்கள். அவரை அழையுங்கள், உருக்கமாக ஜெபியுங்கள். அவர் நம் குறைகளைத் தீர்ப்பார்.

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular