Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

உங்களுக்கு தெரியுமா - பைபிள் விளக்கங்கள்-வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்

பிலேமோன்

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின 13 நிருபங்களில் இந்த ஒரு நிருபம் மட்டுமே பவுல் தன் நண்பருக்கு எழுதும் ஒரு தனிப்பட்ட கடிதம் ஆகும். இதை ஒரு சிபாரிசுக் கடிதம் என்று கூறலாம். பிலேமோன் என்பவருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் ஒநேசிமு என்பவரைப் பற்றி பரிந்துரைக்கும் கடிதம் இது.ஒரே அதிகாரத்தை கொண்ட 4 புத்தகங்களில் இதுவும் ஒன்று.
- - புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கான ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


சேவல் கூவும் நேரம்

மாற்கு 13:35ல் சேவல் கூவும் நேரம் என்ற பதம் காணப்படுகிறதல்லவா? அது குறிப்பாக எந்த நேரம் என்று தெரியுமா? அது அதிகாலை 2:30 மணியிலிருந்து 3:00 மணிவரைக்கும் இடையிலான நேரம். கிரேக்குவிலே இந்த நேரத்திற்கு "அலெக்டோரோபோனியா" என்று பெயர். இந்த நேரத்தில் தான் இரவுக் காவலர்கள், மூன்றாவது ஷிப்ட் மாற்றிக் கொள்வது வழக்கம்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


சமகால தீர்க்கதரிசிகள்

ஏசயாவும், மீகாவும் சம காலத்தில் வாழ்ந்த தீர்க்க தரிசிகளாவர் ( ஏசாயா 1:1, மீகா 1:1 ). இவர்கள் இருவரும் தங்கள் தீர்க்கதரிசனங்களை முக்கியமாக யூதாவிலும், எருசலேமிலும் உரைத்தார்கள் ( ஏசாயா 1:1) அதே காலத்தில் வடபகுதியாகிய இஸ்ரவேலில் ஆமோசும், ஓசியாவும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள் ( ஆமோஸ் 1:1; ஓசியா 1:1)
- - பழைய ஏற்பாடு ஓர் புத்தகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் )


யோவானும், பத்மு தீவும்

இயேசுவுக்கு அன்பான சீஷனாகிய யோவான், எபேசுவில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது, ரோமா புரிக்கு இழுத்துச் செல்லப்பட்டு கொதிக்கிற எண்ணையில் தூக்கிப் போடப்பட்டார். எந்தவித சேதமுமின்றி கர்த்தர் அவரை காத்தார். இராஜாவான தோமித்தியன் இதைக் கேள்விப்பட்டு பயந்து போய் பத்மு தீவுக்கு நாடு கடத்தினான். ஐக்கேரியன் கடலிலுள்ள மிகச்சிறிய தீவுதான் இந்த பத்முதீவு. சாமோஸ்க்கு 20 மைல் தூரம் தெற்கேயும், ஆசியா மைனருக்கு 24 மைல் மேற்கேயும் இந்த தீவு அமைந்திருந்தது. இங்கே வைத்துதான் வெளிப்படுத்தின விசேஷத்தை யோவான் எழுதினார்.
- - புதிய வானம், புதிய பூமி 1000 வருட அரசாட்சி ( ஆக்கியோன் : பாஸ்டர் S.ஞானமுத்து)

  5 கருத்துகள்:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • லேசான காரியம் உமக்கு அது - Lesana Kariyam

    லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ] பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான ...

  • பாசமாய் இருப்போமே!

    ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஏமி கார் மைக்கேல் அம்மையார். இவர் தென்னிந்தியாவிற்கு வந்து கிறிஸ்தவ ஊழியம் செய்து மரித்தார். .post blockquote { margi...

  • தமிழ் பைபிள் மொபைல் (கைபேசி ) Android Iphone ipad

    ஒரு காலத்தில் பைபிளை தலைமேல் வைத்து சர்ச்சுக்கு போவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு  முதலில் கல்வெட்ட...

  • ஜீசஸ் திரைப்படம் (the story of jesus )

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு ஒலி வடிவில் கண்டு மகிழுங்கள் ஜீசஸ் திரைப்படம் 1300க்கும் மேற்பட்ட மொழிகளில் Jesus Movie in 1300...

  • ஆண்டவரின் அன்பை பெறுவோம்!

    * கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. "கடவுளை மிஞ்சி சாதிப்பேன்' என்றும் அது சவால் விடுகிறது. ஆனால், பைபிள் இதுபற்றி என்ன சொல்கிறது. கேட்ட...

  • உத்தமனாய் வாழ்வோம்!

    இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார். ஒரு உவமைக் கதையில், ""ஒருவர் ஒரு திராட்சைத் ...

  • சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி! -சாலமோன்

    இஸ்ரவேல்' (இஸ்ரேல்) தேசத்தை ஆண்ட மூன்றாவது ராஜா சாலமோன். ஞானியாகவும், ரசனை மிக்கவராகவும் இருந்தார். இவருக்கு, ஜெருசலேமிற்கு வடக்கே இருந்த எப்ராயீம் ம...

  • உங்களுக்கு தெரியுமா ? சங்கீதங்களை எழுதியவர்கள் - சன்னியாசி போதகர்

    சங்கீதங்களை எழுதியவர்கள்  சங்கீத புத்தகத்தின் 150 சங்கீதங்களில் 100 ஐ எழுதியவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தாவீது அரசன் 70க்கு...

  • உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! Uyirthelunthare alleluia

    Uyirthelunthare alleluia உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular