Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 20 ஜூன், 2011

கீர்த்தனைகள் MP3 (keerththanaikal mp3)

. அதி மங்கள காரணனே as 2. அமல தயாபரா as
3. அரசனைக் காணாமல் as 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் as
5. அன்பே பிரதானம் சகோதர அன்பே as 6.அனுக்கிரக வார்த்ததை as
7. ஆதித் திருவார்த்தை as 8. ஆ! அம்பர உம்பர as
9. ஆமென் அல்லேலூயா as 10. ஆசையாகினேன் as
11. ஆத்துமமே என் முழு உள்ளமே உன் as 12. ஆதிப் பிதா as
13. ஆரிவர் ஆராரோ as 14. ஆவியை அருளுமே as
15. ஆவியை மழைபோல் as 16. ஆனந்தமே ஜெயா ஜெயா as
17. இதோ மனுஷரின் மத்தியில் as 18. இயேசு கிறிஸ்துவின் as
19. இயேசுவின் நாமம் இனிதான நாமம் as 20. இயேசு ராஜா என்னை ஆளும் as
21. இயேசு என்ற திரு நாமத்திற்கு as 22. இயேசுவையே துதிசெய் நீ மனமே as
23. இயேசுவே கிருபாசனபதியே as 24. இயேசுவின் நாமமே திரு நாமம் as
25. இயேசு நேசிக்கிறார் as 26. இவரே பெருமான் as
27. உந்தன் சுயமதியே நெறியென்று as 28. உருகாயோ நெஞ்சமே as
29. உலகில் பாவ as 30. எங்கேயாகிலும் as
31. எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே as 32. எண்ணிலடங்கா தோத்திரம் as
33. எத்தனை திரள் என் பாவமென் as 34. எந்தன் நாவில் புதுப்பாடல் as
35. எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே as 36. எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் as
37. என் மீட்பர் உயிரோடிருக்கையிலே as 38. என்றைக்குக் காண்பேனோ as
39. என்ன பாக்கியம் எவர்க்குண்டு as 40. எனது கர்த்தரின் ராஜரீகனாய் as
41. எனக்காய் ஜீவன் விட்டவரே as 42. என்ன என் ஆனந்தம் என்ன என் as
43. ஐயனே உமது திருவடிகளுக்கே as 44. ஐய்யையா நான் வந்தேன் as
45. ஓசன்னா பாடுவோம் இயேசுவின் as 46. கண்டேன் என் கண்குளிர as
47. கண்களை ஏறெடுப்பேன் as 48. கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் as
49. குணப்படு பாவி as 50. சத்திய வேதத்தை as
51. சத்தாய் நிஷ்களமாய் as 52. சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து as
53. சர்வலோகாதிப நமஸ்காரம் as
as

55. சரணம் சரணம் சரணம் as
54.
56. சாலேமின் ராஜா as 57. சிலுவை சுமந்த as
58. சீர்திரியேக வஸ்தே நமோ நமோ as 59. சீர்மிகு வான்புவி தேவா as
60. சீர் இயேசு நாதனுக்கு ஜெய மங்களம் as
as
62. சுந்தர இரட்சகனே as
61.
63. சுந்தர பரம்ம தேவ மைந்தன் as 64. தந்தானைத் துதிப்போமே as
as
65.
66. தாசரே இத்தரணியை அன்பாய் as 67. திரிமுதல் கிருபாசனனே சரணம் as
68. தினமே நான் உன்னை as 69. துதி தங்கிய பரமண்டல as
70. துதி துதி என்மனமே as 71. துதிப்போம் அல்லேலூயா as
72. தெய்வன்பின் வெள்ளமே as 73. தேவ பிதா எந்தன் மேய்ப்பரல்லோ as
74. தேவ கிருபை என்றுமுள்ளதே as 75. தேவனே நான் உமது அண்டையில் as
76. தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் as as 78. தெய்வன்பின் தோற்றமே திருவருள் as
77.
79. நம் தேவன் அன்புள்ளவர் as 80. நம்பி வந்தேனே இயேசையா நான் as
81. நற்கருணை நாதனே சற்குருவே as 82. நித்திய கன்மலை as
83. நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட as 84. பவனி செல்கின்ற as
85. பாடித்துதி மனமே பரனை as 86. பாதம் ஒன்றே வேண்டும் as
as
87.
88. பாதைக்கு தீபமாமே as 89. பாரீர் கெத்சமனே பூங்காவில் as
90. பாவியாகவே வாரேன் பாவம் போக்கும் as 91. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை as
92. பெத்தலையில் பிறந்தவரைப் போற்றி as 93. போற்றித் துதிப்பேன் என் தேவ as
94. மகனே உன் நெஞ்சனெக்குத் தாராயோ as 95. மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க as
96. மெசியா இயேசு நாயனார் as 97. ரட்சா பெருமானே as
98. ராச ராச பிதா மைத்தர் இயேசு as 99. ராசாதி ராசன் இயேசுமகா ராசன் as
100. வந்தனம் வந்தனமே தேவ as 101. வரவேணும் எனதரசே மனுவேல் as
as
102.
103. வாருமையா போதகரே as 104. விந்தை கிறிஸ்தேசு ராஜா as
as
105.
106. வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் as 107. ஸ்தோத்திரம் இயேசு நாதா as
108. ஸ்தோத்திரம் செய்வேனே இரட்சகரை as 109. ஸ்தோத்திரப் பாத்திரனே தேவா as

ஞாயிறு, 19 ஜூன், 2011

விமர்சனங்களை சந்திக்கும் தைரியம் இருக்கிறதா ?

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் இருந்தார். ஒருமுறை, அரசியல்வாதி ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக, ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த பெரும்பகுதி ராணுவத்தினரை, வேறொரு இடத்திற்குச் செல்லும்படி உத்தரவிட்டார். அந்த சமயத்தில் யுத்தம் தொடர்பான செயலாளராக எட்வின் ஸ்டான்டன் என்பவர் இருந்தார்.

அவர் அந்த உத்தரவை செயல்படுத்த மறுத்ததுடன் மட்டுமின்றி,""இப்படிப்பட்ட ஒரு உத்தரவைப் பிறப்பித்த லிங்கன் ஒரு முட்டாள்,'' என்றும் சொல்லிவிட்டார். இதுகுறித்து ஆபிரகாம் லிங்கனுக்கு தகவல் போய்விட்டது. ஆனால், அவர் கோபிக்கவில்லை. ""ஸ்டான்டன் அப்படிச் சொன்னால், அது சரியாகத்தான் இருக்கும். ஏனெனில், அவர் எப்போதுமே தன் செயல்பாடுகளை நிதானித்து செய்யக்கூடியவர். புத்திக்கூர்மையுள்ளவர்,'' என்று அவரைப் பாராட்டியதுடன் மட்டுமல்லாமல், ""என் முட்டாள்தனத்தை அவரிடமிருந்து அறிந்து சரிசெய்து கொள்ள விரும்புகிறேன்,'' என்று சொல்லி, அவரை நேரில் சந்திக்க வரும்படி அழைத்தார்.

இருவரும் சந்தித்துப் பேசினர். அதிபரின் உத்தரவை செயல்படுத்த மறுத்ததற்கான காரணத்தை, ஸ்டான்டன் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், ""நீங்கள் எடுத்த முடிவு தவறானது,'' என்று ஆணித்தரமாக சுட்டிக்காட்டினார். இதைக்கேட்ட லிங்கனும் தனது முடிவு தவறானது தான் என்பதை ஒப்புக்கொண்டார். தனது உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதன்பிறகு, ஸ்டான்டன் மிகவும் நாகரீகமாக, ""என்ன இருந்தாலும், நான் தங்களைக் குறித்து அப்படி ஒரு வார்த்தை சொன்னதற்காக வருந்துகிறேன்,

 என்றார். அதற்கு லிங்கன்,""உங்கள் விமர்சனம் என்னை சரிசெய்து கொள்ள நன்மையாகவே இருந்தது,'' என்று பதிலளித்தார். லிங்கனின் மனப்பக்குவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். தன்னைப்பற்றிய மோசமான விமர்சனத்திற்கு கூட அவர் கோபம் கொள்ளவில்லை. பழிவாங்கும் உணர்வுடன் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மிகுந்த தாழ்மையுடன் அந்த பிரச்னையைக் கையாண்டிருக்கிறார்.

 அது அவ ருடைய முதிர்ச்சியைக் காட்டுகிறது. இயேசுகிறிஸ்துவும் இதே போல, ""நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்'' (மத்11:39) என்கிறார். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இனிமேலாவது பெறுவோமே!

அறிவாளி தான் சாதனையாளனா?

வாழ்வில் முன்னேறிய அனைவரும் பெரும் அறிவாளிகளாக இருப்பார்கள் என்று எண்ணத் தேவையில்லை. இருக்கிற அறிவைக் கொண்டே முன்னேறி விடலாம்.

இயேசுநாதர் சொன்ன ஒரு கதையைக் கேளுங்க!
பணக்காரன் ஒருவனுக்கு தன் செல்வத்தை மேலும் பெருக்க ஆசை ஏற்பட்டது. வெளிநாடு சென்றால் விரைவில் நிறைய செல்வம் சேர்க்க முடியும் என கருதினான்.

அவனிடத்தில் மூன்று ஊழியர்கள் இருந்தார்கள். தான் புறப்படுவதற்கு முன்னதாக அந்த மூன்று பேரையும் அவன் அழைத்தான். அவர்களுக்கு சேரவேண்டிய சம்பளத்துடன் அன்பளிப்பாக பெருந்தொகையைக் கொடுத்து தான் திரும்ப வந்தவுடன் மறுபடியும் அவர்களையே வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும் வாக்களித்தான்.

ஊழியர்களிடம் தனக்குள்ள தொடர்பு அறுந்து போகக்கூடாது என்பதற்காக அவர்களிடம் கடனாக ஒரு தொகையை கொடுக்க தீர்மானித்தான்.
தன்னிடம் ஊழியம் செய்கின்ற அந்த மூன்று பேரும் ஒரே மாதிரியான திறமை படைத்தவர்கள் அல்லர் என்பது செல்வந்தனுக்குத் தெரியும்.
ஆகவே, அவரவர் திறமைக்கு ஏற்ற வகையில் ஒருவனிடம் ஐந்து தாலந்தும், அடுத்தவனிடம் இரண்டு தாலந்தும், மூன்றாமவனிடம் ஒரு தாலந்தும் கொடுத்தான். ஒரு தாலந்து என்பது ஏறத்தாழ ஆயிரம் ரூபாய்க்கு சமம். பிறகு அவன் வெளிநாட்டிற்கு சென்று விட்டான். சில ஆண்டுகள் கழிந்து செல்வத்தோடு திரும்பிவந்தான்.

தன் எஜமானனிடம் ஐந்து தாலந்துகளைப் பெற்ற ஊழியன், வியாபாரம் செய்தான். நல்ல லாபம் கிடைத்தது. இரண்டு தாலந்துகளைப் பெற்ற ஊழியனும் அதை நல்வழிகளில் பயன்படுத்தி மேலும் இரண்டு தாலந்துகளைச் சம்பாதித்துவிட்டான்.

ஆனால், ஒரு தாலந்தைப் பெற்ற ஊழியன் அந்தப் பணத்தை நிலத்தில் புதைத்துவிட்டான். வெளிநாட்டிலிருந்து திரும்பிய செல்வந்தன் தன் மூன்று ஊழியர்களையும் அழைத்து தான் கொடுத்துவிட்டுப்போன பணத்திற்கு கணக்குக் கேட்டான். ஐந்து தாலந்துகளைப் பெற்றவன் பத்து தாலந்துகளை கொண்டு வந்து தன் எஜமானனிடம் கொடுத்தான். எஜமானன் மகிழ்ந்தான். தன் சொத்துக்களை நிர்வாகிக்கும் உயர் அதிகாரியாக நியமித்தான். இரண்டு தாலந்துகளை வாங்கியவன், நான்கு தாலந்துகளாக தன் எஜமானனிடம் ஒப்படைத்தான். எஜமானன் அவனுக்கு நல்ல பதவி கொடுத்தான். ஒரு தாலந்தை வாங்கிய ஊழியன் மிகப்பத்திரமாய்ப் புதைத்து வைத்திருந்த தாலந்தைப் பூமியைத்தோண்டி எடுத்து வந்தான்.

அவன் தன் எஜமானனிடம், ""நீர் விதைக்காத இடத்தில் அறுவடை செய்ய முயலும், வெறும் கையை முழம் போடும், கடின நெஞ்சமுள்ள மனிதன் என்பதை நான் அறிவேன். ஆகையால், நான் பயந்து போய் நமக்கெதற்கு வீண் வம்பு என்று கருதி நீர் கொடுத்த தாலந்தை நிலத்தில் இதுநாள் வரை புதைத்து வைத்திருந்தேன். அதை அப்படியே கொண்டு வந்துவிட்டேன். இதோ உம்முடையதை வாங்கிக் கொள்ளும்,'' என்று கூறினான்.
செல்வந்தன் இதைக் கேட்டு கோபமடைந்தான். அந்த ஊழியனை தண்டனைச் சாலையில் தள்ள உத்தரவிட்டான். உழைக்காமல் சோம்பேறியாக காலம் கழித்த அவன், அங்கேயாவது திருந்தட்டும் என்கிற நல்ல நோக்கத்துடன் செல்வந்தன் இவ்வாறு செய்தான்.
இந்தக்கதையில் செல்வந்தன் என்பது இறைவனையும், ஊழியர்கள் என்பது மக்களையும் குறிக்கிறது.

இறைவன் மனிதர் அனைவருக்குமே அவரவர் அறிவு, ஆற்றல், சூழ்நிலை ஆகியவைகளுக்கு தக்க ஏதாவது ஒரு கலையில் "திறமை' எனப்படும் தாலந்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு திறமையுமே இல்லாமல் எந்த மனிதனும் படைக்கப்படுவதில்லை.

மிகுதியோ, குறைவோ கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்திக் கொள்ளாததும் மனிதர்கள் கையில்தான் உள்ளது. "இறைக்கிற ஊற்றே சுரக்கும்' என்பதைப் போலப் பயன்படுத்தப்படுகிற திறமைகளே வளரும்; பெருகும். இறைவனால் அருளப்பட்ட தாலந்துகளை ஒழுங்காகப் பயன்படுத்தித் தனக்கும் பிறருக்கும் அதை நல்வழியில் உபயோகப்படுத்துவோருக்கு இறைவனுடைய கருணை மேன்மேலும் திறமைகளாகிய தாலந்துகளை வழங்கும். அவ்வாறின்றி, இறைவன் கொடுத்த அறிவை, கலைகளை, திறமைகளைப் பயன்படுத்தாமல், சோம்பலுடன் வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் ஒன்றுக்கும் உதவாமல் போவார்கள். 

You may like also

Categories

Popular