உங்களுக்கு தெரியுமா ? சங்கீதங்களை எழுதியவர்கள் - சன்னியாசி போதகர்
சங்கீதங்களை எழுதியவர்கள்
சங்கீத புத்தகத்தின் 150 சங்கீதங்களில் 100 ஐ எழுதியவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தாவீது அரசன் 70க்கும் அதிகமான சங்கீதங்களையும், ஆசாப் 12, கோராகின் புத்திரர் 11, சாலொமோன் 2, மோசே 1, எமான் 1, ஈத்தான் 1 சங்கீதங்களை எழிதினார்கள். 50 சங்கீதங்கள் யாரல் எழுதப்பட்டன என்று பெயர் கொடுக்கப்படவில்லை. இப்படி பலராலும் எழுதப்பட்ட சங்கீதங்களின் தொகுப்புதான் சங்கீதப் புத்தகமாகும்.
- - யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஒர் அறிமுகம் (ஆசிரியர் Dர்.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து
நெய்யூரில் மீட் ஐயர்
1818ம் ஆண்டு குளச்சல் துறைமுகத்தில் கையில் குழந்தையுடன் வந்திறங்கிய இங்கிலாந்தை சேர்ந்த மீட் ஐயர் தமது 35 வருட உழைப்பால் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை நாகர்கோவிலில் சம்பாதித்தவர். இவர் காலக்கட்டத்தில் தான் நெய்யூரில் 1831ல் ஆலயம் கட்டப்பட்டது. போர்டிங் பள்ளிக்கூடமும் நிறுவப்பட்டது. டாக்டர் ராம்சே என்பவரின் துணையைக் கொண்டு மருத்துவ ஊழியம் ஆரம்பிக்கபட்டு வியாதியஸ்தர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் இந்தப் பகுதியின் ஆத்துமாக்கள் ஊழியர்களாக புறப்பட்டுச்சென்று கிறிஸ்துவின் வருகைக்கு அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி வருகின்றனர்.
- --மறக்க முடியாத மாமனிதர்கள் ( நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வெளியீடு)
எபேசு நகரம்
தற்போது தெற்கு துருக்கியாக விளங்குகிற பகுதியில் எபேசு அக்காலத்தில் துறைமுகப் பட்டணமாக விளங்கியது. ரோம ஆட்சியில் சின்ன ஆசியாவின் தலைநகரமாகத் திகழ்ந்தது. தெருக்களும், குளிக்கும் அறைகளும், நூல் நிலையங்களும், நாளங்காடியும், அரண்மனையும், 25,000 மக்கள் அமரத்தக்க இருக்கை வசதியுடன் கூடிய சலவைக் கற்களால் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கமும் வியக்கத்தக்க முறையில் விளங்கின. அந்த காலகட்டதில் ஏழு அதிசயங்களில் ஒன்றான தீனாள் தேவதையின் ஆலயம் எபேசு நகரில் இருந்தது.ஆதிக் கிறிஸ்தவத் திருச்சபையில் எபேசு சபை மிகவும் பெரியது, முக்கியமுமானதாக விளங்கியது.
- - புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் ) என்ற புத்தகத்திலிருந்து
சன்னியாசி போதகர்
'சன்னியாசி போதகர்' மற்றும் 'சன்னியாசி ஐயர்' என்று ஜனங்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா?. 1772ல் தமிழ் மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்த்த பெப்ரீஷீயல் தான். இவருடைய எளிய வாழ்வும், மிக சாதாரண் உடையும், எதற்கும் ஆசைப்படாத, அலட்டிக் கொள்ளாத தன்மையும் இவருக்கு இந்த பெயரைப் பெற்றுத் தந்தது.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....