கிறிஸ்தவ பாடல்கள் பகுதி இரண்டு
என்ன என் ஆனந்தம்
எனக்காய் ஜீவன் விட்டவரே
1. என்ன என் ஆனந்தம், என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே
2. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
3. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே
4. அச்சயன் பட்சமாய் ரட்சிப்பை எங்களுக்
கருளின தாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றிய சாட்சி
பகர வேண்டியதே
கருளின தாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றிய சாட்சி
பகர வேண்டியதே
5. வெண்ணங்கி பொன் முடி வாத்தியம் மேல் வீடு
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்
1. எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன் செல்லவே - இயேசு
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன் செல்லவே - இயேசு
3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் - இயேசு
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் - இயேசு
4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் - இயேசு
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் - இயேசு
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்
2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர் (ஆ…..ஆ)
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர் (ஆ…..ஆ)
3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – நான்
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – நான்
4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே (ஆ…..ஆ)
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே (ஆ…..ஆ)
எல்லாம் யேசுவே, – எனக்கெல்லா மேசுவே.
தொல்லைமிகு மிவ்வுலகில் – துணை இயேசுவே. - எல்லாம்
1.ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், - எல்லாம்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், - எல்லாம்
2.தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும், - எல்லாம்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும், - எல்லாம்
3.கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், - எல்லாம்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், - எல்லாம்
4.போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும், - எல்லாம்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும், - எல்லாம்
5.அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்,- எல்லாம்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்,- எல்லாம்
6.ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்,
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும், - எல்லாம்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும், - எல்லாம்
எந்நாளு மேதுதிப்பாய் – என்னாத்துமாவே, நீ
எந்நாளு மேதுதிப்பாய்!
எந்நாளு மேதுதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது. – எந்நாளு
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது. – எந்நாளு
1. பாவங்கள் எத்தனையோ, – நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி. - எந்நாளு
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி. - எந்நாளு
2. எத்தனையோ கிருபை, – உன்னுயிர்க்குச் செய்தாரே,
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால். - எந்நாளு
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால். - எந்நாளு
3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால். - எந்நாளு
நன்மையாலுன் வாயை;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால். - எந்நாளு
4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே,
பூமிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே, சத்திய மேயிது. - எந்நாளு
பூமிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே, சத்திய மேயிது. - எந்நாளு
5. மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே. - எந்நாளு
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே. - எந்நாளு
6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு;
எந்த வேளையும் அவ ரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே. - எந்நாளு
தந்தைதன் பிள்ளைகட்கு;
எந்த வேளையும் அவ ரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே. - எந்நாளு
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)
எந்தன் இயேசு தருகிறார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) - எந்தன்
உயிருள்ள நாள் வரையில் (2) - எந்தன்
1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் - ஆனந்தம்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் - ஆனந்தம்
2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் - ஆனந்தம்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் - ஆனந்தம்
3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்
4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்
5. இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன - ஆனந்தம்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன - ஆனந்தம்
1. எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக கொண்டாடுவேன்
2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே - அல்லேலூயா
3. சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா
4. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே யானாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா
5. களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் - அல்லேலூயா
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக கொண்டாடுவேன்
2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே - அல்லேலூயா
3. சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா
4. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே யானாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா
5. களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் - அல்லேலூயா
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....