Tamil christian song ,video songs ,message ,and more

வியாழன், 24 மார்ச், 2011

கீர்த்தனை பாடல்கள் பகுதி ஒன்று


  அன்பே! அன்பே! அன்பே!
அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே,
ஆனந்தம்! ஆனந்தமே!

1. ஒருநாள் உம்தயை கண்டேனையா,
அந்நாளென்னை வெறுத்தேனையா,
உம் தயை பெரிதையா - என்மேல்
உம் தயை பெரிதையா.

2. பரலோகத்தின் அருமைப் பொருளே,
நரலோகரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ?

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - எனையும்
அணைத்தீர் அன்பாலே.

4. பரலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப்போல் 
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா.

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ!

அரசனைக் காணாமலிருப்போமோ?
                   பல்லவி
அரசனைக் காணாமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

             அனுபல்லவி

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனுபவங்கனை ஒழிப்போமோ? – யூத

              சரணங்கள்
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
     ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
     ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
    தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமேயூத

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
    திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
    பூசனைக் காண நன்கொடைகள் கொண்டேஅவர்
    பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
    அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
    இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
    எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத


  அதிகாலையில் பாலனைத் தேடி 
அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்
அதிகாலையில் பாலனைத் தேடி
வாரீர்வாரீர்வாரீர்
நாம் செல்வோம்


1.அன்னை மரியின் மடிமேலே
   மன்னன் மகவாகவே தோன்ற
   விண் தூதர்கள் பாடல்கள் பாட,
   விரைவாக நாம் செல்வோம் கேட்க… - அதிகாலையில்

2.மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
   அந்த முன்னணை முன்னிலை நின்றே
   உன் சிந்தை குளிர்ந்திட போற்று
   நல் காட்சியை கண்டிட நாமே… - அதிகாலையில்


  அன்பில் என்னை பரிசுத்தனாக்க 
 1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க
    உம்மைக் கொண்டு சகலத்தையும்
    உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
    தந்தை நோக்கம் அநாதியன்றோ
                  என் இயேசுவே நேசித்தீரோ
                  எம்மாத்திரம் மண்ணான நான் 
                 இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்
    புது சிருஷ்டியின் தலையானீரே
    சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
    ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரைஎன்

3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே
    முதற்பேராய் நீர் இருக்க
    ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
    உம் சாயலில் நான் வளரஎன்

4. வருங்காலங்களில் முதற்பேராய்
    நீர் இருக்க நாம் சோதரராய்
    உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
    ஆளுவோம் புது சிருஷ்டியிலேஎன்

5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
    நான் எப்படி பதில் செய்குவேன்
    உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
    என்னை தந்தேன் நடத்திடுமேஎன்


அனாதி தேவன் உன் அடைக்கலமே
அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார்

1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
    தூய தேவ அன்பே 
   இவ் வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை 
   இனிதாய் வருந்தி அழைத்தார்

2. கானகப் பாதை காரிருளில்
    தூய தேவ ஒளியே 
   அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை 
   அரும் நீரூற்றாய் மாற்றினாரே

3. கிருபை கூர்ந்து மனதுருகும்
    தூய தேவ அன்பே 
   உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனை 
   உண்மையாய்க் கர்த்தர் காத்துக்கொள்வார்

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
    தூய தேவ தயவால் 
    கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினில் 
    கிடைக்கும் இளைப்பாருதல்

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
    தூய தேவ அருளால் 
    நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் 
    சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்


 அலங்கார வாசலாலே  
1. அலங்கார வாசலாலே
    கோவிலுக்குள் போகிறேன்
    தெய்வவீட்டின் நன்மையாலே 
    ஆத்துமத்தில் பூரிப்பேன்
    இங்கே தெய்வ சமுகம்,
    மெய் வெளிச்சம், பாக்கியம்

2. கர்த்தரே, உம்மண்டை வந்த
    என்னண்டைக்கு வாருமேன்.
    நீர் இறங்கும்போதனந்த
    இன்பத்தால் மகிழுவேன்.
    என்னுட இதயமும்
    தெய்வ ஸ்தலமாகவும்.

3. பயத்தில் உம்மண்டை சேர,
    என் ஜெபம் புகழ்ச்சியும்
    நல்ல பலியாக ஏற
    உமதாவியைக் கொடும்.
    தேகம் ஆவி யாவையும்
    சுத்தமாக்கியருளும்.

4. நல்ல நிலத்தில் விழுந்த
    விதை பயிராகுமே;
    நானும் அவ்வாறே மிகுந்த
    கனிகளைத் தரவே,
    வசனத்தைக் காக்க நீர்
    ஈவளிக்கக் கடவீர்.


 அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
    கல்வாரியின் மேட்டினில் கண் கொள்ளாத காட்சியே 
    கண்டிடும் வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும்

2. நோயை ஏற்றவர் பேயை வென்றவர்
    நீதிபரன் உன்நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே 
    நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
    இன்னலுற்ற உன்னையே அண்ணல் இயேசழைக்கிறார் 
    துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ

4. கல்லறை திறக்க காவலர் நடுங்க
    கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே 
    உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே

5. சாந்த சொரூபனே சத்திய வாசனே
    வஞ்சமற்ற வாயனே வந்தழைக்கும் நேயனே 
    தஞ்சமே தன்னையே தந்துன்னை அழைக்கிறார்

You may like also

Categories

Popular