வெற்றி தந்த இயேசு கிறித்து
சிலுவைப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது! ஒருநாள், பிரான்ஸ் நாட்டைச்
சேர்ந்த அரசர் பிலிப் அகஸ்டின் தனது படைவீரர்களை அழைத்தார். தன்
கிரீடத்தைக் கழற்றி ஒரு மேஜை மேல் வைத்தார். அதன்மேல் "பாத்திரவானுக்கு'
என்று எழுதி வைத்தார்.
இதைக்கண்ட வீரர்கள் ஏதும் புரியாமல் நின்றனர்.
அவர்களிடையே பேசிய ராஜா,""வீரர்களே! இந்த கிரீடத்தைச் சூட்டிக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. யாரொருவர் நம் தேசத்தைக் காக்க, இந்தப்போரில் கடுமையாகப் போரிட்டு வெற்றிக்கு காரணமாக இருக்கிறாரோ அவரே இதை எடுத்துக் கொள்ளலாம்.. ஆம்...இந்த தேசத்தின் ராஜாவாக அவரே இருப்பார்,'' என்று அறிவித்தார்.
இதைக்கேட்ட வீரர்கள் ஆனந்தமடைந்தார்கள்.
ஒவ்வொரு வீரனும் கடும் போரில் ஈடுபட்டனர். அதுவரை எதிரிகளிடம் பின்வாங்கியவர்கள் கூட ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். என்னதான் வீரர்கள் கடுமையாகப் போரிட்டாலும், பிலிப் அகஸ்டின் எதிரிகளுடன் செய்த சாகசங்களின் முன் அவர்களது வீரச்செயல் ஈடுபடவில்லை. இறுதியில், ராஜாவே வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அவரை அழைத்த வீரர்கள், தங்கள் கையாலேயே அவருக்கு கிரீடத்தை சூட்டினர்.
இதுபோலத்தான் இயேசுகிறிஸ்துவும்! ராஜாவாக இருந்த பிலிப் அகஸ்டின் தன் பதவியைத் துறந்துவிட்டு மீண்டும் போரிட்டு நிரந்தர ராஜாவாக மாறியது போல், இயேசுகிறிஸ்துவும் நமக்கு ராஜாவாக இருக்கிறார். இம்மையிலும் மறுமையிலும் நித்திய வாழ்விலும் நம் வாழ்வை நடத்த காரணமாக அவர் உள்ளார். அவர் கல்வாரிப்போரில் சாத்தானை எதிர்த்து வெற்றி கண்டார். இதன்மூலம் நம்மையும் வெற்றி பெறச்செய்தார். நம்மை பரிசுத்தமாக்கினார்.
பரலோக ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர்களாகச் செய்தார். நாம் அவருக்கு செலுத்தும் துதியே அவர் விரும்பும் கிரீடமாயிருக்கிறது.