Tamil christian song ,video songs ,message ,and more

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

அனைவருக்கும் மேலானவர்(பைபிள் பொன்மொழிகள்)

* உன்மேல் இன்று நான் விண்ணையும்  மண்ணையும் சான்றாக அழைத்து,  வாழ்வையும் சாவையும் ஆசியையும்

சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தெரிந்து கொள்.

* உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும். நீ நகரிலும் ஆசி  பெற்றிடுவாய்; வயல் வெளியிலும் ஆசி பெற்றிடுவாய்.

* ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம்  பேறு பெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத்  தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர்.

* நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல்
நம்முடைய இன்பத்திற்காக அனைத்தையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

* சகோதர அன்பைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த கடவுளிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டவர்கள்.

* அனைவருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே, அவர் எல்லாருக்கும் மேலானவர்.

பைபிள் தமிழில் MIDP 2.0(மொபைல் பைபிள் )

 ஒரு காலத்தில் சர்ச்சில் உள்ள போதகர் மட்டும் தான் பைபிளை படிக்கமுடியும்

அனால் இப்பொழுது அனைவரின் கையிலுள்ள மொபைலில் படிக்க முடியும்


ஒரே Application னாக பெற DOWNLOAD

இரண்டு Application னாக பெற DOWNLOAD

512 kbps Application னாக பெற DOWNLOAD

128kbps Application னாக பெற DOWNLOAD

இது அனைத்தும் ZIP பைலாக இருப்பதால் டவுன்லோட் செய்து extrat செய்து கொண்டு  தேவையானவற்றில் இன்ஸ்டால்  செய்து மகிழுங்கள் ..........

ஆண்டவர்  உங்களை ஆசிர்வதிப்பாராக ..............

நியாயமாக சம்பாதியுங்கள் (பைபிள் பொன்மொழிகள்)

* முட்டாளின் வழி அவனுடைய கண்களுக்குச் சீராகத்தான் தோன்றும். ஆலோசனைக்குச் செவி கொடுப்பவன் தான் அறிஞனாவான்.

* நேர்மையாளனின் பாதை உதய ஒளி போன்றது. நடுப்பகல் வரை பரிபூரணமாக அதன் பிரகாசம் மென்மேலும் உயர்ந்து கொண்டே போகும்.

* ஒன்றுமில்லாதவன் தன்னை ஏதோவென்று நினைத்துக் கொள்வானாகில் அவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்கிறான்.

* எந்தப் பறவையாயிருந்தாலும் அதன் கண்பார்வையின் முன்னால் வலை விரிப்பது வீணே!

* மனிதனின் இருதயம் அவனுடைய வழியை வகுக்கும். ஆனால், அவனது காலடிகளை வழிநடத்துபவர் கடவுளே.

* சிலரின் பாவச் செயல்கள் விசாரணைக்குப் போகுமுன்பே வெளியாகி விடுகின்றன. மற்றும் சிலருடையதோ விசாரணைக்குப் பிறகு தான் பின் தொடர்கின்றன.

* அநியாயத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானத்தைவிட, நியாயமாய்ச் சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.

* உன் மட்டில் கவனமாயிரு. உன் சகோதரன் உனக்கெதிராக மீறி நடந்தால் கண்டிக்கலாம். ஆனால், மனம் வருந்து வானேயானால் அவனை மன்னித்துவிடு

ஆங்கில பைபிள்

ஆங்கில மொழி பைபிளை எப்படி மொபைலில் டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம் .
              


இந்த லின்க்குக்கு சென்று மொபைல் மூலமாகவோ அல்லது பிசி மூலமாகவோ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்

DOWNLOAD

You may like also

Categories

Popular